அடுத்தடுத்து லீக் ஆகும் சீரியல் நடிகைகளின் அந்தரங்க காட்சிகள்..! கண்ணான கண்ணே நிமேஷிகா பகீர் தகவல்..!


கடந்த இரண்டு நாட்களாக தமிழ் சீரியல் நடிகைகளின் அந்தரங்க வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. 

ஆடிஷன் என்ற பெயரில் பட வாய்ப்பு தருவதாக கூறி, வீடியோ காலில் அந்தரங்கத்தை வெளிப்படுத்தவும், செய்யக்கூடாத செயல்களை செய்யும்படியும் ஒரு நபர் கேட்க, அதற்கு அந்த நடிகைகள் உடன்படும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

"சிறகடிக்க ஆசை" சீரியல் நடிகையை தொடர்ந்து, மேலும் ஒரு சீரியல் நடிகையின் வீடியோ வெளியாகி இருப்பது சின்னத்திரை வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த வீடியோக்களை யார் வெளியிடுவது, எப்படி அடுத்தடுத்து நடிகைகளின் வீடியோக்கள் வெளியாகின்றன என்ற கேள்விகள் சமூக வலைதளங்களில் விவாத பொருளாகியுள்ளன. 

இந்நிலையில், "கண்ணான கண்ணே" சீரியலில் ஹீரோயினாக நடித்த நடிகை நிமோஷிகா, பட வாய்ப்புக்காக படப்பிடிப்பு தளங்களில் நடக்கக்கூடிய அக்கிரமங்கள் குறித்து பேசிய பழைய பேட்டி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அதில் அவர் கூறியிருப்பதாவது, “மீடியாவில் இருப்பதால் இது போன்ற பாலியல் ரீதியான தொந்தரவுகள் பெரிதளவு வெளியே தெரிகிறது. 

ஆனால், இது எல்லா இடங்களிலும் இது போன்ற சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. சமூகத்தில் நடக்கும் இந்த தவறுகளுக்கு பெண்கள் அணியும் உடைகள் காரணமாக முன்வைக்கப்படுகிறன. ஆனால் அது உண்மை அல்ல. தொலைக்காட்சி தொடர்களிலும் இதுபோன்ற பாலியல் ரீதியான தொந்தரவுகள் இருக்கின்றன. 

சீரியலில் பெண்களை நடிக்க தேர்வு செய்கிறவர்கள், நீ என்னுடன் படுக்கையை பகிர்ந்தால், உனக்கு அடுத்த சீரியலில் நான் வாய்ப்பு தருகிறேன் என்று சொல்லி அவர்களை அவர்களின் இச்சைக்கு பயன்படுத்துவார்கள். 

அதை நான் கண் முன்னே பார்த்திருக்கிறேன். ஆனால் இந்த விஷயமெல்லாம் அந்த சீரியலின் இயக்குனருக்கு தெரியவே தெரியாது. ஆனால், அவர்களின் உதவியாளர்கள் இது போன்ற நடவடிக்கைகளில் சத்தமில்லாமல் ஈடுபட்டுக்கொண்டிருப்பார்கள். 

ஒருமுறை ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தது. அப்போது அங்கு வந்த உதவியாளர் ஒருவர் அருகில் இருந்த அறைக்குள் சென்று கதவை லாக் செய்து கொண்டார். இது குறித்து இன்னொரு உதவியாளரிடம் கேட்ட போது.. அக்கா சும்மா.. என்று சொல்லி அவர் நழுவி கொண்டார். 

ஆனால், அந்த அறைக்குள் ஒரு பெண் இருப்பது எனக்கு தெரிந்து விட்டது. அந்தப் பெண் வெளியே வரும் பொழுது, என்னை பார்த்து சிரித்துக் கொண்டு சென்றாள். இது போன்ற சம்பவங்களும் நடக்கின்றன. சில இடங்களில் பெண்கள் அதனை தவிர்க்கவும் செய்கிறார்கள்.” என்று நிமோஷிகா அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார். 

நிமோஷிகாவின் இந்த பழைய பேட்டி தற்போது வெளியாகி இருக்கும் வீடியோக்களின் பின்னணியில் பார்க்கும்போது, சின்னத்திரை உலகில் வாய்ப்புக்காக நடிகைகள் எந்த அளவிற்கு தள்ளப்படுகிறார்கள் என்பதை உணர்த்துகிறது. ஆடிஷன் என்ற பெயரில் நடக்கும் இந்த அத்துமீறல்கள் தொடர் கதையாகி வருவது வேதனை அளிக்கிறது.

Post a Comment

Previous Post Next Post