“தாயின் சடலத்தின் முன் காதலனுடன் உல்லாசம்” இறுதியில் நேர்ந்த கொடூரம்.. ஒரே நேரத்தில் 2 காதலர்களுடன் கர்ப்பம்..

ஹைதராபாத் (நவ. 1) : காதல் விஷயத்தில் சில சமயம் குருட்டுத்தனமாக நடந்துகொள்ளும் இளைஞர்கள், இளம்பெண்கள் எந்த அளவுக்கு அதீத முடிவுகளை எடுக்கவும் தயங்க மாட்டார்கள். ஹைதராபாத்தில் இத்தகைய ஒரு கொடூர சம்பவம் நடந்துள்ளது. தனது காதலுக்கு ஒப்புதல் அளிக்க மறுத்த தாயின் கழுத்தில் துப்பட்டாவை இறுக்கி, மகளே கொலை செய்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

தனது தாய் காணாமல் போய்விட்டார் என்று காவல்துறையினருக்கு புகார் அளித்திருந்த ஹைதராபாத்தைச் சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி கீர்த்தி ரெட்டி, இந்தக் கொலையின் காரணகர்த்தி ஆவார். அவர் புகார் அளித்து ஒரு வாரத்துக்குப் பிறகு அவரே கொலை குற்றத்தில் கைது செய்யப்பட்டார்.

அவருடன் இந்தக் கொலையில் உடந்தையாக இருந்த அவரது காதலன் சஷிகுமார் என்பவரும் கைது செய்யப்பட்டார்.

சம்பவம் என்ன?:

ஹைதராபாத்தைச் சேர்ந்த 38 வயது பெண் ரஜிதாவுக்கு, தனது மகள் கீர்த்தி, சஷிகுமாருடன் காதல் வைத்திருப்பது பிடிக்கவில்லை. அம்மாவின் வார்த்தையைக் கேட்டு கீர்த்தியும் வேறொரு இளைஞரான பாலா ரெட்டி என்பவரை திருமணம் செய்துகொள்ள ஒப்புக்கொண்டார். அவன் செல்வந்தர் என்பதால் திருமணத்திற்கு முன்பே அவனுடன் உலாவத் தொடங்கினார்.

மேலும், நெருக்கம் அதிகமாகி பாலா ரெட்டியுடன் உடலுறவும் வைத்துக்கொண்டார் கீர்த்தி. இதனால் கோபமடைந்த சஷிகுமார், தன்னை திருமணம் செய்யாவிட்டால் நீ திருமணம் செய்யப்போகும் பாலா ரெட்டியை கொலை செய்வேன் என்று மிரட்டினார்.

மேலும், கீர்த்தி தன்னுடனும், பாலா ரெட்டியுடனும் உல்லாசமாக இருக்கும் இரண்டு வீடியோக்களையும் வைரலாக்குவேன் என்று பிளாக்மெயில் செய்தார். சஷிகுமாரின் வார்த்தைக்கு பயந்த கீர்த்தி, அவன் சொன்னபடி கேட்கத் தொடங்கினார்.

சஷிகுமாருடன் திருமணத்துக்கு ஒப்புக்கொள்ளாத ரஜிதாவை கொலை செய்ய வேண்டும் என்று சதித்திட்டம் தீட்டினார் மகள் கீர்த்தி. அதற்கு சஷிகுமாரையே பயன்படுத்தினால் தன்மீது யாருக்கும் சந்தேகம் வராது என்று திட்டம் வகுத்தார். அக்டோபர் 19 அன்று ஹயாத் நகரில் உள்ள ரஜிதாவின் வீட்டில் அவரை இருவரும் சேர்ந்து கொலை செய்தனர்

பின்னர், தன்மீது சந்தேகம் வரக்கூடாது என்பதால் காவல் நிலையத்துக்குச் சென்று அம்மா காணாமல் போய்விட்டார் என்று புகார் அளித்தார். ரஜிதாவைத் தேடத் தொடங்கிய காவல்துறையினருக்கு எந்தத் தடயங்களும் கிடைக்கவில்லை. அம்மாவைக் கொன்ற கீர்த்தி, சடலத்தை இரவு முழுதும் வீட்டிலேயே வைத்திருந்தார்.

தாயின் பிணம் வீட்டில் இருக்கும் போதே, மது போதையில் இருந்த தனது காதலன் சஷிகுமாருடன் உடலுறவு கொண்டார். பின்னர், இருவரும் சேர்ந்து சடலத்தை ரயில்வே தண்டவாளத்தில் போட்டுவிட்டு வந்தனர்.

தாய் ரஜிதா காணாமல் போன வழக்கில் கீர்த்தியின் பங்கு குறித்து சந்தேகப்பட்ட காவல்துறையினர் அவரை விசாரித்தபோது உண்மையை ஒப்புக்கொண்டார். ஆனால், சடலத்தை ரயில்வே தண்டவாளம் வரை தூக்கி செல்ல உனக்கு உதவியது யார்..? என்று கிடுக்குப்பிடி விசாரணையை தொடங்கிய போலீசாருக்கு, அவருக்கு உறுதுணையாக இருந்து, மிரட்டி கொலை செய்ய வைத்த சஷிகுமார் என்பது தெரிய வந்தது.

சஷிகுமார் மற்றும் கீர்த்தி இடையிலான வாட்ஸ்அப் உரையாடல்கள், வீடியோக்கள், போன் அழைப்பு பட்டியல்களை சோதனை செய்த பிறகு காவல்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டு சஷிகுமாரை விசாரித்தனர்.

பாலா ரெட்டி மற்றும் தன்னுடன் கீர்த்தி ரெட்டி உடலுறவு கொள்ளும் வீடியோவை சமூக வலைதளங்களில் பகிரக்கூடாது என்றால் 10 லட்ச ரூபாய் கொடுக்க வேண்டும் என்று கேட்டேன். அதற்கு, கீர்த்தியோ, என் அம்மா ரஜிதாவை கொலை செய்ய வேண்டும் என்று கீர்த்தி கூறினால்.

அவள் ஒரே மகள் என்பதால் அம்மாவைக் கொன்றால் தங்கள் காதலுக்கு யாரும் தடையாக இருக்க மாட்டார்கள் என்றும் அத்துடன் அனைத்து சொத்துக்களும் தனக்கு தான் கிடைக்கும். அதில், உனக்கு 10 லட்சம் கொடுக்கிறேன் என்று கூறி இந்த கொலையை செய்ய வைத்தாள் கீர்த்தி ரெட்டி என்று சஷிகுமார் கூறியது காவல் நிலையத்தை அதிர வைத்தது.

லாரி ஓட்டுநராக இருந்த கீர்த்தியின் தந்தை வீட்டை விட்டு வெளியே அதிக நேரம் செலவிடுவார். வீட்டுக்கு வந்தால் மது அருந்தி தனது மனைவி ரஜிதாவுடன் சண்டையிடுவார். இந்த தம்பதிக்கு கீர்த்தி ஒரே மகள் ஆவார். வேலையில்லாமல் அலைந்து திரிந்த சஷிகுமார், கீர்த்தியை தனது காதல் வலையில் வீழ்த்தினார்.

பாலா ரெட்டியுடனும் உடலுறவு வைத்திருந்த கீர்த்தி கர்ப்பமடைந்தார். அப்போது சஷிகுமார் அவரை அழைத்துச் சென்று கருக்கலைப்பு செய்தார்.

கொலை நடந்த நாளில் என்ன நடந்தது?

கீர்த்தியின் அப்பா லாரி ஓட்டுநர் ஸ்ரீனிவாஸ் ரெட்டி வெளியே சென்றிருந்தபோது இரவு சஷிகுமார் கீர்த்தியின் வீட்டுக்கு வந்தார். ஹாலில் சோபாவில் படுத்து மொபைலில் பார்த்துக்கொண்டிருந்த ரஜிதாவின் முகத்தில் கீர்த்தி மிளகாய்ப் பொடியை தூவினார். பின்னர் அனைத்து விளக்குகளையும் அணைத்து, தாயின் மீது ஏறி அமர்ந்து துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கொன்றார் என்று ராசகொண்டா கமிஷனர் மகேஷ் பகவத் தெரிவித்தார்.

பின்னர், ரஜிதாவின் சடலத்தை படுக்கையறைக்கு கொண்டுசென்று அதே வீட்டில் 3 நாட்களுக்கு சஷிகுமாருடன் வசித்தார் கீர்த்தி. தனது வீட்டில் அம்மாவின் சடலத்தை வைத்துக்கொண்டு சஷிகுமாருடன் உடலுறவு கொண்ட கீர்த்திக்கு, தனது செயல் அக்கம்பக்கத்தினருக்கு தெரிந்தால் என்ன ஆகும் என்ற பயம் ஏற்பட்டது. தாயின் சடலத்தின் துர்நாற்றம் வரத் தொடங்கியதும் ராமன்னபேட்டை ரயில்வே தண்டவாளத்தில் வீசினர்.

பின்னர் வீட்டில் இரத்தம் தோய்ந்த பெட் ஷீட்களை எரித்தனர். இதன்பிறகு சஷிகுமார் சொன்னபடி கீர்த்தி தனது தந்தையிடம் பொய் சொல்லி காவல் நிலையத்துக்குச் சென்று தனது தாய் காணாமல் போய்விட்டார் என்று புகார் அளித்தார்.

காவல்துறை விசாரணையின்போது கீர்த்தியின் தந்தை ஸ்ரீனிவாஸ் ரெட்டி தனது மகள் மீது சந்தேகம் தெரிவித்தார். அப்போது வழக்கு வெளிச்சத்துக்கு வந்தது. ரஜிதாவைக் கொன்ற பிறகு அம்மாவின் மொபைலிலிருந்தே தான் திருமணம் செய்யப்போகும் பாலா ரெட்டியின் அப்பாவின் மொபைலுக்கு போன் செய்த கீர்த்தி, தனது தாய் போல பேசினார். நான் நலகொண்டாவுக்கு மருத்துவ பரிசோதனைக்குச் செல்கிறேன்.

திரும்பி வந்த பிறகு சந்திப்போம். அதுவரை கீர்த்தியை உங்கள் வீட்டிலேயே வைத்துக்கொள்ளுங்கள் என்று சொன்னார். இதனால் யாருக்கும் தன்மீது சந்தேகம் வராது என்பது அவரது நோக்கம். அதன்படி அக்டோபர் 23 அன்று பாலா ரெட்டியின் வீட்டுக்குச் சென்ற கீர்த்தி அக்டோபர் 25 வரை அங்கேயே இருந்தார்.

ரஜிதா எங்கே என்று அக்கம்பக்கத்தினர், உறவினர்களின் கேள்விக்கு கீர்த்தி வெவ்வேறு விதமான பதில்களை அளித்தார். தனது தந்தையுடன் சண்டையிட்டு அம்மா வீட்டை விட்டு சென்றுவிட்டார் என்று சிலரிடம் சொன்னார், வேறு சிலரிடம் உறவினர்கள் வீட்டுக்குச் சென்றுள்ளார் என்று சொன்னார்.

ஸ்ரீனிவாஸ் ரெட்டி வீட்டுக்கு திரும்பி வந்தபோது வீட்டு கதவு பூட்டியிருந்தது. மகளுக்கு போன் செய்த ஸ்ரீனிவாஸ் ரெட்டி அவரை வீட்டுக்கு வரச் சொன்னார். அப்போது அப்பாவிடம் அம்மா இன்னும் வரவில்லை என்று அழுது புலம்பி கீர்த்தி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

ஆனால், அவர் செய்த திட்டம் அவருக்கே திருப்புமுனையாக அமைந்தது. தற்போது சஷிகுமார் மற்றும் கீர்த்தி இருவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Summary in English : In Hyderabad, 19-year-old college student Kirti Reddy strangled her mother Rajitha with a dupatta, orchestrated by boyfriend Shashikumar who blackmailed her with intimate videos involving another man. They kept the body at home for three days, engaging in relationship, then dumped it on railway tracks. Both were arrested after police investigation revealed the plot.