"ட்ரெஸ்ஸை தொடைக்கு மேல் தூக்கு.." என்றார் - பிரபல இயக்குனர் மீது நடிகை அர்ச்சனா பகீர் புகார்..!


நடிகை அர்ச்சனா ஹரிஷ். தமிழில் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து பிரபலமானவர். தமிழில் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். நடிகர் சத்யராஜ் நடிப்பில் வெளியான “ஒன்பது ரூபாய் நோட்டு” என்ற படத்தில் தான் அறிமுகமானார். 
 
நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான வாலு படத்தின் கவுன்சிலரின் மனைவியாக ஒரு நகைச்சுவை காட்சியில் மட்டுமே நடித்திருப்பார். மிகவும் கவர்ச்சியான முகத்தை கொண்ட இவர் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இவர் ஹரி மாறன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். 
 
பொதுவாக நடிகைகள் திருமணத்திற்கு பிறகு நடிப்பை நிறுத்தி விடுவார்கள். ஆனால், இவர் தனது திருமணத்திற்கு பிறகு தான் நடிக்கவே வந்தார். சீரியல், சினிமா தாண்டி விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் அளித்த பேட்டி ஒன்று கோடம்பாக்கத்தை கதிகலங்க வைத்துள்ளது. 
 
அவர் கூறியதாவது, ஒரு முன்னணி கதாநாயகன் நடிக்கும் படத்தில் ஒரு சிறிய வேடத்தில் கமிட் ஆனேன். நர்ஸ் வேடம். அதன் சம்மந்தமாக ஒரு காட்சி ஹாஸ்பிடலில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது அசிஸ்டன்ட் டைரக்டர்கள் வெளியே சென்றிருந்த நிலையில், அந்த பெரிய இயக்குனர் என்னை அழைத்தார். 
 
 
அப்போது, “உன்னோட ட்ரெஸ்சை முட்டிக்கு மேலே தூக்கு..." என்று உரிமையாக கேட்டார். கொஞ்சம் ஷாக் ஆகிட்டேன்.. எதுக்கு சார்-ன்னு கேட்டேன்.. உடனே “நாளைக்கு உனக்கு நர்ஸ் காஸ்டியூம் சரியா இருக்குமானு பாக்கணும் இல்ல, அதனால தூக்கி காட்டு” என்று கூறினார். 
 
சரின்னு சொல்லிட்டு நானும் தொடை வரை தூக்கி காட்டினேன். அப்போது, இன்னும் கொஞ்சம் மேலே தூக்கு என்றார். எனக்கு புரிய வில்லை. சுற்றி பார்த்து விட்டு, இன்னும் கொஞ்சம் தூக்கு என்றார்.. எனக்கு அவர் என்னமோ செய்கிறார் என்று புரிந்து விட்டது.


இல்ல சார், நாளைக்கு வந்து காஸ்ட்யூமை போட்டு காட்டுறேன்-ன்னு சொல்லிட்டு ஓடி வந்துவிட்டேன். அடுத்த நாள் முதல் அந்த படப்பிடிப்புக்கு அவர் செல்லவில்லை என்று அர்ச்சனா கூறியுள்ளார்.
 
அந்த டைரக்டர் யாரு.. சமீபத்தில் எந்த படத்தில் இவர் நர்ஸ் வேடத்தில் நடித்திருந்தார் என்று உங்களுக்கு இந்நேரம் புரிந்திருக்கும்.

"ட்ரெஸ்ஸை தொடைக்கு மேல் தூக்கு.." என்றார் - பிரபல இயக்குனர் மீது நடிகை அர்ச்சனா பகீர் புகார்..! "ட்ரெஸ்ஸை தொடைக்கு மேல் தூக்கு.." என்றார் - பிரபல இயக்குனர் மீது நடிகை அர்ச்சனா பகீர் புகார்..! Reviewed by Tamizhakam on August 26, 2021 Rating: 5
Powered by Blogger.