சென்னை, நவம்பர் 26, 2025 : இன்றைய டிஜிட்டல் உலகில் கல்வி என்பது வகுப்பறையை தாண்டி யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களுக்கு பரவியுள்ளது. பள்ளி மாணவர்கள் வீட்டில் ஹோம்வொர்க் செய்யும் போது இணைய வீடியோக்களை நாடுவது சகஜமாகி விட்டது.
ஆனால், இந்த வசதியை தவறாக பயன்படுத்தி, ஒரு இளம் பெண் ஆசிரியை தனது கணக்கு பாட வீடியோக்களில் 'நாட்டாமை' பட டீச்சரை போல கவர்ச்சியான உடையில் தோன்றி, மாணவர்களின் கவனத்தை திசை திருப்புவதாக கடும் விமர்சனம் எழுந்துள்ளது.

இது வெறும் உடை சர்ச்சையா? அல்லது டீனேஜ் மாணவர்களின் உளவியலை பாதிக்கும் ஆபத்தான விளையாட்டா? நெட்டிசன்களின் உணர்ச்சிபூர்வமான கோபம் இணையத்தை அதிர வைத்து வருகிறது!
எட்டாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு கணக்கு பாடம் கற்பிக்கும் இந்த ஆசிரியை, தனது வீடியோக்களில் திட்டமிட்டு கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு பாடம் நடத்துகிறார் என்பது தான் சர்ச்சையின் மையம்.
"நாட்டாமை படத்தில் வரும் டீச்சர் போல உடை உடுத்தி, வியூஸ் குவிக்கிறார்!" என்று இணையத்தில் ட்ரோல் செய்யப்படுகிறார். ஒரு வீடியோவில் அப்படி இருந்தால் பரவாயில்லை, ஆனால் அனைத்து வீடியோக்களிலும் இதே பாணி தான்.
"இது கல்வியா? அல்லது கிளாமர் ஷோவா?" என்று கேள்வி எழுப்பும் நெட்டிசன்கள், இவரது உடை மாணவர்களின் எண்ணங்களை திசை திருப்புவதாக குற்றம்சாட்டுகின்றனர். குறிப்பாக, டீனேஜ் வயதில் இரண்டாம் கட்ட வளர்ச்சி பருவத்தில் இருக்கும் மாணவர்களுக்கு, ஆசிரியர்கள் கண்ணியமான உடையுடன் தான் பாடம் நடத்த வேண்டும் என்பது அவர்களின் வாதம்.
"தேவதை டீச்சர்" என தன்னைத்தானே அழைத்துக் கொள்ளும் இவர், "தேவதைகள் இப்படி ஆபாச உடையில் இருப்பார்களா?" என்று கண்டனங்கள் மழை பொழிகின்றன.இந்த சர்ச்சை இங்கேயே நிற்கவில்லை. இவரது மற்ற சோசியல் மீடியா பக்கங்களை தோண்டிப் பார்த்தால், அதிர்ச்சிகரமான உண்மை வெளியாகியுள்ளது!
கண்ணாடி போட்டால் டீச்சர், கழட்டினால் டான்சர் என்பது போல, வேறு பெயரில் ரீல்ஸ் வீடியோக்களில் வெறும் உள்ளாடை போன்ற ஆடைகளை அணிந்து கொண்டு கிளாமர் ஆட்டம் போட்டிருக்கிறார்.
"என் படுக்கையில பாதி எடம் ஒனக்குத்தான்" போன்ற பாடல்களுக்கு அரைகுறை உடையில் குத்தாட்டம், அதுவும் பிளாக்போர்டு முன்பு "என் பேச்சவ மூச்சவ" பாடலுக்கு கவர்ச்சி நடனம் – இவை எல்லாம் ஏ சர்டிபிகேட் ரகம்!
"என்ன எங்கயோ பாத்திருக்கேன்ன்னு சொன்னியே.. இன்னுமா.. என்ன தெரியல..? என்று கூலி பட பிளாஷ்பேக் போல, இவருக்கும் ஒரு கிழுகிழு பின்னணி இருக்கிறது!" என்று நெட்டிசன்கள் கொந்தளிக்கின்றனர்.
இதனால், மாணவர்கள் கணக்கு பாடம் தேடினால் இவரது கிளாமர் வீடியோக்கள் வருவதாக புகார் எழுந்துள்ளது. "இது ஆபத்தானது! டீனேஜ் மாணவர்களை குறிவைத்து இப்படி செய்வது குற்றம்!" என்று கமெண்ட்கள் பரவி வருகின்றன.தமிழ்நாட்டில் ஆசிரியைகளின் உடை குறித்து நீண்ட காலமாக சர்ச்சைகள் உண்டு.
2019-ல் தமிழக அரசு வெளியிட்ட அரசாணை இது தொடர்பான விவாதங்களை தூண்டியது. சமூக செயற்பாட்டாளரும் ஆசிரியருமான மகாலட்சுமி, மாணவர்களின் உளவியலை புரிந்து கொண்டு சுடிதார் அணிந்து பாடம் நடத்திய அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.
"ஒரு சிறுவன் என் உள்ளாடையை பார்த்து கேட்டான்.அதனால் நான் சுடிதார் அணியத் தொடங்கினேன். ஆசிரியர்களுக்கு சமூக பொறுப்பு அதிகம்!" என்று அவர் கூறியது இன்றும் பொருந்தும்.
ஆனால், இந்த யூடியூப் டீச்சர் லைக்குகள், வியூஸ், சப்ஸ்கிரைபர்ஸ் என்ற பெயரில் கல்வியை கேலிக்கூத்தாக்குகிறாரா? டிஎன்பிஎஸ்சி மாணவர்களும் இவரது வீடியோக்களை பார்க்கும் போது, இது அவர்களின் கவனத்தை பாதிக்காதா?
நெட்டிசன்களின் கோபம் உச்சத்தில்! "இது மாணவர்களின் எதிர்காலத்தை அழிக்கும் விஷம்! காவல் துறையில் புகார் செய்வோம்!" என்று பலர் அறிவித்துள்ளனர்.
இந்த 'நாட்டாமை' ஆசிரியை விரைவில் கைது செய்யப்படலாம்? உடை என்பது தனிப்பட்ட உரிமை தான், ஆனால் கல்வி என்ற பெயரில் இப்படி தவறு செய்வது ஏற்புடையதா? இந்த சர்ச்சை மாணவர்களின் நலனை மையமாக கொண்டு தீர்வு காண வேண்டும் என்பதே அனைவரின் உணர்ச்சிபூர்வமான கோரிக்கை. இணைய உலகில் கல்வி வளர வேண்டுமே தவிர, ஆபாசம் பரவக்கூடாது! இது குறித்து உங்கள் கருத்து என்ன?
Summary in English : A young YouTube math teacher for 8th-10th graders sparks outrage by wearing revealing outfits akin to the 'Nattamai' film character, allegedly to boost views. Critics claim it distracts teenagers in puberty, while her glamorous dance reels on other platforms intensify backlash. Netizens threaten police complaints over student welfare risks.


