உற்சாகத்தின் மறு உருவமாக திகழும் சீரியல் நடிகை ஸ்ரீதேவி தற்போது தெருவில் இறங்கி குத்தாட்டம் போட்டுக் கலக்கியுள்ளார். இவரது ஆட்டத்தை பார்த்த ரசிகர்கள் அடடே சூப்பரப்பு என்று கை தட்டி வாய் பிளந்து ரசித்து மகிழ்கிறார்கள்.
ரொம்ப வருடங்கள் காத்திருந்து கிடைத்த குழந்தை பேறு சந்தோஷத்தை ஒவ்வொரு நாளும் என்ஜாய் பண்ணி அனுபவித்துக் கொண்டிருக்கிறார் ஸ்ரீதேவி அசோக்.
ஸ்ரீதேவி அசோக் நடிக்காத சேனல்களோ இல்லை என்று சொல்லும் அளவிற்கு அனைத்து சேனல்களிலும் கலக்கி கொண்டிருக்கும் இவரது முகத்தை பலபேருக்கு பரிச்சயமாக தெரிந்திருந்தாலும் இவர் ராஜா ராணி சீரியலில் அர்ச்சனா கேரக்டரில் நடிக்கவில்லை வாழ்ந்து இருக்கிறார் .
இந்த சீரியலின் மூலம் பல்வேறு ரசிகர்கள் இவரை கழுவி ஊற்றினாலும் இவரை தெரியாதவர்கள் இல்லை என சொல்லும் அளவிற்கு ரொம்பவே பாப்புலர் ஆகிவிட்டார் .
பல நடிகைகள் இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி போட்டோக்களை அப்லோட் பண்ணி ரசிகர்களை கவர்ந்து இழுத்துக் கொண்டிருக்கும் போது இவர் விதவிதமாக சேலைகளிலும் ஹோம்லியான அனைவரும் ரசிக்கும் வகையில் போட்டோக்களும் வீடியோக்களும் வெளியிடுவது இவரது ரசிகர்களுக்கு இவர் மீது நல்ல மதிப்பை ஏற்படுத்துகிறது.
சீரியல்களில் இவர் வில்லியாக நடித்திருந்தாலும் இன்ஸ்டாகிராமில் ரசிகர்களின் மனம் கவர்ந்தவர் இருந்து வருகிறார். அந்த வகையில், தற்போது ரகிட ரகிட பாடலுக்கு நடிகை ஜெயஸ்ரீ-யின் மகளுடன் தெருவில் இறங்கி குத்தாட்டம் போடும் அவரது வீடியோ ரசிகர்களின் கவன்த்தை ஈர்த்துள்ளது.
Tags
Sridevi Ashok