கணவருடன் விவாகரத்து - நடிகை சமந்தா சூசகம் - என்ன சொல்லியுள்ளார் பாருங்க..!

 
தமிழ், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா கடந்த 2017 ஆம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். 
 
இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி நடந்த இவர்களின் திருமணத்திற்குப் பிறகு சமந்தா ஹைதராபாதில் வசித்து வருகிறார். சமந்தா ரூத் பிரபு என்று இருந்த தனது சமூக வலைதள பக்கங்களின் பெயரை நாக சைதன்யாவின் குடும்பப் பெயரான அக்கினேனியை சேர்த்து ‘சமந்தா அக்கினேனி’என்று மாற்றினார். 
 
இந்த நிலையில், சமந்தா அக்கினேனி என்ற பெயரை நீக்கிவிட்டு வெறும் ‘S' என்று தனது இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் சமீபத்தில் மாற்றியது நாக சைதன்யா - சமந்தா ஜோடி விவாகரத்து செய்யவிருக்கிறார்கள் என்ற வதந்தியை பரப்பியது. 
 
அதேசமயம், தற்போது ‘சகுந்தலம்’ படத்தில் நடித்து வருவதால் ‘s’என மாற்றினார் என்றும் சொல்லப்படுகிறது. 
 
இந்நிலையில், தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் "நீங்கள் புகார் செய்யும் தகுதியை இழக்கிறீர்கள், சுற்றி முற்றி பார்த்துவிட்டு நீங்களும் அதே தவறை செய்யும் போது" என கூறியுள்ளார். 
 

இதனை பார்த்த ரசிகர்கள், இதற்கு கண்ணு காது வாய் மூக்கு என பலவகையாக பேசி வருகிறார்கள்.

கணவருடன் விவாகரத்து - நடிகை சமந்தா சூசகம் - என்ன சொல்லியுள்ளார் பாருங்க..! கணவருடன் விவாகரத்து - நடிகை சமந்தா சூசகம் - என்ன சொல்லியுள்ளார் பாருங்க..! Reviewed by Tamizhakam on September 20, 2021 Rating: 5
Powered by Blogger.