'ஒரு நாள் கூத்து' படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ். இப்படத்தைத் தொடர்ந்து, ஜெயம் ரவியின் 'டிக் டிக் டிக்', உதயநிதி ஸ்டாலினின் 'பொதுவாக என் மனசு தங்கம்', விஜய் ஆண்டனியின் 'திமிரு புடிச்சவன்' ஆகிய படங்களில் நடித்து ரசிகர்கள் மனதை கவர்ந்தவர் நிவேதா பெத்துராஜ்.
இதில், 'டிக் டிக் டிக்' படத்திற்கு மட்டுமே இவரது நடிப்புக்கு ஓரளவு வரவேற்பு கிடைத்தது. போலீஸ் அதிகாரியாக அவர் நடித்த 'திமிரு புடிச்சவன்' படத்திற்கு அப்படி ஒன்றும் வரவேற்பு கிடைக்கவில்லை.
இதனால் தெலுங்கு பக்கம் ஒதுங்கிய நிவேதா பெத்துராஜ் அங்கே தீவிர படவேட்டை நடத்திய நிலையில், சில தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.
தற்போது, வெங்கட்பிரபுவின் 'பார்ட்டி', விஷ்ணு விஷாலின் 'ஜெகஜால கில்லாடி', பிரபுதேவாவின் 'பொன் மாணிக்கவேல்' என வரிசையாக நிவேதா பெத்துராஜின் படங்கள் ரிலீசுக்கு வரிசைக்கட்டி நிற்கின்றன.
அடிக்கடி கிளாமர் போட்டோ ஷூட் நடத்தி ரசிகர்களின் சூட்டை கிளப்பும் நிவேதா பெத்துராஜ் தற்போது ஒன் ஸ்லீவ்லெஸ் உடையில் கும்மென இருக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார்.
இதையும் படிங்க :
இதையும் படிங்க :


