உத்தரவுசிதபூர், அக்டோபர் 7 : உத்தரப் பிரதேசத்தின் சிதபூர் மாவட்டத்தில் ஒரு ஆண் தனது மனைவி இரவில் பாம்பாக மாறி தன்னை கடிக்க முயல்வதாக அதிர்ச்சி புகாரளித்துள்ளார். இந்தப் புகார் சமூக வலைதளங்களில் பரவி, பல்வேறு கிசுகிசுக்களை ஏற்படுத்தியுள்ளது.
மஹ்மூதாபாத் பகுதியின் லோத்சா கிராமத்தைச் சேர்ந்த மெராஜ் என்ற இளைஞன், மாவட்ட ஆட்சியர் முன் நடைபெற்ற சமாதான் திவாஸ் (பொது புகார் தீர்வு நாள்) நிகழ்ச்சியில் இந்தப் புகாரைப் பதிவு செய்தார்.

வழக்கமாக மின்சாரம், சாலைகள், ரேஷன் கார்டு போன்ற பிரச்சினைகளை மக்கள் கொண்டு வரும் இந்நிகழ்ச்சியில், மெராஜ், "சார், என் மனைவி நசீமூன் இரவில் பாம்பாக மாறி என்னைத் துரத்தி கடிக்க முயல்கிறாள். திடீரென அவள் முகமெல்லாம் பாம்பு போல மாறுகிறது.. என்னை ஒரு முறை கடித்தே விட்டால், இங்க பாருங்க ஆதாரம் என கழுத்துக்கு கீழே இருந்த தழும்பை காட்டியுள்ளார்.
மெராஜின் கூற்றுப்படி, அவரது மனைவி பலமுறை தன்னை கொல்ல முயன்றுள்ளார். "எவ்வளவு தடவை தூங்கும்போது எழுந்து தப்பித்துக்கொண்டேன். என் மனைவி என்னை மனதளவில் சித்திரவதை செய்கிறாள். ஏதாவது இரவில் என்னை கொன்றுவிடுவாள்" என்று அவர் வேதனையுடன் தெரிவித்தார்.
மேலும், அவரது மனைவி ஏற்கனவே ஒருமுறை தன்னைக் கடித்துள்ளதாகவும், அவர் பாம்பாக மாறி இரவு நேரங்களில் துரத்துவதாகவும் அவர் கூறியுள்ளார்.இந்தப் புகார் சமூக வலைதளம் 'எக்ஸ்'வில் (முன்னர் ட்விட்டர்) வேகமாகப் பரவியது.
பலர் இதைப் பற்றி கிசுகிசுத்தனமாகக் கருத்து தெரிவித்தனர். ஒரு பயனர், "அவள் யாரெல்லாம் கடித்திருக்கலாம்" என்று கூறியுள்ளார். மற்றொருவர், "நாகமணியை எங்கேயாவது மறைத்திருக்கிறீர்களா?" என்று ஏளனமாக டுவிட்ட் அடித்தார்.
"நீயும் பாம்பாக மாறிவிடு" என்று ஒருவர் கூறினார். "இந்த ஆண் ரொம்ப அதிர்ஷ்டம். திருமண வாழ்க்கையில் ஸ்ரீதேவியைப் பெற்றிருக்கிறார்" என்று மற்றொரு கருத்து, திரைப்படத்தில் ஸ்ரீதேவி பாம்பாக மாறும் கதையை மேற்கோள் காட்டி, விமர்சித்தது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளார். உப-பிரிவு ஆட்சியர் மற்றும் காவல்துறையினருக்கு விசாரணை நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. காவல்துறை இதை மனநலத் துன்புறுத்தல் வழக்காகக் கருதி விசாரணையைத் தொடங்கியுள்ளது.
மெராஜின் கூற்றுகளின் உண்மைத்தன்மையை ஆராய்ந்து, தேவையான நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.இந்தச் சம்பவம், குடும்பப் பிரச்சினைகள் மற்றும் மனநலப் பிரச்சினைகளைத் தொடர்புபடுத்தி, சமூகத்தில் பல்வேறு விவாதங்களைத் தூண்டியுள்ளது.
விசாரணை முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Summary : In Uttar Pradesh's Sitapur district, Meraj from Lodhsa village shocked officials during Samadhan Diwas by claiming his wife Naseemun transforms into a snake at night, chasing and attempting to bite him multiple times.
He alleges mental torture and past bites. The District Magistrate ordered an investigation by police and SDM, treating it as potential harassment. The bizarre story went viral on X, sparking jokes referencing films like Nagina.


