ஒரு பொய்யை திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருந்தால் அது உண்மையாகிவிடும் என்று சிலர் கூறுகிறார்கள். சிலர் அதை நம்புகிறார்கள். அதனை உறுதிப்படுத்தும் விதமாக சமகாலத்தில் தமிழ் நாட்டில் பரவலாக பேசப்படக்கூடிய ஒரு விஷயம் ராவணன் ஒரு தமிழன்.
அவன் ஒரு தமிழ் மன்னன். தமிழர்கள் அவனை கொண்டாடுகிறார்கள் என்று அரசியல் கட்சிகள் முதல் யூட்யூப் பிரபலங்கள் வரை பலரும் ராவணனை ஒரு தமிழனாக ஏற்று கொண்டாடி வருகிறார்கள்.

இன்னும் சிலர் ராவணன் எவ்வளவு புனிதமானவன் தெரியுமா..? சீதாதேவியை கடத்தி வந்தும் கூட அவள் மீது தன்னுடைய கைவிரல் கூட படாமல் சீதா தேவியை பாதுகாத்து.. அப்படியே திருப்பியும் அனுப்பினான் இதிலிருந்து ராவணன் எவ்வளவு புனிதமானவன் என்று தெரிகிறது பாருங்கள் என்று ராவணனுக்கு கோயில் கட்டாத குறையாக துதி பாடுகிறார்கள்.
இப்படியானவர்களுக்கு ராவணன் மீது ஒன்றும் நம்பிக்கையோ.. மரியாதையோ இல்லை.. ராமர் மீது அவரை சுற்றி நடக்கும் அரசியல் மீதும் உள்ள வெறுப்பு தான் ராவணனை தமிழன் என்று பேச வைக்கிறது என அவர்களின் நடவடிக்கையை சற்று உற்றுப்பார்த்தால் தெரிந்து விடும்.
.jpg)
ஆனால், அப்பட்டமான உண்மை என்னவென்றால் ராவணன் பிறர் மனைவியை கவர்ந்த கயவன். சீதையின் இருப்பிடத்தை பல கட்ட தேடலுக்கு பின் அறிந்த ராமன் பெரும் படையை திரட்டி சென்று போர் புரிந்து தன்னுடைய மனைவி சீதையை மீட்டுக் கொண்டு வந்தார்.
இந்த விஷயத்தில் ராவணன் ஒரு உத்தமன், புனிதமானவன், தமிழன் என்றும் சான்றிதழ் கொடுப்பவர்கள் ஒரு விஷயத்தை மறந்து விட்டார்கள். உதாரணத்திற்கு, இவர்களுடைய மனைவியை ஒருவன் கடத்திச் சென்று அவர்கள் மீது ஒரு தன்னுடைய கை விரல் கூட படாமல் பார்த்துக்கொள்ள.. இவர்கள் மனைவி இருக்கும் இடத்தை கண்டறிந்து பின்பு கடத்தி சென்ற அந்த கயவனிடம் சண்டையிட்டு தங்களுடைய மனைவியை மீட்டுக் கொண்டு வந்த பிறகு அந்த கயவனுக்கு.. புனிதமானவன்டா நீ.. உத்தமன் டா நீ.. என்ற பட்டம் கட்டுவார்களா என்பதை யோசித்துப் பார்க்க வேண்டும்.
.jpg)
இப்படி முன்னுக்குப் பின் முரணான பொருத்தமற்ற பல்வேறு விஷயங்களை பேசி மக்களை குழப்பி ராவணன் ஒரு நல்ல அரசன், தமிழன், தமிழ் மன்னன் என்றெல்லாம் ஏகத்துக்கும் கதைய கட்டி வருகிறார்கள்.
இப்படி உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் ராவணன் என்ற பர்னிச்சரை உடைப்பது காலத்தின் கட்டாயம் அல்லவா..? அதை ஒரே பதிவாக இல்லாமல் (ஒரே பதிவாக எழுத முடியாது பாஸ்.. அம்புட்டு விஷயம் கொட்டிக்கிடக்குது) ஒவ்வொரு பாகமாக பல்வேறு தமிழ் நூல்களில் இருந்து எடுக்கப்பட்ட ஆதாரங்களுடன் ராவணன் உண்மையில் யார்..? என்பதை தோலுரித்துக் காட்டுவது தான் இந்த தொடர்.
.jpg)
இந்த தொடர் நம்முடைய (tamizhakam.com) தளத்தில் தொடர்ச்சியாக வெளியாகும். அந்த வகையில், முதல் பாகத்தை இன்று பார்க்கலாம்.
ராவணன் எப்படி தமிழன் ஆவான்..? அவருடைய தாய் தந்தையர் யார்..? என்பதை தெரிந்து விட்டாலே ராவணன் யார் என்ற உண்மை தெரிந்து விடும். அதைப்பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம்.
.jpg)
தற்போது, 2000 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட சங்கத் தமிழ் பாடல் தொகுப்பான பத்துப்பாட்டு என்னும் தொகுப்பில் அடங்கும் மதுரைக்காஞ்சி தொகுப்பு பக்கம் 67-ல் நம்ம சிலோன் சித்தப்பு ராவணன் சார் பற்றி என்ன சொல்லியிருக்கிறார்கள் என்று பார்ப்போமா..?
”தென்னவன் பெயரிய துன்னருந் துப்பில்
தொன்முது கடவுள் பின்னர் மேய
வரைதாழ் அருவிப் பொருப்பிற் பொருந” (மதுரைக் காஞ்சி).
தென்னவன் பெயரிய - தக்ஷிணாமூர்த்தி என்னும் பெயர்கொண்ட
தொன்மையான கடவுள்.
பின்னர் - அகத்தியன் முதலிய தென்னவன் வழிபடும் அடியார்கள்.
சிலம்பின் வரிகளால், தென்னவன் என்பது
மகாதேவன் என்னும் தொன்முது
கடவுள் என விளங்கும். இராவணன் தொன்முது கடவுள் அல்லன்.
பொதியில் மலை பாரத நாட்டின் குலபர்வதங்களுள் ஒன்று.
இதில், ராவணன் தென்னவன் அதாவது தமிழ்நாட்டை சேர்ந்தவன் அல்ல, பொதிகை மலையில் தமிழர்களை கொடுமை படுத்திய காரணத்தினால் அகத்திய முனிவரால் அடித்து விரட்டப்பட்டவர் என்ற பொருள் புதைந்துள்ளது.
இதற்கு வலு சேர்க்கும் விதமாக புராண கதை ஒன்றும் உள்ளது. புராணக் காலத்தில், பொதிகை மலையின் அடிவாரத்தில் இரு அரக்கர்கள் பழங்களாக உருமாறி மக்களை ஏமாற்றி வந்தனர். இவர்கள் பழமாக உருவெடுத்து மலைப்பகுதியில் படுத்திருக்க, அப்பாவி மக்கள் அந்தப் பழங்களை உண்ணும் ஆசையில் எடுத்து உண்பர்.
.jpg)
ஆனால், அவர்கள் வயிற்றுக்குள் சென்றவுடன், இந்த அரக்கர்கள் தங்கள் உண்மையான உருவத்தை எடுத்து, மனிதர்களின் உடலை கிழித்து வெளியேறுவர். இதனால், பலர் உயிரிழந்து பிணமாகினர். இந்தக் கொடுமையான செயல், மலைப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.
.jpg)
இந்தத் தொல்லை பற்றிய செய்தி, பக்தர்கள் மூலம் அகத்திய மாமுனிவரின் காதுக்கு எட்டியது. மக்களின் துயர் துடைக்கவும், அரக்கர்களுக்கு பாடம் புகட்டவும் அகத்தியர் உடனடியாக பொதிகை மலை நோக்கி பயணித்தார்.
பொதிகை மலைக்கு வந்த அகத்தியர், பழங்களாக உருமாறி கிடந்த அரக்கர்களை அடையாளம் கண்டார். அவர்களை அழிக்க, அவர் அந்தப் பழங்களை எடுத்து உண்டார்.
அரக்கர்கள், வழக்கம்போல அகத்தியரின் வயிற்றுக்குள் சென்று தங்கள் உருவத்தை எடுத்து, அவரது உடலை கிழித்து வெளியேற முயன்றனர். ஆனால், அகத்திய மாமுனிவர் சாதாரண மனிதர் இல்லை.
அவரது யோக சக்தியாலும், ஆன்மீக வலிமையாலும், அரக்கர்களை தனது வயிற்றுக்குள் செரிக்க வைத்தார். பின்னர், ஒரு ஏப்பம் விட்டு, அரக்கர்களின் தொல்லையை முற்றிலும் ஒழித்தார். இந்தச் செயல், பொதிகை மலை மக்களுக்கு பெரும் நிம்மதியை அளித்தது.
.jpg)
பொதிகை மலைப்பகுதியில் மற்றொரு சமயம், இலங்கை அரசனான இராவணன் மக்களை துன்புறுத்தி வந்தான். அவனது ஆணவமும், மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளும் அகத்தியரின் கவனத்திற்கு வந்தன.
இராவணனை அடக்க, அகத்தியர் அவனை அறிவுரை கூற முயன்றார். ஆனால், இராவணன் ஆணவத்துடன், “நீங்கள் என்னுடன் யாழ் இசைப் போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே உங்கள் சொல்லை ஏற்பேன்,” என்று சவால் விடுத்தான்.
அகத்தியர் இந்த சவாலை ஏற்றார். யாழ் இசையில் தனது அபாரமான திறமையை வெளிப்படுத்தி, இராவணனை மிக எளிதாக வென்றார். தோல்வியடைந்த இராவணன், அகத்தியரிடம் மன்னிப்பு கேட்டு, தனது தவறுகளை உணர்ந்தான்.
அகத்தியர், “நீ என்னிடம் தோற்றுவிட்டாய். இனி என் சொல்லைக் கேட்டு நடந்து, மக்களுக்கு தொல்லை தராமல் இலங்கைக்கு திரும்பு,” என்று கூறி, இராவணனை மீண்டும் இலங்கைக்கு அனுப்பினார். இந்த நிகழ்வு, அகத்தியரின் இசைத்திறனையும், அவரது புலமையையும் உலகுக்கு எடுத்துக்காட்டியது.
.jpg)
இதன் மூலம், சிலோன் சித்தப்பு ராவணன் தமிழன் அல்ல.. இலங்கையை சேர்ந்தவர் என்று நிறுவி விட்டோம். அடுத்த பாகத்தில், சித்தப்புவின் பிறப்பு பற்றியும்.. தமிழ் பண்பாட்டிற்கு எதிராக ராவணன் சார் செய்த தில்லாலங்ககடி வேலைகள் பற்றியும் பேசி பர்னிச்சரை உடைப்போம்.
Summary in English : This is Part:1 Let's break down Ceylon Sithappu furniture ( சிலோன் சித்தப்பு பர்னிச்சரை உடைப்போம் : பாகம் 1 ) debates the claim that Ravana, often portrayed as a Tamil king, is celebrated as a saintly figure despite abducting Sita, which contradicts his villainous role in the Ramayana. Critics argue this narrative stems from political disdain for Rama rather than respect for Ravana. Citing the Sangam text Maduraikanchi and a Puranic tale, it asserts Ravana was not Tamil but from Lanka, subdued by sage Agastya for troubling people near Podhigai hills. Agastya’s victory in a musical duel forced Ravana to repent and return to Lanka. The series on tamizhakam.com will further explore Ravana’s origins and actions against Tamil culture.
