Posts

Showing posts with the label train accident

ஆசையாக கொடுக்க வந்த மனைவி.. உயிரை பறித்த சிறு தவறு.. “Final Destination” படத்தை மிஞ்சிய காட்பாடி கொடூரம்..

Image
நீங்கள் அனைவரும் பைனல் டெஸ்டினேஷன் என்ற படத்தை பார்த்திருப்பீர்கள் கிட்டத்தட்ட ஏழு பாகங்கள் இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து உருவாக்கப்பட்டு வெளியானது. இந்த படத்தின் சாராம்சம் என்ன என்றால் நாம் கவனக்குறைவால் செய்யக்கூடிய மிகச்சிறிய தவறு நினைத்து கூட பார்க்க முடியாத மிகப்பெரிய விளைவை ஏற்படுத்தும் என்பது தான் இந்த படத்தின் ஒன் லைன் ஸ்டோரி. இதுதான் படத்தின் ஏழு பாகங்களிலும் நாம் பார்த்திருப்போம். அதே வகையில் வேலூர் மாவட்டம் காட்பாடி ரயில் நிலையத்தில் ஒரு கொடூரம் அரங்கேறி இருக்கிறது. தன்னுடைய அடையாள அட்டையை கவனக்குறைவாக மறந்து வைத்த கணவன். அதை எடுத்து வர சென்ற மனைவிக்கு நேர்ந்த கொடூரத்தை பற்றிய உண்மை சம்பவம் தான் இது. வேலூர் மாவட்டம், பொய்கை பகுதியைச் சேர்ந்த ராணுவ வீரர் பிரபாகரன் (35), 15 ஆண்டுகளாக ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சித்ரா (32), மூன்று பிள்ளைகளின் தாய். கடந்த மாதம் விடுமுறைக்காக ஊருக்கு வந்த பிரபாகரன், பணிக்குத் திரும்ப காட்பாடி ரயில் நிலையத்திற்கு மனைவியுடன் ஆட்டோவில் வந்தார். சபரி எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறிய பிரபாகரன், தனது அடையாள அட்டையை வீட்டில் மறந்துவிட்டதா...

ரயிலில் கழிவறைக்கு சென்ற மனைவி.. கதவை திறந்து பார்த்த கொடூர காட்சியால் பேரதிர்ச்சியில் உறைந்த கணவன்

Image
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே புத்துக்கோயில் பகுதியில், திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த விரைவு ரயிலில் பயணித்த கேரளாவைச் சேர்ந்த இளம்பெண் ரோகிணி (வயது 30) தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் திருச்சூர் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் மற்றும் அவரது மனைவி ரோகிணி, இரண்டரை வயது குழந்தையை உறவினர்களிடம் விட்டுவிட்டு, ராஜேஷின் தந்தையைப் பார்க்க சென்னைக்கு திருவனந்தபுரம் விரைவு ரயிலில் முன்பதிவு பெட்டியில் பயணித்தனர். ரயில் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தை அடைந்தபோது, ரோகிணி கழிவறைக்குச் சென்று முகம் கழுவச் சென்றார். ஆனால், வெகுநேரமாகியும் அவர் இருக்கைக்கு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த ராஜேஷ், ரயிலில் கழிவறை கதவை திறந்து பார்த்த போது அங்கே அவர் இல்லை.. அடுத்தடுத்த பெட்டிகளில் உள்ள கழிவறைகளில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதனை தொடர்ந்து, காட்பாடி ரயில்வே காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், காட்பாடி மற்றும் ஜோலார்பேட்டை ரயில்வே காவல்துறையினர் ரோகிணியை தேடியபோது, வாணியம்பாடி அருகே புத்துக்கோயில் பகுதி தண்டவாளத்தி...

நொடியில் நேர்ந்த கொடூரம்.. சிதறி கிடக்கும் பிஞ்சு உடல்கள்.. பள்ளி வேன் மீது ரயில் மோதல்..

Image
கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் பகுதியில் இன்று காலை (ஜூலை 8, 2025) ஏற்பட்ட பயங்கர விபத்தில், ஆச்சாரியா தனியார் பள்ளியின் வேன் மீது எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் 3 மாணவர்கள் உடல் சிதறி உயிரிழந்தனர்.  இந்த கோர சம்பவம் உள்ளூர் மக்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோரிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.  விபத்து நடந்த இடம், செம்மங்குப்பத்தில் உள்ள ரயில்வே லெவல் கிராசிங்.  பள்ளி வேன், ரயில்வே கேட்டை கடக்க முயன்றபோது, காரைக்காலில் இருந்து வந்த எக்ஸ்பிரஸ் ரயில் அதிவேகமாக மோதியதாக கூறப்படுகிறது.  இதில், வேன் பல மீட்டர் தூரத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டு முற்றிலும் நொறுங்கியது.  வேனில் பயணித்த 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பலத்த காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் உடனடியாக கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  இந்த விபத்திற்கு முக்கிய காரணமாக, ரயில்வே கேட் மூடப்படாமல் இருந்தது குறிப்பிடப்படுகிறது.  ரயில்வே கேட் கீப்பர் கேட்டை மூடவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த உள்ளூர்...

கடலூர் பள்ளி வேன் மீது ரயில் மோதி 3 மாணவர்கள் பலி! விபத்து நடந்தது எப்படி? குலை நடுங்க வைக்கும் வீடியோ!

Image
கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் ஜூலை 8, 2025 அன்று அதிகாலை நிகழ்ந்த பயங்கர விபத்தில், தனியார் பள்ளி வேன் மீது ரயில் மோதியதில் மூன்று மாணவர்கள் உயிரிழந்தனர்.  இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஆச்சாரியா பள்ளியைச் சேர்ந்த இந்த வேன், ரயில்வே கேட்டை கடக்க முயன்றபோது, காரைக்காலில் இருந்து வந்த எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதால் வேன் நொறுங்கியது.  இந்த விபத்தில் 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயமடைந்தனர்.விபத்து நடந்த இடமான செம்மங்குப்பம் ரயில்வே கேட், மூடப்படாமல் இருந்ததாகவும், கேட் கீப்பர் கவனக் குறைவாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.  இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், கேட் கீப்பர் மீது தாக்குதல் நடத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்தில் காயமடைந்த மாணவர்கள் உடனடியாக கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.  வேனில் பயணித்த மாணவர்கள் தூக்கி வீசப்பட்டு, வாகனம் பல மீட்டர் தூரத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து கடலூர் காவல்துறையின...