நடிகை வனிதா விஜயகுமார் சமீபத்திய பேட்டி ஒன்றில் சொல்லக்கூடாத சில விஷயங்களை வெளிப்படையாக சொல்லி இருக்கிறார். சமீபகாலமாக, கள்ளக்காதல், திருமணம் தாண்டிய உறவு என புதுப்புது வகைகளில் அட்டூழியங்கள் நடந்து கொண்டிருக்கின்றது.
அதன் பயனாக பல்வேறு சம்பவங்கள்.. கணவனை கொலை செய்வது.. பெற்ற குழந்தைகளை கொலை செய்வது.. மாமியாரை கொலை செய்வதில் ஆரம்பித்து.. குடும்பங்கள் சிதைந்து சீரழியும் சம்பவங்கள் வரை அன்றாடம் நடந்து கொண்டிருக்கிறது.

இதைப்பற்றி யாரும் விவாதிக்கவோ அல்லது இப்படியான விஷயங்களை தடுக்கவோ முயற்சி செய்வதாக தெரியவில்லை. ஆனால். ஒருத்தனுக்கு ஒருத்தி என்று இருக்க வேண்டும். பெண்களோ ஆண்களோ தங்களுடைய வாழ்க்கை துணையைத் தாண்டி இன்னொரு துணையைத் தேட முயற்சி செய்யக் கூடாது. பிறர் மனை நோக்க கூடாது என்று கூறுபவர்களை பிற்ப்போக்குவாதிகள் என்று பட்டம் கட்ட வரிசை வரிசையாக வருகிறார்கள்.
விருப்பம் இருந்தால் யாரும் யாருடன் வேண்டுமானாலும் போகலாம்.. யாருடன் வேண்டுமானாலும் உடலுறவில் இருக்கலாம்.. ஒருவருடன் தான் உடலுறவு கொள்ள வேண்டும் என்பது இயற்கை விதி அல்ல. அது பிற்போக்குத்தனமான கருத்து என்ற விவாதங்கள் இந்த காலகட்டத்தில் அதிகரித்துவிட்டன.
இதை நின்று கேள்வி எழுப்ப ஒரு வலுவான அமைப்பு அல்லது மக்கள் கூட்டமைப்பு இல்லாமல் போய் இருப்பது வேதனைக்குரிய விஷயம். இது ஒரு பக்கம் இருக்க, ஒட்டுமொத்த சமுதாயத்தையும் சீர்குலைத்துக் கொண்டிருக்கக் கூடிய இன்னொரு விஷயம் லிவ்வின் ரிலேஷன்ஷிப்.
அதாவது திருமணம் செய்து கொள்ளாமல் ஒரே வீட்டில் வசிப்பது. உடலுறவு கொள்வது. ஆனால், குழந்தை பெற்றுக் கொள்ள மாட்டார்கள். தாலி கட்டிக் கொள்ள மாட்டார்கள். இதற்கு பெயர் தான் லிவ்வின் ரிலேஷன்ஷிப்.
இந்த லிவ்வின் ரிலேஷன்ஷிப்பில் நான் ஒரு பிரபல நடிகருடன் இருந்தேன் அதாவது திருமணமே செய்து கொள்ளாமல் அவருடன் உடலுறவில் இருந்தேன் என வெளிப்படையாக பதிவு செய்திருக்கிறார் பிரபல நடிகை வனிதா விஜயகுமார்.
அவர் கூறியதாவது, நானும் ராபர்ட் மாஸ்டரும் ஒரு படத்தில் பணியாற்றினோம். அப்போது அவர் தன்னுடைய மனைவியை விவாகரத்து செய்திருந்தார். அவருக்கு காதல் முறிவுகள் குறித்த அனுபவங்கள் இருந்தது.. அதேபோல எனக்கும் காதல் முறிவு அனுபவங்கள் இருந்தது.கணவரை விவாகரத்து செய்து இருந்தேன்.
அன்பு என்பது அனைவருக்கும் தேவையானது. இந்த உலகில் அன்பு என்பது ஒவ்வொருவருக்கும் கிடைக்க வேண்டிய ஒன்று. அந்த அன்பை நான் அவருக்கு கொடுத்தேன்.. அவர் எனக்கு கொடுத்தார்.. இதன் பயனாக நாங்கள் இருவரும் லிவின் ரிலேஷன்ஷிப்பில் இருந்தோம்.
ஆனால், அது திருமணம் வரை நீங்கள் செல்லவில்லை என வெளிப்படையாக பதிவு செய்திருக்கிறார் நடிகை வனிதா விஜயகுமார்.
Summary : Actress Vanitha Vijayakumar openly discussed her live-in relationship with Robert Master, emphasizing mutual love and support after their respective divorces. She highlighted societal issues like extramarital affairs and live-in relationships, noting the lack of discussion or action to address their impact on families and society.

