பிக்பாஸ் தமிழ் சீசன் 5 இன்று மாலை ஆரம்பிக்க இருக்கும் நிலையில் இந்த சீசனில் மொத்தம் 18 போட்டியாளர்கள் என்று செய்திகள் கசிந்து இருப்பது பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த நான்கு சீசன்களில் பதினைந்து அல்லது பதினாறு போட்டியாளர்கள் முதலில் அறிமுகம் செய்யப்படுவார்கள் என்ற நிலையில் இந்த சீசனில் 18 போட்டியாளர்கள் என்ற தகவல் அனைவரையும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சீசனில் பங்கேற்க போகும் போட்டியாளர்கள் பற்றி பல விதங்களில் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் நேற்று, பிக்பாஸ் துவக்க விழாவிற்கான ஷுட்டிங் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் இறுதி போட்டியாளர்கள் பட்டியல் வெளியாகி வருகிறது.
இதுவரை கன்ஃபார்ம் போட்டியாளர்களாக கானா பாடகியான இசைவாணியும் ஒருவர். இயக்குனர் P.ரஞ்சித்தின் The Casteless Collective குழுவில் பெரிய கறி என்ற பாடலை பாடியதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் இசைவாணி. உலகெங்கிலும் நம்பிக்கையும் ஊக்கமும் அளிக்கக்கூடிய 100 பெண்களின் 2020ம் ஆண்டுக்கான பட்டியலை BBC வெளியிட்டது. இந்தப் பட்டியலில் இசைவாணியும் ஒருவர்.
திரைப்படங்களில் எப்போதும் மிக மோசமாக சித்தரிக்கப்படும் பகுதி வட சென்னை. அந்த பகுதியைச் சேர்ந்தவர் இசைவாணி. ஆண்கள் மட்டுமே கோலோச்சிய கானா மேடைகளை தன் வசப்படுத்தியவர் இசைவாணி. "கலை மக்களுக்கானது, அதில் மக்கள் அரசியல் பேசாமல் வேறு எங்கு பேசுவது?" என கேட்கும் தீட்சண்ய பார்வை கொண்டவர் இசைவாணி.
இந்தியாவின் ஒரே பெண் கானா பாடகி என்ற பெருமை இசைவாணிக்கு உள்ளது. தமிழகத்தில் வடசென்னையைச் சேர்ந்த இவர், ஆண்கள் மட்டும் ஆதிக்கம் செலுத்தி வரும் கானா பாடல் துறையில் பல ஆண்டுகளாக சாதித்து வருகிறார்.
தற்போது, பிக்பாஸ் என்ற மிகப்பெரிய ரியாலிட்டி நிகழ்ச்சியில் இவர் பங்கேற்றிருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.