Posts

Showing posts with the label Karuppu

இதை மட்டும் சொல்லியிருந்தா 'கருப்பு' படத்தில் நான் நடித்திருக்க மாட்டேன் - ரகசியம் உடைத்த நடிகர் இந்திரன்ஸ்

Image
சூர்யா நடிப்பில் ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் வெளியான ‘கருப்பு’ திரைப்படம் திரையரங்குகளில் வலுவான வரவேற்பைப் பெற்று வருகிறது. திரிஷா கிருஷ்ணன், ஆர்.ஜே பாலாஜி, நட்டி நடராஜ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இப்படத்துக்கு சாய் அப்யங்கர் இசை அமைத்துள்ளார். வெளியான முதல் ஆறு நாட்களில் ரூ.207 கோடி வசூல் செய்து பாக்ஸ் ஆபீஸில் வெற்றிக் களிப்பை ஏற்படுத்தி வருகிறது. இப்படத்தில் மலையாள நடிகர் இந்திரன்ஸ் உணர்ச்சிகரமான வேடத்தில் நடித்துள்ளார். சென்னைக்கு தன் மகளுக்கு சிகிச்சைக்காக வரும் கேரளாவைச் சேர்ந்த தந்தையாக நடித்துள்ள அவர், நகையை இழந்த பிறகு நீதிமன்றத்தின் தாமதத்தால் நியாயம் கிடைக்காமல் தவிக்கும் கதாபாத்திரத்தை ஏற்றுள்ளார். இவரது உணர்ச்சி நிறைந்த நடிப்பு பார்வையாளர்கள் மற்றும் விமர்சகர்களிடையே பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது. இது இந்திரன்ஸின் முதல் தமிழ் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. மலையாளம் பேசும் கதாபாத்திரத்துக்கு அவர் கொண்டு வந்த யதார்த்தமும் குழந்தைத்தனமான அப்பாவித்தனமும் பலரையும் கவர்ந்துள்ளது. இந்திரன்ஸ் தன் உண்மையான உணர்வுகளைப் பகிர்ந்தார் நியூஸ் 18-க்கு அளித்த பேட்டியில் ...

என் பேரு சரவணன்.. எனக்கு இன்னொரு பேரு இருக்கு.. மிரட்டும் கருப்பு டீசர்..!

Image
சற்றுமுன் நடிகர் சூர்யா நடிப்பில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் உருவாகியுள்ள கருப்பு திரைப்படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது இந்த டீசரில் என் பெயர் சரவணன் எனக்கு இன்னொரு பேர் இருக்கு கருப்பு என்று நடிகர் சூர்யா பேசக்கூடிய வசனம் ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. காரணம் நடிகர் சூர்யாவின் உண்மையான பெயர் சரவணன் என்பதுதான். மேலும் நடிகர் சூர்யாவை மீண்டும் ஒரு வெற்றிகரமான படத்தில் பார்க்க முடியுமா என்ற ஏக்கத்தில் இருந்த ரசிகர்களுக்கு இந்த திரைப்படம் ஒரு நல்ல விடையாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காரணம் நடிகர் சூர்யாவின் அயன் திரைப்படத்திற்கு பிறகு வெளியான படங்கள் எதுவும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக நடிகர் சூர்யா ஒரு நல்ல வெற்றி படத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறார். சில படங்கள் வெற்றி படம் என்று சொன்னால் கூட அது பெயரளவில் மட்டுமே இருக்கிறது தவிர ஒட்டுமொத்த ரசிகர்களால் வெற்றி படமாக ஏற்றுக் கொண்ட திரைப்படம் என்று அயன் படத்துக்குப் பிறகு நடிகர் சூர்யாவுக்கு அமையவில்லை. கருப்பு திரைப்படம் நடிகர் சூர்யாவுக்கு மிகப்பெரிய வரவேற்பு கொடுக்கும் எ...