காது கூசுது! அஜித்குமார் கொலை.. சற்று முன் வெளியான குலை நடுங்க வைக்கும் தகவல்!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் காவலாளியாக பணியாற்றிய அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

விசாரணை என்ற பெயரில் அஜித்குமாரின் மர்ம உறுப்பில் மிளகாய் பொடி கொட்டி கொடுமை செய்யப்பட்டதாகவும், இரும்பு கம்பியால் தாக்கப்பட்டதாகவும் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. 

பிரபல பத்திரிகையாளர் சவுக்கு சங்கர், இந்த கொடூர செயல் யாரோ ஒரு பெரிய புள்ளியின் தூண்டுதலால் நடந்ததாகவும், புகார் அளித்தவரின் அடையாளம் மறைக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். 

சாதாரண நபர்கள் நகை தொலைந்தால் காவல்துறை இவ்வளவு தீவிரமாக செயல்படுவதில்லை என்றும், பெரிய அரசியல் அழுத்தம் இல்லாமல் இத்தகைய கொடுமை நடந்திருக்க வாய்ப்பில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

இந்த வழக்கு தொடர்பாக ஆறு காவலர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டு, சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அஜித்குமாரின் மரணம் குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என அதிமுக, பாமக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. 

நீதிமன்றமும் இது தொடர்பாக காவல்துறையின் செயல்பாடுகளுக்கு கண்டனம் தெரிவித்து, விசாரணையை தீவிரப்படுத்த உத்தரவிட்டுள்ளது.

English Summary:Ajithkumar, a temple guard in Thiruppuvanam, died under mysterious circumstances during police interrogation over a jewellery theft case. Allegations suggest brutal torture, including chili powder on private parts, possibly instigated by a powerful figure. The case, now under CBCID probe, has sparked outrage and demands for justice.