ஹீரோக்களுடன் சேர்ந்து டூயட் பாடும் கதாநாயகி என்பதைவிட கதையை தாங்கிப்பிடிக்கும் கதாநாயகியாக நடிகவே ஆர்வம் காட்டி வருகிறார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.
அப்படி இல்லையா கதையின் திருப்பத்துக்கு தேவையான முக்கியமான பாத்திரமாகவோ, ரசிகர்களின் மனதில் தாக்கம் ஏற்படும் பாத்திரமாகவோ அது இருக்க வேண்டும் என்பதில் தீர்மானமாக இருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
அதனால் தான் சமீபத்தில் தெலுங்கில் பவன் கல்யாண் ராணா இணைந்து நடிக்கும் படத்தில் நடிப்பதற்கு தேடி வந்த வாய்ப்பை மறுத்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ். காரணம் அந்தப்படத்தில் ராணாவுக்கு ஜோடியாக அவரை நடிக்க அழைத்தனர்.
ஆனால் அந்த பெண் கதாபாத்திரம் திரையில் சில காட்சிகள் மட்டுமே வருவதுடன் கதையில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்துவதாகவும் இல்லை. அதனால் தான் அந்தப்படத்தில் நடிக்க மறுத்து விட்டாராம் ஐஸ்வர்யா ராஜேஷ்.
அதேசமயம் வேர்ல்டு பேமஸ் லவ்வர் மற்றும் டக் ஜெகதீஷ் ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் இனி அதுபோன்ற கதாபாத்திரங்களிலும் நடிப்பதில்லை எனவும் கதையின் நாயகியாக மட்டுமே நடிப்பது என்றும் முடிவெடுத்துள்ளாராம் ஐஸ்வர்யா ராஜேஷ்.
அவ்வப்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை அப்லோடி வரும் இவர் தற்போது கருப்பு நிற கவர்ச்சியில் தங்கம் போல மின்னும் தன்னுடைய சில புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்துள்ளார் அம்மணி.
இதனை பார்த்த ரசிகர்கள், அம்மணியின் அழகை வர்ணித்து உருகி வருகிறார்கள்.
Tags
Aishwarya Rajesh