"அந்த கேள்வியை கேட்ட நிருபர்.." - புத்தி இருக்கா.. என கடுப்பான நடிகை சமந்தா..!


நடிகை சமந்தா, அவரது காதல் கணவர் நாக சைதன்யா பற்றி கடந்த சில வாரங்களாகவே விவகாரத்து சர்ச்சை எழுந்து வருகிறது. அது பற்றி பல்வேறு விதமான தகவல்கள் வெளியாகி வருகின்றன.
 
இந்நிலையில் நாக சைதன்யா நடித்து வெளிவர உள்ள 'லவ் ஸ்டோரி' படத்தின் டிரைலருக்கு சமந்தா வாழ்த்து கூறி அதற்கு நாக சைதன்யா பதிலளித்தார். அதைத் தொடர்ந்து அவர்களைப் பற்றிய சர்ச்சை செய்திகள், வதந்திகள் தற்போதைக்குக் குறைந்துள்ளன. 
 
இதனிடையே, தனது நண்பர்களுடன் திருப்பதி பெருமாள் கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்துள்ளார் சமந்தா. அவரிடம் ஒரு டிவி நிருபர் ஒருவர் உங்களைப் பற்றி வதந்திகள் வந்து கொண்டிருக்கிறதே எனக் கேட்டதற்கு சமந்தா, கோபத்துடன், 'கோயிலுக்கு வந்து....இதைக் கேக்கறீங்களா, புத்தி இருக்கா” என பதிலளித்துள்ளார். 
 

 
அந்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. மன அமைதி வேண்டி சாமி கும்பிடச் சென்றவரிடம் இப்படி கேள்வி கேட்கலாமா என அந்த நிருபரை பலரும் திட்டி வருகிறார்கள்.

"அந்த கேள்வியை கேட்ட நிருபர்.." - புத்தி இருக்கா.. என கடுப்பான நடிகை சமந்தா..! "அந்த கேள்வியை கேட்ட நிருபர்.." - புத்தி இருக்கா.. என கடுப்பான நடிகை சமந்தா..! Reviewed by Tamizhakam on September 18, 2021 Rating: 5
Powered by Blogger.