“தாயின் சடலத்தின் முன் காதலனுடன் உல்லாசம்” இறுதியில் நேர்ந்த கொடூரம்.. ஒரே நேரத்தில் 2 காதலர்களுடன் கர்ப்பம்..
ஹைதராபாத் (நவ. 1) : காதல் விஷயத்தில் சில சமயம் குருட்டுத்தனமாக நடந்துகொள்ளும் இளைஞர்கள், இளம்பெண்கள் எந்த அளவுக்கு அதீத முடிவுகளை எடுக்கவும் தயங்க மாட்டார்கள். ஹைதராபாத்தில் இத்தகைய ஒரு கொடூர சம்பவம் நடந்துள்ளது. தனது காதலுக்கு ஒப்புதல் அளிக்க மறுத்த தாயின் கழுத்தில் துப்பட்டாவை இறுக்கி, மகளே கொலை செய்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. தனது தாய் காணாமல் போய்விட்டார் என்று காவல்துறையினருக்கு புகார் அளித்திருந்த ஹைதராபாத்தைச் சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி கீர்த்தி ரெட்டி, இந்தக் கொலையின் காரணகர்த்தி ஆவார். அவர் புகார் அளித்து ஒரு வாரத்துக்குப் பிறகு அவரே கொலை குற்றத்தில் கைது செய்யப்பட்டார். அவருடன் இந்தக் கொலையில் உடந்தையாக இருந்த அவரது காதலன் சஷிகுமார் என்பவரும் கைது செய்யப்பட்டார். சம்பவம் என்ன?: ஹைதராபாத்தைச் சேர்ந்த 38 வயது பெண் ரஜிதாவுக்கு, தனது மகள் கீர்த்தி, சஷிகுமாருடன் காதல் வைத்திருப்பது பிடிக்கவில்லை. அம்மாவின் வார்த்தையைக் கேட்டு கீர்த்தியும் வேறொரு இளைஞரான பாலா ரெட்டி என்பவரை திருமணம் செய்துகொள்ள ஒப்புக்கொண்டார். அவன் செல்வந்தர் என்பதால் திருமணத்திற்கு முன்பே அவனுடன் உல...