அந்த உறுப்பில் திடீர் மாற்றம்.. இரவில் பாம்பாக மாறும் மனைவி.. கணவன் பகீர் ஆதாரம்..
உத்தரவுசிதபூர், அக்டோபர் 7 : உத்தரப் பிரதேசத்தின் சிதபூர் மாவட்டத்தில் ஒரு ஆண் தனது மனைவி இரவில் பாம்பாக மாறி தன்னை கடிக்க முயல்வதாக அதிர்ச்சி புகாரளித்துள்ளார். இந்தப் புகார் சமூக வலைதளங்களில் பரவி, பல்வேறு கிசுகிசுக்களை ஏற்படுத்தியுள்ளது. மஹ்மூதாபாத் பகுதியின் லோத்சா கிராமத்தைச் சேர்ந்த மெராஜ் என்ற இளைஞன், மாவட்ட ஆட்சியர் முன் நடைபெற்ற சமாதான் திவாஸ் (பொது புகார் தீர்வு நாள்) நிகழ்ச்சியில் இந்தப் புகாரைப் பதிவு செய்தார். வழக்கமாக மின்சாரம், சாலைகள், ரேஷன் கார்டு போன்ற பிரச்சினைகளை மக்கள் கொண்டு வரும் இந்நிகழ்ச்சியில், மெராஜ், "சார், என் மனைவி நசீமூன் இரவில் பாம்பாக மாறி என்னைத் துரத்தி கடிக்க முயல்கிறாள். திடீரென அவள் முகமெல்லாம் பாம்பு போல மாறுகிறது.. என்னை ஒரு முறை கடித்தே விட்டால், இங்க பாருங்க ஆதாரம் என கழுத்துக்கு கீழே இருந்த தழும்பை காட்டியுள்ளார். மெராஜின் கூற்றுப்படி, அவரது மனைவி பலமுறை தன்னை கொல்ல முயன்றுள்ளார். "எவ்வளவு தடவை தூங்கும்போது எழுந்து தப்பித்துக்கொண்டேன். என் மனைவி என்னை மனதளவில் சித்திரவதை செய்கிறாள். ஏதாவது இரவில் என்னை கொன்றுவிடுவாள்" என்று அவர...