விஜய் ஆட்சியை கவிழ்க்க வரும் “தமிழ் முருகன்” திரைப்படம்! பின்னணியில் இருக்கும் கொடூர அரசியல்!
சமீபத்தில் தமிழ் சினிமா உலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஒரு அறிவிப்பு வெளியானது. நடிகர் தனுஷ் ஹீரோவாகவும், வெற்றிமாறன் இயக்குநராகவும் உருவாகும் தமிழ் முருகன் திரைப்படம். இந்தப் படம் பாவலர் அறிவுமதி எழுதிய அதே பெயரிலான புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. இந்த அறிவிப்பு இணையம் முழுக்க பரவிய நிலையில், புத்தகத்தின் உள்ளடக்கம், அதன் பின்னணி, மற்றும் தமிழ்நாட்டின் தற்போதைய அரசியல் சூழலுடனான தொடர்புகள் குறித்து பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ளன. இந்தக் கட்டுரையில் முத்துக்குமார் என்ற முகநூல் பயனர் எழுதிய கட்டுரை குறித்து அவற்றை விரிவாகப் பார்ப்போம். அறிவுமதி யார்? புத்தகத்தில் என்ன இருக்கிறது? பாவலர் அறிவுமதி ஒரு புகழ்பெற்ற தமிழ் கவிஞர் மற்றும் பாடலாசிரியர். சங்க இலக்கியத்தை அடிப்படையாகக் கொண்டு தமிழ் பண்பாடு, வரலாறு ஆகியவற்றை ஆராயும் படைப்புகளுக்கு பெயர் பெற்றவர். தமிழ் முருகன் என்ற அவரது புத்தகம் (சுமார் 66 பக்கங்கள்) "இது புனைந்த கதையன்று... வாழ்ந்த வரலாறு!" என்ற துணைத் தலைப்புடன் வெளியாகியுள்ளது. புத்தகம் சங்க கால முருகனை (சேயோன் / தமிழ்க் கடவுள்) ஒரு போர் வீரன், தலைவன், தமிழ...