“போதும் விடுங்க.. வலியில் துடித்த காதலி..” நாய் போல நினைத்து அசிங்கம்.. உடம்பை பார்த்து அலறிய மருத்துவர்கள்.. பகீர் காட்சி..

புதுச்சேரி திலகர் நகர் அதிர்ச்சி சம்பவம்: கள்ளக்காதல் மோதலில் இளம்பெண் உயிரிழப்பு புதுச்சேரி திலகர் நகரைச் சேர்ந்த 25 வயது ராஜமாதங்கி, தன் கணவர் சரவணன் மற்றும் சிறு குழந்தையுடன் வாழ்ந்து வந்தார்.

சரவணன் சென்னையில் திருமண புகைப்படக் கலைஞராகப் பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு மூன்று மாத கர்ப்பிணியாக இருந்த ராஜமாதங்கி, கடந்த 1ஆம் தேதி தலையில் காயத்துடன் கதிர்காமம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவர்கள் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருப்பதாகவும், மூன்று மாத கர்ப்பமாக இருப்பதாகவும் தெரிவித்து, மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுமாறு அறிவுறுத்தினர். ஆனால் ராஜமாதங்கி தனக்கு உடல்நிலை சரியாக இருப்பதாகக் கூறி, தலை காயத்திற்கு மட்டும் சிகிச்சை பெற்றுவிட்டு, தன்னை அழைத்து வந்த நபருடன் வீட்டுக்குச் சென்றுவிட்டார்.

வீட்டுக்கு சென்ற சிறிது நேரத்தில் அவர் மயங்கி விழுந்தார். உடனடியாக அவரது தாயார் மற்றும் அக்கம்பக்கத்தார் உதவியுடன் மீண்டும் கதிர்காமம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அப்போது மருத்துவர்கள் அவரது உடல் முழுவதும் காயங்கள் இருப்பதை கண்டறிந்தனர். இது குறித்து வடக்கு போக்குவரத்து காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீசார் விபத்து என்று முதலில் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்தனர். ராஜமாதங்கி முன்பு தட்டாஞ்சாவடி அருகே விபத்தில் சிக்கியதாகக் கூறியிருந்ததை ஆராய்ந்த போது, அப்பகுதி சிசிடிவி காட்சிகளில் விபத்துக்கான எந்த அறிகுறியும் இல்லை என்பது தெரியவந்தது.

மேலும் விசாரணையில், சின்ன கோட்டகுப்பத்தைச் சேர்ந்த சுரேந்திரன் (29) என்பவர் ராஜமாதங்கியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றது உறுதியானது. அவரை விசாரித்த போது, விபத்து இல்லை என்பதும், சுரேந்திரன் ராஜமாதங்கியை நாய் கட்டும் பெல்ட்டால் அடித்ததும் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து வழக்கு தன்வந்திரி நகர் போலீசாருக்கு மாற்றப்பட்டது. 

கள்ளக்காதல் பின்னணி 

ராஜமாதங்கி பள்ளி படிக்கும் காலத்தில், அவரது வீட்டுக்கு பிளம்பர் வேலைக்கு வந்த சுரேந்திரனுடன் பழக்கம் ஏற்பட்டு, பின்னர் காதலாக மாறியது.

இதை ஏற்காத பெற்றோர், அவரை சரவணனுக்கு திருமணம் செய்து வைத்தனர். தம்பதிகள் சென்னையில் வசித்து வந்தனர். சுரேந்திரன் சில காலம் சிங்கப்பூரில் வெல்டிங் வேலைக்குச் சென்றிருந்தார்.

சில மாதங்களுக்கு முன்பு திரும்பிய அவர், மீண்டும் ராஜமாதங்கியைத் தொடர்பு கொண்டார். இதனால் அவர்களிடையே கள்ளக்காதல் உருவானது. சுரேந்திரன் அடிக்கடி சென்னை சென்று விடுதிகளில் அறை எடுத்து ராஜமாதங்கியுடன் நேரம் செலவிட்டு வந்தார்.

இதை அறிந்த சரவணன் மனைவியை கண்டித்தார். இதனால் இருவரும் சரவணனை சந்தித்து, தங்கள் உறவைத் தெரிவித்து விவாகரத்து செய்யுமாறு கோரினர்.

மனமுடைந்த சரவணன், மனைவியை திலகர் நகர் வீட்டில் விட்டுவிட்டு சென்னைக்குச் சென்றார். இதற்குப் பிறகு சுரேந்திரன் வீட்டுக்கு ராஜமாதங்கி அடிக்கடி சென்று வந்தார். போன் எடுக்காத நேரங்களில் அவர் வீட்டுக்குச் சென்று தகராறு செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

கடந்த 2-ஆம் தேதி சுரேந்திரன் போனை எடுக்காததால் ஆட்டோவில் சென்று தகராறு செய்தார். இதனால் ஆத்திரமடைந்த சுரேந்திரன், நாய் கட்டும் கயிற்றால் அவரை அடித்தார். வலியில் ஓடிய ராஜமாதங்கி கால்வாயில் விழுந்து தலையில் அடிபட்டார்.

சுரேந்திரன் அவரை பைக்கில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் போது, விபத்து என்று சொல்லுமாறு கூறினார். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி ராஜமாதங்கி உயிரிழந்தார். இந்த சம்பவம் புதுச்சேரி மற்றும் விழுப்புரம் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தன்வந்திரி நகர் போலீசார் இந்த வழக்கை கொலை எனப் பதிவு செய்து சுரேந்திரனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். சம்பவம் விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பம் பகுதியில் நடந்துள்ளதால், வழக்கை அங்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

English Summary : In Puducherry’s Tilagar Nagar, 25-year-old pregnant woman Rajamathangi passed away after suffering injuries. She was taken to the hospital by 29-year-old Surendran from nearby area. Police inquiry found that a personal quarrel led to the incident. The matter is now under investigation and Surendran has been taken into custody. This event has caused concern in the locality.