காதலனுக்கு ‘Buy 1 Get 2’ கொடுத்த கள்ளக்காதலி.. ஆசையாக சென்ற காதலன்.. அறையில் காத்திருந்த அதிர்ச்சி
புதுச்சேரி : அரசு ஊழியரை கள்ளக்காதல் மூலம் திளைக்க வைத்து, அவரது தோழிகளை அறிமுகப்படுத்தி ஹனிட்ராப் போட்டு லட்சக்கணக்கான பணத்தை சுருட்டிய சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மின்வாரியத்தில் ஜூனியர் இன்ஜினியராக பணியாற்றிய ஒரு குடும்பஸ்தனின் வாழ்க்கையை 'ஷார்ட் சர்க்யூட்' செய்த இந்த திட்டமிட்ட ஏமாற்று வழக்கில், மூன்று பெண்கள் உள்ளிட்ட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், பிரபல ரவுடி ரங்கராஜ் என்பவரை தேடி வருகிறது போலீஸ். இந்த சம்பவத்தின் மையத்தில் இருக்கும் மணிமேகலை (30), அரியாங்குப்பட்டைச் சேர்ந்தவர். புதுச்சேரி மின்வாரிய அலுவலகத்தில் ஜூனியர் இன்ஜினியராக பணியாற்றி வந்தவர். திருமணமான இவருக்கு கணவன் மற்றும் குழந்தை உள்ளனர். ஆனால், அவர் தனது சக ஊழியரான ஜூனியர் இன்ஜினியருடன் (பெயர் மறைக்கப்பட்டது) தகாத உறவில் ஈடுபட்டிருந்தார். இந்த உறவில் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து 'சார்ஜ்' செய்து வந்தனர்.திடீரென, மணிமேகலை தனது தோழிகளான சுலோக்சனா (28) மற்றும் சுகந்தி (26) ஆகியோரை தனது கள்ளக்காதலனுக்கு அறிமுகப்படுத்தினார். 'என்னை விட அழகாக, சூப்பரா இருக்க...