ஹோட்டலில் நடிகைகள் செய்த கொடுமை.. கதறிய பப்லூ.. ராதிகா செய்த தவறு.. அதிரவைக்கும் தகவல்!

ஹோட்டலில் நடிகைகள் செய்த கொடுமை.. கதறிய பப்லூ.. ராதிகா செய்த தவறு.. அதிரவைக்கும் தகவல்!

தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்னர் குணச்சித்திர மற்றும் வில்லன் கதாபாத்திரங்களில் தனது திறமையை வெளிப்படுத்தி வருபவர் நடிகர் பப்லு பிரித்திவிராஜ். 

பல மொழி திரைப்படங்களிலும், 90களில் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து புகழ்பெற்ற இவர், குறிப்பாக நடிகை ராதிகா சரத்குமார் தயாரித்து நடித்த தொடர்களில் தனது நடிப்பால் கவனம் ஈர்த்தவர். 

ஆனால், சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், ராதிகாவுடன் இணைந்து பணியாற்றிய அனுபவங்கள் குறித்து பகிர்ந்தவை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

வாணி ராணி சீரியல் அனுபவம்

பப்லு, ராதிகாவின் ‘வாணி ராணி’ தொடரில் நடித்தது தனது கேரியரில் மிகச்சிறந்த நடிப்பு அனுபவங்களில் ஒன்று என்று கூறியுள்ளார். ஆனால், இந்தத் தொடரில் பணியாற்றியபோது, தனது நடிப்பு குறித்து ராதிகாவிடமிருந்து கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டதாகவும் வெளிப்படுத்தியுள்ளார்.

 

ஹோட்டலில் நடிகைகள் செய்த கொடுமை.. கதறிய பப்லூ.. ராதிகா செய்த தவறு.. அதிரவைக்கும் தகவல்!

“நான் ஓவராக நடிக்கிறேன் என்று மேடம் (ராதிகா) திட்டுவார்கள். இதனால், திட்டு வாங்கிவிடுவோமோ என்ற பயத்தில் என்னை நானே கட்டுப்படுத்திக்கொண்டு நடிக்க ஆரம்பித்தேன். 

ஆனால், என்னை ஃப்ரீயாக விட்டிருந்தால் இன்னும் சிறப்பாக நடித்திருப்பேன்,” என்று பப்லு தெரிவித்தார்.மேலும், ராதிகாவின் கண்டிப்பான அணுகுமுறை குறித்து பேசிய அவர், “ராதிகாவைப் பற்றி ஏன் இப்படி பேசுகிறீர்கள் என்று கேட்கிறார்கள். 

ஹோட்டலில் நடிகைகள் செய்த கொடுமை.. கதறிய பப்லூ.. ராதிகா செய்த தவறு.. அதிரவைக்கும் தகவல்!

அவர் என்னை செருப்பால் அடித்தாரா என்று கேலியாக கேட்கிறார்கள். ஆனால், ராதிகாவிடம் இதைப்பற்றி கேட்டால், ‘ஆமாம், நான் பப்லுவை செருப்பால் அடித்தேன், கெட்ட வார்த்தைகளால் திட்டுவேன்’ என்று பெருமையாக சொல்வார். அது அவருடைய இயல்பு. 

ஆனால், நான் உணர்ச்சிவசப்பட்டு அப்படி பேசியது தவறு,” என்று கூறி, தான் பேசியவை குறித்து வருத்தம் தெரிவித்தார்.

ஆஸ்திரேலியா சூட்டிங் சம்பவம்

‘வாணி ராணி’ தொடரின் ஆஸ்திரேலிய படப்பிடிப்பு குறித்து பகிர்ந்த பப்லு, ஒரு சம்பவத்தை நினைவுகூர்ந்தார். சூட்டிங்கின் போது, ஹோட்டலில் தங்கியிருந்தோம். அனைவருக்கும் சாப்பாடு வெளியில் இருந்து வரும்

ஹோட்டலில் நடிகைகள் செய்த கொடுமை.. கதறிய பப்லூ.. ராதிகா செய்த தவறு.. அதிரவைக்கும் தகவல்!

ஒருமுறை அப்படி வெளியிலிருந்து சமைத்து வந்த சாப்பாடு கெட்டுப் போய்விட்டது. இதை பல நடிகைகள் என்னிடமே கூறினார்கள். நானும் சாப்பிட்டு பார்த்து அது கெட்டுப் போனதை உறுதிப்படுத்திக் கொண்டு இதைப்பற்றி ராதிகாவிடம் கூறினேன். 

உடனே அவர் அனைத்து நடிகைகளையும் அழைத்து சாப்பாடு நல்லா இல்லையா..? என்று கேட்டார். அப்போது நடிகைகள் உண்மைக்கு புறம்பாக சாப்பாடு நன்றாக இருப்பதாக கூறினார்கள். 

அப்போது எனக்கு கொடுமையான உணவாக இருந்தது. என்னிடம் சாப்பாடு நன்றாக இல்லை என்று கூறிவிட்டு நடிகை ராதிகா வந்து கேட்கும் போது எதற்காக மாற்றி சொன்னார்கள் என தெரியவில்லை. 

அப்போது நடிகை ராதிகா வேண்டுமென்றே பிரச்சனை பண்றியா என என்னை திட்டினார். அப்போது ராதிகாவிடம் நீங்கள் செய்வது தவறு.. வாருங்கள் என்று அவரை அழைத்துச் சென்று சாப்பாட்டை காட்டினேன்.. அன்றிலிருந்து அனைவருக்கும் நல்ல உணவு கிடைத்தது என பப்லு கூறி இருக்கிறார் ” என்று பப்லு தெரிவித்தார்.

ஹோட்டலில் நடிகைகள் செய்த கொடுமை.. கதறிய பப்லூ.. ராதிகா செய்த தவறு.. அதிரவைக்கும் தகவல்!

பப்லு பிரித்திவிராஜின் இந்த பேட்டி, ராதிகாவுடனான அவரது பணி அனுபவங்களை வெளிப்படையாக பகிர்ந்ததால், சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. 

ராதிகாவின் கண்டிப்பான பணி முறை மற்றும் பப்லுவின் நடிப்பு அனுபவங்கள் குறித்த இந்த வெளிப்பாடுகள், தொலைக்காட்சி மற்றும் திரைப்படத் துறையில் பணிபுரியும் கலைஞர்களின் அழுத்தங்களையும் சவால்களையும் மீண்டும் வெளிச்சத்திற்கு கொண்டுவந்துள்ளன.

Post a Comment

Previous Post Next Post
--Advertisement--