பிரபல நடிகை அனுசுயா பரத்வாஜ், வெப் சீரிஸ் ஒன்றில் மேலாடை இன்றி நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளதாக வெளியான தகவல், திரையுலகிலும் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புஷ்பா படத்தில் வில்லியாக மிரட்டிய அனுசுயா, இந்த திடீர் முடிவு எடுத்தது ஏன் என பலரும் ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
தொகுப்பாளினியாக தனது கரியரை தொடங்கிய அனுசுயா பரத்வாஜ், திறமையாலும் முயற்சியாலும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக உயர்ந்தவர்.
சமீபத்தில் புஷ்பா திரைப்படம் மூலம் இந்திய அளவில் பிரபலமானார். தற்போது வெப் சீரிஸ் வாய்ப்புகளும் அவரை தேடி வர தொடங்கியுள்ளன. இந்நிலையில், அனுசுயா பரத்வாஜ் புதிய வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
அதில் அவர் படுக்கையறை காட்சிகளில் மேலாடை இல்லாமல் நடிக்க சம்மதம் தெரிவித்து இருப்பதாக செய்திகள் கசிந்துள்ளன.
இதுவரை கிளாமர் ரோல்களில் நடிக்க தயக்கம் காட்டி வந்த அனுசுயா, திடீரென இப்படியொரு துணிச்சலான முடிவு எடுத்திருப்பது பலரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது.
அவர் இதற்கு முன்பு இதுபோன்ற காட்சிகளில் நடித்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அனுசுயாவின் இந்த புதிய முயற்சிக்கு ரசிகர்கள் மத்தியில் ஆதரவும் எதிர்ப்பும் கலந்த விமர்சனங்கள் எழுந்துள்ளன.
சிலர் இது அவரது துணிச்சலான முடிவு என்றும், சிலர் இது தேவையில்லாத ரிஸ்க் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த செய்தி உண்மையா அல்லது வெறும் வதந்தியா என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. உண்மையை தெரிந்து கொள்ள பொறுத்திருந்து பார்ப்போம்.