"செம்ம ஹாட்..." - முட்டிக்கு மேல் ஏறிய கவர்ச்சி உடையில் இணையத்தை சூடேற்றிய ரச்சிதா ராம்..!

 
நயன்தாரா நடிப்பில் தமிழில் வெளியாகி பெரிதும் வெற்றிப்பெற்ற கோலமாவு கோகிலா படத்தின் கன்னட ரீமேக்கில் நடிகை ரச்சிதா ராம் நடிக்க இருக்கிறார்.
 
நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் கதையின் நாயகியாக நயன்தாரா நடித்த படம் "கோலமாவு கோகிலா". இத்திரைப்படம் தமிழில் மாபெரும் வெற்றிப் பெற்றது. 
 
இந்தப் படத்தில் நயன்தாராவுடன் யோகி பாபு, சரண்யா, ஜாக்லின் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தனர். "டார்க் ஹியூமர்" பாணியில் எடுக்கப்பட்ட இந்தப் படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. நயன்தாராவின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது.
 
இப்போது இந்தப் படம் கன்னட மொழியில் ரீமேக் செய்யப்பட இருக்கிறது. இதில் நயன்தாராவின் கதாப்பாத்திரத்தில் நடிகை ரச்சிதா ராம் நடிக்கவிருக்கிறார். மேலும் கோலமாவு கோகிலாவின் கன்னட ரீமேக்கை மயூரா ராகவேந்திரா என்பவர் இயக்கவுள்ளார். 
 
 
தமிழில் ஏற்கெனவே கோலமாவு கோகிலா வெற்றிப் பெற்ற திரைப்படம் என்பதால் கன்னட ரசிகர்கள் இந்தப் படத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். 
 

இந்நிலையில், முட்டிக்கு மேல் ஏறிய கவர்ச்சி உடையில் படு சூடான போஸ் கொடுத்து சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.