"பூ.. விரிஞ்சாச்சு... தேன்.. விழுந்தாச்சு..." - கவர்ச்சி உடையில் சூட்டை கிளப்பி.. இளசுகளை அலற விட்ட மேகா ஆகாஷ்..!

 
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவான பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மேகா ஆகாஷ். தமிழ் தெலுங்கு என கலக்கிக் கொண்டிருந்த இவர் ராதே படத்தின் மூலம் ஹிந்தி பட உலகிலும் கால் தடத்தை பதித்தார். 
 
விஜய் சேதுபதியுடன் இணைந்து யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற படத்தில் நடித்துள்ள மேகா ஆகாஷ் இப்பொழுது  வித்தியாசமான கவர்ச்சி உடையில் மனதை வருடும் அழகான புகைப்படங்களை வெளியிட்டு வைரலாகி உள்ளார்.
 
தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக ஜொலித்துக் கொண்டிருக்கும் மேகா ஆகாஷ் தெலுங்கில் பிரபலமான நடிகையாக உள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவான பேட்ட படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் இப்பொழுது பல படங்களில் ஒப்பந்தமாகி உள்ளார்.
 
 
பேட்ட வெற்றியை தொடர்ந்து வந்தா ராஜாவா தான் வருவேன், பூமராங், என்னை நோக்கி பாயும் தோட்டா ஒரு பக்க கதை, குட்டி ஸ்டோரி ஆகிய படங்கள் இவருக்கு அடுத்தடுத்து வெளியானது. இந்நிலையில் பிரபுதேவா சல்மான்கான் மீண்டும் கூட்டணி அமைத்த ராதே படத்தில் நடித்து இந்தி பட உலகிலும் கால் தடத்தைப் பதித்தார்.
 
சில நடிகைகள் மீது நம்மை அறியாமல் ஒரு இனம் புரியாத ஈர்ப்பு ஏற்படும் அந்த அளவுக்கு அழகாக இருப்பார்கள். இந்நிலையில் இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், தனுஷுக்கு ஜோடியாக எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் நடிகை மேகா ஆகாஷ் ஹீரோயினாக அறிமுகமானார். 
 
தன்னையும் அழகாக காண்பித்த சந்தோஷத்தில் மேகா ஆகாஷ் இருந்தார்.இதை தொடர்ந்து வெளியான பூமராங் படத்தில் அதர்வாவின் நடிப்பு அனைவர் மத்தியிலும் பாராட்டை பெற்றாலும் படத்திற்கு கலவையான விமர்சனங்களே கிடைத்தது. 
 
அடுத்ததாக மேகா ஆகாஷ் நம்பி இருந்த, ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ திரைப்படம் ரிலீஸ் ஆகி மண்ணை கவ்வியது. தொடர்ந்து, இவர் நடித்த படங்களுக்கு பெரிதாக வரவேற்பு இல்லாததால் இயக்குனர் பின்வாங்க துவங்கி விட்டார்களாம்.
 
தற்போது விட்ட வாய்ப்புகளைப் பிடிக்க கவர்ச்சியாக புகைப்படங்களை வெளியிடுவார் என்று பார்த்தால், நிலைமை தலை கீழ். இப்போது விரிந்த பூ போல மேலாடையை அணிந்து மிரள வைக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.


இதனை பார்த்த ரசிகர்கள், "பூ விரிஞ்சாச்சு.. தேன் விழுந்தாச்சு.." என முகவரி பட பாடலை கொண்டு அம்மணியின் அழகை வர்ணித்து வருகின்றனர்.