சற்றுமுன் நடிகர் சூர்யா நடிப்பில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் உருவாகியுள்ள கருப்பு திரைப்படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது இந்த டீசரில் என் பெயர் சரவணன் எனக்கு இன்னொரு பேர் இருக்கு கருப்பு என்று நடிகர் சூர்யா பேசக்கூடிய வசனம் ரசிகர்களை கவர்ந்திருக்கிறது.
காரணம் நடிகர் சூர்யாவின் உண்மையான பெயர் சரவணன் என்பதுதான். மேலும் நடிகர் சூர்யாவை மீண்டும் ஒரு வெற்றிகரமான படத்தில் பார்க்க முடியுமா என்ற ஏக்கத்தில் இருந்த ரசிகர்களுக்கு இந்த திரைப்படம் ஒரு நல்ல விடையாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காரணம் நடிகர் சூர்யாவின் அயன் திரைப்படத்திற்கு பிறகு வெளியான படங்கள் எதுவும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக நடிகர் சூர்யா ஒரு நல்ல வெற்றி படத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறார்.
சில படங்கள் வெற்றி படம் என்று சொன்னால் கூட அது பெயரளவில் மட்டுமே இருக்கிறது தவிர ஒட்டுமொத்த ரசிகர்களால் வெற்றி படமாக ஏற்றுக் கொண்ட திரைப்படம் என்று அயன் படத்துக்குப் பிறகு நடிகர் சூர்யாவுக்கு அமையவில்லை.
கருப்பு திரைப்படம் நடிகர் சூர்யாவுக்கு மிகப்பெரிய வரவேற்பு கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காரணம் தன்னுடைய பழைய பாணியில் நடிகர் சூர்யா இந்த ட்ரெய்லரில் காட்சியளிக்கிறார்.
சமீப காலமாக நடிகர் சூர்யா ஒரு பக்க அரசியல் சார்பு கொண்ட கருத்துக்களை தெரிந்தோ தெரியாமலோ பேசி வருகிறார். அது அவருடைய திரை வாழ்க்கையின் மீது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி விட்டது. இந்த கருப்பு திரைப்படத்தின் அதனை மீட்டெடுப்பார் என்று நம்புவோம். வாழ்த்துவோம்.
English Summary:The teaser for Suriya’s 'Karuppu,' released on July 23, 2025, has captivated fans, especially with the dialogue, “My name is Saravanan, I have another name,” referencing Suriya’s real name. Directed by RJ Balaji, the film promises a mass appeal, potentially marking Suriya’s comeback after a decade without a major hit since 'Ayan.' Fans hope it will revive his career amidst recent political controversies.

