நீங்கள் அனைவரும் பைனல் டெஸ்டினேஷன் என்ற படத்தை பார்த்திருப்பீர்கள் கிட்டத்தட்ட ஏழு பாகங்கள் இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து உருவாக்கப்பட்டு வெளியானது.
இந்த படத்தின் சாராம்சம் என்ன என்றால் நாம் கவனக்குறைவால் செய்யக்கூடிய மிகச்சிறிய தவறு நினைத்து கூட பார்க்க முடியாத மிகப்பெரிய விளைவை ஏற்படுத்தும் என்பது தான் இந்த படத்தின் ஒன் லைன் ஸ்டோரி.

இதுதான் படத்தின் ஏழு பாகங்களிலும் நாம் பார்த்திருப்போம். அதே வகையில் வேலூர் மாவட்டம் காட்பாடி ரயில் நிலையத்தில் ஒரு கொடூரம் அரங்கேறி இருக்கிறது.
தன்னுடைய அடையாள அட்டையை கவனக்குறைவாக மறந்து வைத்த கணவன். அதை எடுத்து வர சென்ற மனைவிக்கு நேர்ந்த கொடூரத்தை பற்றிய உண்மை சம்பவம் தான் இது.
வேலூர் மாவட்டம், பொய்கை பகுதியைச் சேர்ந்த ராணுவ வீரர் பிரபாகரன் (35), 15 ஆண்டுகளாக ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார்.
இவரது மனைவி சித்ரா (32), மூன்று பிள்ளைகளின் தாய். கடந்த மாதம் விடுமுறைக்காக ஊருக்கு வந்த பிரபாகரன், பணிக்குத் திரும்ப காட்பாடி ரயில் நிலையத்திற்கு மனைவியுடன் ஆட்டோவில் வந்தார்.
சபரி எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறிய பிரபாகரன், தனது அடையாள அட்டையை வீட்டில் மறந்துவிட்டதாக மனைவியிடம் கூறினார். சித்ரா, ஆட்டோவில் இருந்த பையில் அட்டை இருப்பதாகக் கூறி, எடுத்து வருவதாகச் சென்றார்.
அட்டையை எடுத்து வந்தபோது, ரயில் மெதுவாக நகரத் தொடங்கியது. கணவரிடம் அட்டையைக் கொடுக்க ஓடி வந்த சித்ரா, நிலைதடுமாறி ரயில் பெட்டியில் சிக்கினார்.
இதில், அவரது தலை மற்றும் கைகள் துண்டாகி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.சம்பவத்தை அறிந்து விரைந்து வந்த ரயில்வே காவல்துறையினர், சித்ராவின் உடலை கைப்பற்றி, உடற்கூறு ஆய்வுக்காக வேலூர் அடுக்கம்பாரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.விடுமுறை முடிந்து பணிக்குத் திரும்பிய பிரபாகரன், மனைவியைப் பிரிந்து செல்லும் ஏக்கத்துடன் ரயிலில் ஏறினார்.
ஆனால், தனது அடையாள அட்டையைக் கொடுக்க முயன்ற மனைவி, கண்முன்னே ரயிலில் சிக்கி உயிரிழந்த சோகம், அவரை உடைந்து போகச் செய்தது. காட்பாடி ரயில் நிலையத்தில் பிரபாகரன் கதறி அழுத காட்சி, அங்கிருந்தவர்களின் இதயங்களை உலுக்கியது.
இந்த துயர சம்பவம், குடும்பத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தியுள்ளது.
Summary : In Vellore, army man Prabhakaran’s wife, Chitra, died tragically at Katpadi station while handing him his forgotten ID card. She slipped, got caught in the moving Sabari Express, and succumbed to severe injuries. Railway police are investigating, leaving Prabhakaran and their three children devastated.

