ஆபாச படம் போல வித்தியாச உடலுறவால் செப்டிக் டேங்கில் மிதந்த மாமன் மகன்.. முறை பொண்ணு செய்த முறை வாசல்..

செங்கோட்டை அடுத்த இளத்தூர் கிராமம். சூரியன் மறைந்து, இரவின் இருள் படிந்திருக்கும் அந்தப் பகுதியில், ஒரு சிறிய வீடு. வெளியில் கோலம் போடப்பட்டு, வாசல் துடைக்கப்பட்டிருக்கும். உள்ளே, இரண்டு சிறு குழந்தைகள் தூங்குகின்றன.

அந்த வீட்டின் உரிமையாளர், பேச்சியம்மாள். 30 வயதுக்கும் குறைந்த இளம்பெண். அவளது கணவர் சாமித்துறை, கோவையில் எலக்ட்ரிஷியன் வேலையில் ஈடுபட்டிருக்கும் போது, இளத்தூரில் தனியாக வாழ்ந்து வந்தவள்.

இரண்டு குழந்தைகளுடன் அமைதியான வாழ்க்கை... அல்லது அப்படி தோன்றியது. ஆனால், அந்த அமைதியின் பின்னால், ஒரு தீயின் தீண்டல். எதிர்வீட்டில் வசிப்பவர் மாடசாமி. பேச்சியம்மாளின் மாமன் மகன். நெருங்கிய உறவு. சில மாதங்கள் முன், அது பழக்கமாகத் தொடங்கியது. பின்னர், தகாத உறவாக மாறியது.

அந்த உறவின் நிழல், மாடசாமியின் தாய் ராமலட்சுமிக்கு தெரிந்தது. கோபத்தில், அவள் பேச்சியம்மாளை கண்டித்தாள். "உன் நடவடிக்கை சரியில்லமா..! உன் புருஷன் எங்க இருக்கானோ.. அங்க போ..!" என்று எச்சரித்தாள். கோவைக்கு தகவல் சென்றது.

சாமித்துறைக்கு. ஆனால், அவன் தன் மனைவி மீது இருந்த அதீத நம்பிக்கையில், அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. "அவங்க சொல்றாங்க.. இவங்க சொல்ற்றாங்கன்னு நீ கஷ்டப்படாதமா.. பாத்துக்கலாம்" என்று கூறி, வெளியூர் பணிக்குப் போய்விட்டான்.

ஆனால், பேச்சியம்மாளின் கள்ள உறவு வளர்ந்தது. அடிக்கடி தனிமையில் சந்திப்பு. உல்லாசம் என வாழ்க்கையை நகர்த்தினால் பேச்சியம்மாள். குழந்தைகள் குறித்து கவலை இல்லை.

ஒரு கட்டத்தில், பேச்சியம்மாள் இல்லாமல் வாழவே முடியாது" என்ற நிலை. அவன் வற்புறுத்தல்: "உன் குழந்தைகளையும் கணவரையும் விட்டு, என்னுடன் வா... ரெண்டு பேரும் சேர்ந்து புது வாழ்க்கையை தொடங்கலாம்.." என்று கூறினான் மாடசாமி. ஆனால், பேச்சியம்மாள் மறுத்தாள்.

உனக்கு என்ன வேணுமோ அதை பண்ணிக்கோ.. நான் அதுக்கு ஒத்துக்குறேன்.. இந்த குழந்தையை விட்டுட்டு வான்னுலாம் சொல்லாத.. என்று சண்டையிட்டால்.. தகராறு. மோதல்.அது மெல்ல மெல்ல ஒரு விஷப் பாம்பு போல் வளர்ந்தது.

அன்று சம்பவம் நடந்த. பேச்சியம்மாள், மாடசாமியை தனியாக வீட்டிற்கு அழைத்தாள். "ஹேய்.. வா, கொஞ்சம் பேசலாம்" என்ற அவளது ஹஸ்கி குரல் அவனை காந்தமாக இழுத்து.

உள்ளே சென்றது, தன்னுடைய கைப்பேசியில் சில ஆபாச வீடியோக்கள். அவற்றைத் திரையிட்டு காட்டினாள். காமமோகத்தில் மூழ்கினான் மாடசாமி. இதே மாதிரி உன் கூட செய்யணும் போல ஆசையா இருக்கு மாமா.. என்று சிணுங்கினால் பேச்சியம்மா.. கிறக்கத்தில் இருந்த மாடசாமி, அவளின் கட்டளையை ஏற்றான்.

அவனுக்கு சந்தேகம் வந்து விடக்கூடாது. தன்னுடைய மேலாடைகளை கழட்டி வீசி விட்டு, வெறும் உள்ளாடையுடன் தன்னுடைய கட்டழகை காட்டியபடி நின்றால் பேச்சியமா.

உடனே.. வீடியோவில் காட்டப்பட்டது போல மாடசாமியின் கை, கால்கள் கட்டினால். எதுக்கு இவ்ளோ டைட்டா கட்டுற.. கொஞ்சம் லூசா கட்டு.. வலிக்குது.. திமிறினான் மாடசாமி. அட இரு மாமா.. அப்போ தான் எனக்கு வசதியா இருக்கும் என சிணுங்கியபடி ஹஸ்கி குரலில் வார்த்தைகளை உதிரத்தால் பேச்சியம்மா.

அடுத்த நிமிடமே, தலையணையால் முகத்தை அழுத்தினாள். கழுத்தை நெறித்தாள். சைக்கோ கில்லர் பாணியில், கொடூரமான கொலை. மாடசாமியின் உயிர், அந்த வீட்டின் சுவர்களுக்குள் விடுபட்டு பிரிந்து சென்றது. மாடசாமி இறந்து விட்டதை உறுதிபடுத்தினாள். உடல் முன் நின்று கொண்டு பேச்சியம்மாளின் குழப்பம்.

"பிணத்தை என்ன செய்வது?" கதவை யாரோ தட்டும் சத்தம்.. இருங்க ட்ரெஸ் போட்டுகிட்டு வரேன் என்று தன்னுடைய ஆடைகளை அணிந்து கொண்டு கதவை திறந்தாள். அவள் தாய் மாரியம்மாளும், 17 வயது சகோதரனும் என்ன ஆச்சு.. சரியா பண்ணிட்டியா என்றனர்.

அவர்கள், உடலை மாடசாமியின் வீட்டருகே போட முயன்றனர். ஆனால், அவரது சகோதரிக்கு ஒரு வாரத்தில் திருமணம். உறவினர்கள் வருவதும் போவதுமாக இருந்தனர்.

அப்போது, பேச்சியம்மாள் குடியிருந்த வீட்டின் செப்டிக் டேங்க். உரைக்கிண்ணரைத் திறந்து, உடலை அதற்குள் போட்டு மூடி, மறைத்தனர். வெளியில், வாழ்க்கை சர்வசாதாரணமாகத் தொடர்ந்தது. வாசல் துடைத்து, கோலம் போட்டபடியே, மாடசாமியின் குடும்பத்தினர் தேடி வருவதை கண்டும், காணாமல் இருந்தாள் பேச்சியம்மா.

சகோதரியின் திருமணம் முடிந்தது. "எட்டு மாதங்கள் கழிந்தன. பேச்சியம்மாள், கோவைக்குச் சென்று கணவருடன் வாழத் தொடங்கினாள். இளத்தூரில், பேச்சியம்மா குடியிருந்த வீட்டின் உரிமையாளர் புதுப்பிக்கும் பணியில் இறங்கினார். செப்டிக் டேங்கைத் திறந்தபோது... எலும்புக்கூடுகள்! அதிர்ச்சி.

போலீஸ் புகார். விசாரணை. உண்மை வெளிச்சத்திற்கு வந்தது.மாடசாமியின் தாய் ராமலட்சுமி, முதலில் மறுத்தாள். "அது என் பையன் மாடசாமி இல்லை!" என்று வாதிட்டாள்.

போலீஸார், கோவையில் வசித்த பேச்சியம்மாளை, அவள் தாய் மாரியம்மாளை, 17 வயது சகோதரனை கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

தகாதக் காதல், கோபம், கொலை... எல்லாம் ஒரு சைக்கோ திரில்லரின் திரைக்கதை போல்.இளத்தூர் கிராமம் இன்றும் அந்த வீட்டைப் பார்க்கும்போது நடுங்குகிறது.

அமைதியின் பின்னால், எத்தனை இருட்டுகள்? பேச்சியம்மாளின் குழந்தைகள், இந்த இருட்டில் வாழும்.. அவர்களின் வாழ்க்கை என்ன ஆகும்? விசாரணை தொடர்கிறது. உண்மை, முழுமையாக வெளியானாலும், அந்தக் குடும்பங்களின் வலி, என்றும் மறையாது.

Summary : In Ilathur village near Sengottai, young mother Pechiyammal began an illicit affair with her cousin Madhasamy. When it escalated and he pressured her to elope, she lured him home, seduced and strangled him in a psycho-thriller style murder. With her mother and brother, she hid his body in a septic tank. Eight months later, bones were discovered during house renovation, leading to their arrest in Coimbatore. The scandal shattered families, leaving her children in shadows.