காதலனுக்கு ‘Buy 1 Get 2’ கொடுத்த கள்ளக்காதலி.. ஆசையாக சென்ற காதலன்.. அறையில் காத்திருந்த அதிர்ச்சி

புதுச்சேரி : அரசு ஊழியரை கள்ளக்காதல் மூலம் திளைக்க வைத்து, அவரது தோழிகளை அறிமுகப்படுத்தி ஹனிட்ராப் போட்டு லட்சக்கணக்கான பணத்தை சுருட்டிய சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மின்வாரியத்தில் ஜூனியர் இன்ஜினியராக பணியாற்றிய ஒரு குடும்பஸ்தனின் வாழ்க்கையை 'ஷார்ட் சர்க்யூட்' செய்த இந்த திட்டமிட்ட ஏமாற்று வழக்கில், மூன்று பெண்கள் உள்ளிட்ட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், பிரபல ரவுடி ரங்கராஜ் என்பவரை தேடி வருகிறது போலீஸ்.

இந்த சம்பவத்தின் மையத்தில் இருக்கும் மணிமேகலை (30), அரியாங்குப்பட்டைச் சேர்ந்தவர். புதுச்சேரி மின்வாரிய அலுவலகத்தில் ஜூனியர் இன்ஜினியராக பணியாற்றி வந்தவர். 

திருமணமான இவருக்கு கணவன் மற்றும் குழந்தை உள்ளனர். ஆனால், அவர் தனது சக ஊழியரான ஜூனியர் இன்ஜினியருடன் (பெயர் மறைக்கப்பட்டது) தகாத உறவில் ஈடுபட்டிருந்தார். 

இந்த உறவில் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து 'சார்ஜ்' செய்து வந்தனர்.திடீரென, மணிமேகலை தனது தோழிகளான சுலோக்சனா (28) மற்றும் சுகந்தி (26) ஆகியோரை தனது கள்ளக்காதலனுக்கு அறிமுகப்படுத்தினார். 'என்னை விட அழகாக, சூப்பரா இருக்கிறார்கள்' என்று ஆசை தூண்டி, அவர்களை பார்க்க ஊக்குவித்தார். 

'பை ஒன் கெட் டூ ஆபர்' என்று நினைத்த ஜூனியர் இன்ஜினியர், இந்த 'டீலுக்கு' சம்மதித்தார். சுகந்தியுடன் டேட்டிங் நாள் குறிக்கப்பட்டது.முதல் 'டிராப்': சுலோக்சனாவின் வீட்டிற்கு மணிமேகலை தனது காதலனை அழைத்துச் சென்றார். அங்கு முதல் மாடியில் காத்திருந்த சுகந்தியிடம் அவரது கரம் பிடித்துக் கொடுத்தார். 

லைட்ஸ் ஆஃப் ஆனதும், ஜூனியர் இன்ஜினியர் தனது 'பணியை' தொடர்ந்தார். இதற்கிடையில், கீழ்த்தளத்தில் இருந்த சுலோக்சனா மற்றும் அவரது கணவர் தீனதயாளன் (32) இந்த 'நிர்வாண மொமெண்ட்ஸை' மொபைலில் ரெகார்ட் செய்தனர்.அடுத்த நாள், தீனதயாளன் அந்த வீடியோவை ஜூனியர் இன்ஜினியரின் வாட்ஸ்அப் எண்ணிற்கு அனுப்பினார். 

'இதை உன் மனைவிக்கும் குடும்பத்திற்கும் அனுப்பினால் என்ன ஆகும்? நினைச்சு பார்' என்று மிரட்டி, முதல் 'ஷாட்டில்' GPay வழியாக 1 லட்சம் ரூபாய் பறித்தார். பணம் 'கரண்ட்' போல் கரைந்ததும், மீண்டும் வீட்டிற்கு விசிட் அடித்து அதே வீடியோவைக் காட்டி 3 லட்சம் பறித்தனர். 

சேவிங்ஸ் மொத்தமும் போய், ஊழியர் மணிமேகலையிடம் கதறி அழுதார்.மணிமேகலை 'எனக்கு எந்த தொடர்பும் இல்லை' என்று நடித்து ஆறுதல் கூறினார். வீடியோவை டெலீட் செய்து, சட்டப்பிரச்சனைகளை சமாளிக்க 2 லட்சம் கேட்டார். 

நம்பிய ஊழியர் மொத்தம் 6 லட்சம் இழந்து, 'இலீகல் கனெக்ஷன்ஸ்' முழுவதும் 'கட்' செய்து திருந்தி வாழ முயன்றார்.ஆனால், தீனதயாளன் விடவில்லை. பிரபல ரவுடி ரங்கராஜ் மூலம் 'செகண்ட் இன்னிங்ஸ்' தொடங்கி, மீண்டும் 5 லட்சம் கேட்டு வீடியோ அனுப்பினார். இனி ஏமாற தயாரில்லாத ஊழியர், அனைத்தும் மனைவியிடம் சொல்லி மன்னிப்பு கேட்டார். 

கணவன்-மனைவி இருவரும் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர்.விசாரணையில், போலீஸ் 'ஹனிட்ராப் கும்பலை புறிச் சூடேற்க' திட்டம் தீட்டியது. தீனதயாளனிடம் '5 லட்சம் கொடுக்கிறோம்' என்று சொல்லி, அவரை ஊழியரின் வீட்டிற்கு அழைத்தனர். 

'மகாலட்சுமியின் கையால் பணம் வாங்கினால் தான் பணமழை' என்று நம்பிய தீனா, தனது மனைவி சுலோக்சனாவை அனுப்பினார். அப்போது, தெருமுனையில் காத்திருந்த தீனதயாளனையும் சுலோக்சனாவையும் போலீஸ் அதிரடியாக கைது செய்தது.

விசாரணையில், இந்த 'மாஸ்டர் பிளான்'க்கு மணிமேகலைதான் 'மெயின் ஸ்விட்ச்' என்று தெரியவந்தது. 'கள்ளகாதலனிடம் 20 லட்சம் வரை டார்கெட் செய்யலாம்' என்று அவர் தான் அனைவருக்கும் 'ஸ்கெட்ச்' போட்டிருந்தார். போலீஸ் வழக்கு பதிவு செய்து, மெயின் லீட் மணிமேகலை, கிளாமர் ரோல் சுகந்தி, கேரக்டர் ஆர்டிஸ்ட் சுலோக்சனா, தீனதயாளன் ஆகியோரையும் கைது செய்தது. 

கிளைமாக்ஸ் அப்பியரன்ஸ் 'ஷாருக்கான்' போல ரவுடி ரங்கராஜையும் தேடுகிறது போலீஸ்.பிடிபட்டவர்களிடமிருந்து 3 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்துள்ள போலீஸ், 'ரங்கராஜ் கைதான பிறகு இன்னும் எத்தனை பிரபுக்களிடம் பணம் பறித்திருக்கிறார்கள் என்பது தெரியும்' என்று தெரிவித்துள்ளது.

இந்த 'திரீ ரோசஸ்' கும்பல் கணவர்களின் துணையோடும் ரவுடிகளின் துணையோடும் இன்னும் பல 'தாராள பிரபுக்களை' ஏமாற்றியிருக்கலாம் என சந்தேகம்.இந்த வழக்கு, கள்ளக்காதல் மற்றும் டிஜிட்டல் மிரட்டல்களின் ஆபத்தை எச்சரிக்கிறது. 

போலீஸ் மேலும் விசாரணை நடத்தி, கும்பலின் முழு நெட்வொர்க்கையும் கிழித்தெறியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Summary : In Puducherry, a junior engineer was ensnared in a honeytrap by his lover Manimegalai and her accomplices, Sulochana and Suganthi. They recorded compromising videos, extorting lakhs. Police arrested five, including Manimegalai, Sulochana, her husband Deenadayalan, and others, while seeking notorious rowdy Rangarajan.