தமிழ் சினிமாவில் நடிகர் ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி இடையேயான விவாகரத்து விவகாரம் சமூக ஊடகங்களில் தொடர்ந்து பேசுபொருளாக உள்ளது.
சமீபத்தில், பாடகி சுசித்ரா பேட்டி ஒன்றில், தனுஷ்-ஆர்த்தி இடையே கள்ளத்தொடர்பு இருந்தது. அதை ஆதரங்களுடன் தெரிந்து கொண்ட பிறகு தான் ஜெயம் ரவி ஆர்த்தியை பிரிந்தார் என்று பேசி பரபரப்பை கிளப்பியுள்ளார்.
மறுபக்கம், ஜெயம் ரவியின் தற்போதைய நிலைக்கு காரணமாக பாடகி கெனிஷா பிரான்சிஸ் சுட்டிக்காட்டப்படுகிறார்.
இணையவாசிகள், “கெனிஷாவே ஜெயம் ரவியின் குடும்பத்தை கெடுத்தவர்” என கடுமையாக விமர்சித்து, அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புயலை கிளப்பி வருகின்றனர்.
ஆனால், இந்த விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் விதமாக, கெனிஷா தனது இன்ஸ்டாகிராமில் ஒரு உணர்வுப்பூர்வமான பதிவைப் பகிர்ந்து, அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார். கெனிஷாவின் பதிவில், “பெரிய சத்தங்களுக்கு மத்தியில் அமைதியான நம்பிக்கை காத்திருக்கிறது.
இசையை பிடித்துக் கொண்டு ந நிற்கிறேன். காயங்களை பாடங்களாய் ஏற்கிறேன். ஆழமான சோகத்தின் நடுவே மனம் பாடுகிறது. நாளைய விடியல் புதிய தொடக்கத்தை நோக்கி பயணிக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு இணையத்தில் வைரலாகி, ரசிகர்களிடையே பல்வேறு விவாதங்களை தூண்டியுள்ளது.
இந்த பதிவு, கெனிஷாவின் மனநிலையையும், விமர்சனங்களை அவர் எவ்வாறு எதிர்கொள்கிறார் என்பதையும் வெளிப்படுத்துகிறது. ஜெயம் ரவியுடனான தொடர்பு குறித்த வதந்திகளுக்கு அவர் முன்பு மறுப்பு தெரிவித்திருந்தாலும், இந்த பதிவு அவரது உணர்வுகளை மறைமுகமாக பிரதிபலிப்பதாக ரசிகர்கள் கருதுகின்றனர்.
சிலர், கெனிஷாவின் பதிவை தைரியமான பதிலாக பாராட்ட, மற்றவர்கள் இதை விவகாரத்தை மேலும் சிக்கலாக்கும் முயற்சியாக விமர்சிக்கின்றனர். ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி 2009 முதல் திருமணம் செய்து, 18 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்தவர்கள்.
2024 செப்டம்பரில் அவர்கள் விவாகரத்து அறிவித்ததைத் தொடர்ந்து, கெனிஷாவின் பெயர் இந்த விவகாரத்தில் இழுக்கப்பட்டது. இந்த பதிவு, கெனிஷாவின் மன உறுதியையும், எதிர்மறை கருத்துகளுக்கு மத்தியில் தன்னை தற்காத்துக்கொள்ளும் முயற்சியையும் வெளிப்படுத்துகிறது.இந்த விவகாரம், பிரபலங்களின் தனிப்பட்ட வாழ்க்கை பொதுவெளியில் விவாதிக்கப்படுவதால் ஏற்படும் சவால்களை மீண்டும் எடுத்துக்காட்டுகிறது.