"ப்ப்பா... செம்ம ஹாட்டா இருக்கீங்க.. டெலிட் பண்ணாதிங்க.." - திரிஷா வெளியிட்ட புகைப்படம் - கதறும் ரசிகர்கள்...!

 
தமிழ் சினிமாவில் கடந்த 20 ஆண்டுகளாக முன்னணி நடிகையாக திகழ்பவர் நடிகை திரிஷா. கடந்த 1999ஆம் ஆண்டு மிஸ் சென்னையாக தேர்வு செய்யப்பட்ட திரிஷா, அதனை தொடர்ந்து . சிம்ரன், பிரசாந்த் நடிப்பில் வெளியான ஜோடி படத்தில் சிம்ரனின் தோழியாக திரையுலக பயணத்தை தொடங்கினார். 
 
அதன்பின்னர் சூர்யாவின் மௌனம் பேசியதே படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.ரஜினிக்காந்த், கமல்ஹாசன், அஜித், விஜய், விக்ரம், தனுஷ், விஜய் சேதுபதி என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் பலருக்கும் ஜோடியாக நடித்துள்ளார் திரிஷா. 
 
கடைசியாக திரிஷா நடிப்பில் ஓடிடியில் வெளியான பரமபத விளையாட்டு படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. தற்போது மணிரத்னத்தின் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார். மேலும் இவர் கைவசம் கர்ஜனை, ராங்கி, சதுரங்க வேட்டை 2 உள்ளிட்ட படங்கள் உள்ளன.
 
 
இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரக அரசு நடிகை த்ரிஷாவுக்கு மதிப்புமிக்க கோல்டன் விசா வழங்கியுள்ளதுது. தமிழ் சினிமாவில் இந்த பெருமையை பெறும் முதல் பிரபலம் என்ற சிறப்பை பெற்றுள்ளார் திரிஷா. 
 
 
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில், "ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கொடுக்கும் கோல்டன் விசாவைப் பெற்ற முதல் தமிழ் நடிகை என்ற பெருமையும் பாக்கியமும் எனக்கு கிடைத்துள்ளது... நன்றி" என பதிவிட்டுள்ளார். 


மேலும், மஞ்சள் நிற உடையில் கேஷுவலாக சில புகைப்படங்களை வெளியிட்டு கொஞ்ச நேரம் கழிச்சு டெலிட் பண்ணாலும் பண்ணிருவேன் என கூறியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், டெலிட் பண்ணாதிங்க... செம்ம ஹாட்டா இருக்கீங்க என்று உருகி வருகிறார்கள்.
"ப்ப்பா... செம்ம ஹாட்டா இருக்கீங்க.. டெலிட் பண்ணாதிங்க.." - திரிஷா வெளியிட்ட புகைப்படம் - கதறும் ரசிகர்கள்...! "ப்ப்பா... செம்ம ஹாட்டா இருக்கீங்க.. டெலிட் பண்ணாதிங்க.." - திரிஷா வெளியிட்ட புகைப்படம்  - கதறும் ரசிகர்கள்...! Reviewed by Tamizhakam on November 08, 2021 Rating: 5
Powered by Blogger.