Posts

Showing posts with the label Political narrative

திடீர் தமிழன் மன்னன் ராவணன்.. சிலோன் சித்தப்பு பர்னிச்சரை உடைப்போம் : பாகம் 1

Image
ஒரு பொய்யை திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருந்தால் அது உண்மையாகிவிடும் என்று சிலர் கூறுகிறார்கள். சிலர் அதை நம்புகிறார்கள். அதனை உறுதிப்படுத்தும் விதமாக சமகாலத்தில் தமிழ் நாட்டில் பரவலாக பேசப்படக்கூடிய ஒரு விஷயம் ராவணன் ஒரு தமிழன்.  அவன் ஒரு தமிழ் மன்னன். தமிழர்கள் அவனை கொண்டாடுகிறார்கள் என்று அரசியல் கட்சிகள் முதல் யூட்யூப் பிரபலங்கள் வரை பலரும் ராவணனை ஒரு தமிழனாக ஏற்று கொண்டாடி வருகிறார்கள்.  இன்னும் சிலர் ராவணன் எவ்வளவு புனிதமானவன் தெரியுமா..? சீதாதேவியை கடத்தி வந்தும் கூட அவள் மீது தன்னுடைய கைவிரல் கூட படாமல் சீதா தேவியை பாதுகாத்து.. அப்படியே திருப்பியும் அனுப்பினான் இதிலிருந்து ராவணன் எவ்வளவு புனிதமானவன் என்று தெரிகிறது பாருங்கள் என்று ராவணனுக்கு கோயில் கட்டாத குறையாக துதி பாடுகிறார்கள்.  இப்படியானவர்களுக்கு ராவணன் மீது ஒன்றும் நம்பிக்கையோ.. மரியாதையோ இல்லை.. ராமர் மீது அவரை சுற்றி நடக்கும் அரசியல் மீதும் உள்ள வெறுப்பு தான் ராவணனை தமிழன் என்று பேச வைக்கிறது என அவர்களின் நடவடிக்கையை சற்று உற்றுப்பார்த்தால் தெரிந்து விடும்.  ஆனால், அப்பட்டமான உண்மை என்னவென்றால் ...