நீச்சல் உடையில் "கண்ணனே கண்ணே" சீரியல் நடிகை..! - தீயாய் பரவும் புகைப்படங்கள்..!

 
கண்ணான கண்ணே தொடரில், தன் அப்பாவின் அரவணைப்பிற்காக ஏங்கும் அப்பாவி பெண்ணான மீரா கதாபாத்திரத்தில் நடித்து, குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பலரின் அன்பைப் பெற்றிருக்கும் நிமிஷ்கா, உண்மையில் படுசுட்டி பெண்.
 
வெள்ளித்திரையில் உள்ள நடிகர், நடிகைகளுக்கு மட்டுமே முன்னொரு காலத்தில் ரசிகர்கள் இருந்தனர். ஆனால் தற்போதைய கால கட்டத்தில் சினிமா நடிகர்களை விட அதிக புகழை சம்பாதிக்கும் சின்னத்திரை நடிகர், நடிகைகளும் உள்ளனர். 
 
அதிக புகழ் மற்றும் ரசிகர்கள் உடையவர்களுக்கு என்று தனியாக பல ஆர்மிகள் உள்ளது. சமூக வலைத்தளங்களில் இவர்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் கவனிக்கப்பட்டு வருகிறது.இதைபோல் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்ற சமீபத்திய நடிகைகளில் ஒருவர் தான் நிமிஷிகா. இவர் சன்டிவியில் கண்ணான கண்ணே சீரியலில் மீரா என்ற வேடத்தில் நடித்து வருகிறார். 
 
கதாநாயன் யுவா மற்றும் மீரா கதாபாத்திரத்திற்கு இன்று தனியாக ரசிகர் பட்டாளம் உள்ளது. குறிப்பாக இவர்களின் திருமண எபிசோட்கள் அதிக வரவேற்பை பெற்ற காரணத்தால் இந்த சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தையும் பிடித்தது. மேலும், மீராவின் அப்பாவாக ப்ரிதிவி நடித்து வருகிறார். 
 
அப்பா மகளின் பாச போராட்டத்தை மையமான வைத்து இந்த கதையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. நிமிஷிகா ஆந்திரா மாநிலம் குண்டூரை சேர்ந்தவர், படிப்பிற்காக தமிழகத்தின் கோயம்புத்தூர் வந்துள்ளார். ஆரம்பத்தில் அங்குள்ள லோக்கல் சேனல் ஒன்றில் தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். 
 
 
அங்கிருந்து விஜய் டிவியின் கடைக்குட்டி சிங்கம் தொடரில் வில்லி கதாபாத்திரத்திற்கு நடிக்க தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும், மலையாளத்தில் அனுராகம் என்ற சீரியலில் நடித்து வந்த போது கொரோனா தொற்று காரணமாக இந்த இரண்டு சீரியல்களும் நிறுத்தப்பட்டுள்ளது.
 
 
இந்நிலையில் தான் கண்ணான கண்ணே வாய்ப்பு அவரை தேடி வந்துள்ளது. இந்த தொடரில் தனது அசாத்திய நடிப்பு திறனை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் தனக்கென தனி இடத்தை பெற்றுள்ளார். ஆரம்பத்தில் குடும்பத்தினரும் இவருக்கு ஆதரவு அளிக்காமல் இருந்துள்ளனர். பின்னர், இவரின் திறமையை உணர்ந்து தற்போது பாராட்டி வருகின்றனர். 
 
 
இவர், தொடக்கத்தில் பல இன்னல்கள் மற்றும் போராட்டங்களை கடந்து இந்த நிலையை எட்டியுள்ளார். மேலும் தனது கனவிற்காக அயராது உழைக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 


இணையத்திலும் ஆக்டிவாக இருக்கும் இவர் நீச்சல் உடையில் தனது தோழியுடன் இருக்கும் சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள், அம்மணியின் அழகை இன்ச் பை இஞ்சாக வர்ணித்து வருகின்றனர்.

Post a Comment

Previous Post Next Post
--Advertisement--