காதலியின் இறந்த உடலுடன் கள்ளக்காதலன் செய்த அசிங்கம்! விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்!
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள பாலப்பம்பட்டியைச் சேர்ந்த 45 வயது பானுமதி. கருத்து வேறுபாட்டால் கணவரைப் பிரிந்து, தன் மகளுடன் தனியாக வாழ்ந்து வந்தார். வாழ்வாதாரத்துக்காக அருகிலுள்ள ஸ்பின்னிங் மில்லில் வேலை செய்து வந்த அவர், ஒருநாள் வேலை முடித்து இந்திராநகர் பேருந்து நிலையத்தில் பஸுக்காகக் காத்துக்கொண்டிருந்தபோது, கண்முன்னே ஒரு விபத்து நடந்தது. அந்த விபத்தில் ஆணமலையைச் சேர்ந்த 38 வயது பிரபாகரன் படுகாயம் அடைந்தார். உடனடியாக மனிதநேயத்துடன் செயல்பட்ட பானுமதி, ஆம்புலன்ஸை அழைத்து அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சேர்த்தார். மறுநாள், தான் உதவிய அந்த நபர் எப்படி இருக்கிறார் என்று அறிய ஆர்வமடைந்த பானுமதி, மருத்துவமனைக்குச் சென்று பிரபாகரனைப் பார்த்தார். அப்போதுதான் அவர் மனைவியைப் பிரிந்து தனியாக வாழ்வதும், உதவிக்கு யாரும் இல்லாத நிலையும் தெரியவந்தது. அதன்பிறகு பானுமதி அவருக்குத் தேவையான மருத்துவ உதவிகளைச் செய்து வந்தார். இந்தப் பழக்கம் படிப்படியாக இருவருக்கும் இடையே நெருக்கத்தை ஏற்படுத்தியது. பிரபாகரனும் டீக்கடையில் மாஸ்டராக வேலை செய்து வந்தார். அவரும் கருத்து வேறுபாட்டால் மனைவியைப் ப...