பிரபல சினிமா பத்திரிக்கையாளர் சேகுவேரா, ‘சினி கழுகு’ யூட்யூப் சேனல் பேட்டியில் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், “லட்சுமி ராமகிருஷ்ணன் வயதான நிலையில், தன்னை ஒரு இயக்குநர் படுக்கைக்கு அழைத்ததாக பொறுமையாக பேசுகிறார். இதைப் பெருமையாகக் கூறும் நடிகைகள், யார் அழைத்தார் என பெயரைக் குறிப்பிடுவதில்லை.

இது சுய விளம்பரத்திற்காகவே செய்யப்படுகிறது,” என்று விமர்சித்தார். மேலும், “யாராவது அவரை உண்மையில் படுக்கைக்கு அழைத்திருக்கலாம், ஆனால் அதை இப்போது பொதுவெளியில் கூறுவதன் தேவை என்ன? இது பிரபலத்திற்காக மோசமான குற்றச்சாட்டுகளை பயன்படுத்துவதாக உள்ளது,” என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
லட்சுமி ராமகிருஷ்ணன், மலையாள திரையுலகில் தனக்கு நேர்ந்த பாலியல் தொல்லை குறித்து முன்பு பேசியிருந்தார், ஆனால் இயக்குநரின் பெயரைக் குறிப்பிடவில்லை. கிழவி வயசுல அவர் படுக்கையை பகிர்ந்து கொள்ள விரும்பினார்.. இவர் படுக்கையை பகிர்ந்து கொள்ள விரும்பினார் என்று விளம்பரம் செய்து கொண்டிருக்கிறார்.
இது பலரை பாதிக்கும் என சமூக ஊடகங்களில் விவாதங்கள் எழுந்தன. சேகுவேராவின் இந்த கருத்து, சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது திரையுலகில் பாலியல் குற்றச்சாட்டுகளை பொதுவெளியில் விவாதிக்கும் முறை குறித்து புதிய விவாதத்தை தூண்டியுள்ளது. ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் இதுகுறித்து பல்வேறு கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.
Summary in English : Cine Kazhugu's Cheguvera criticized actress Lakshmy Ramakrishnan for claiming a director propositioned her without naming him, alleging such statements are for self-promotion. He questioned the need to raise such issues publicly, sparking debate on handling sexual misconduct allegations in the film industry.