இலங்கையில் நடைபெற்ற தமிழ் இனப்படுகொலையை புகழ்ந்தும், சிங்கள ராணுவ வீரர்களை புகழ்ந்தும், தமிழர்களை மோசமானவர்கள் எனவும் பாடிய சிங்கள பாடகி யோஹானி டி சில்வாவை தமிழ் சினிமாவில் பாட வைப்பதா..? என்று கேள்வி எழுப்பி உலக தமிழர்களும் தமிழ்த்தேசிய ஆதரவாலர்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
உலக அளவில் பிரபலமான ‘மணிகே மகே ஹிதே’ என்ற சிங்கள மொழி பாடலின் மூலம் பிரபலமானவர் பாடகி யோஹானி டி சில்வா, இவர் தமிழ் சினிமாவில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில், மதன் கார்க்கி வரியில் பாடிய பாடலுக்கு இலங்கைத் தமிழர்கள் மற்றும் தமிழ்த் தேசிய ஆதரவாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
யோஹானி டி சில்வா தமிழ் சினிமாவில் பாடுவதற்கு எதிர்ப்பு வலுப்பது ஏன்? யார் இந்த யோஹாணி டி சில்வா என்பவர் பிரபலமான ‘மணிகே மகே ஹிதே’ என்ற சிங்கள மொழிப் பாடலைப் பாடியதன் மூலம் உலக அளவில் அறியப்பட்டவர் பாடகி யோஹாணி டி சில்வா. பாப் இசை பாடகியான யோஹானி, இலங்கை அரசின் சிங்கள இராணுவ தளபதிகளில் ஒருவரான பிரசன்ன டி சில்வாவின் மகள் ஆவார்.
2009ம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற இறுதி யுத்தத்தில் இலங்கை ராணுவம் தமிழர்களை படுகொலை செய்தது. இலங்கையில் நடைபெற்ற இறுதி யுத்தத்தில் நடந்த தமிழர்கள் படுகொலையில் முக்கிய பங்கு வகித்த இராணுவ தளபதி பிரசன்ன டி சில்வா மகள் யோஹானி டி சில்வா தமிழ் சினிமாவில் பாட வைக்கலாமா என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளதை தொடர்ந்து, இந்த பாடலை அப்படியே ட்ராப் பண்ணிடுங்க.. ஹாரிஸ் ஜெயராஜ் சார்.. மரியாதை கெட்டு போயிடும் சார்.. வேறு எந்த தமிழ் படத்திலும் இந்த பெண் பாடக்கூடாது.. என்பதில் ஆரம்பித்து அடுக்கடுக்காக தங்களது கண்டனங்களை இணையத்தில் பொதுமக்கள் பதிவு செய்து வருகிறார்கள்.
"என் அப்பாதான் விடுதலைப்புலிகளையும் எங்களை எதிர்த்த தமிழர்களையும் கொன்று எங்கள் நாட்டை விடுதலை செய்தவர்"
— Cholan mu Kalanchiyam (மு.களஞ்சியம்) (@MuKalanchiyam) October 11, 2021
என்று பெருமைப்படும் இனப்படுகொலையாளி ராணுவ தளபதி பிரசன்ன டீ சில்வாவின் மகளை பாட்டு பாட வைத்திருக்கிறார்கள் ஹாரிஸ் ஜெயராஜும் , மதன் கார்க்கியும்
தூ…தமிழர்களா நீங்கள்? pic.twitter.com/veRZfWJezX
பாடலை பாடலாக கேளுங்க ப்ரோ.. என்று சொல்லும் கூட்டத்திற்கு ஒரே ஒரு விஷயத்தை கூறிக்கொள்கிறோம். ஐ.நா சபையில் இதுநாள் வரை ஈழத்தமிழர் இனப்படுகொலைக்கு எதிராக குரல்கள் ஒலித்து வருகின்றன.
அந்த சூழலில், இலங்கை சார்பில் பேசுபவர்,.. இவர்கள் சொல்வது உண்மை என்றால் இராணுவ தளபதி பிரசன்ன டி சில்வா-வின் மகள்.. பாடகி யோஹாணியை தமிழில் பாட அனுமதிப்பார்களா..? யோஹானிக்கு தமிழ் நாட்டில் பெரிய ரசிகர் வட்டம் உள்ளது. தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டார்கள் என்று இவர்கள் பொய் சொல்கிறார்கள் என்று கூறினால் தமிழ் மக்கள் சார்பாக பேசுபவர்கள் முகத்தை எங்கே வைப்பார்கள் என்று யோசித்து பாருங்கள்.