Ex.மிலிட்டரி மரணத்தில் திடுக்கிடும் திருப்பம்.. சினிமாவுல கூட இப்படி நடக்காது.. மனைவி செஞ்ச வேலையை கேட்டா தூங்கமாட்டீங்க..

திருவள்ளூர், நவம்பர் 5: திருவள்ளூர் மாவட்டம் திருவாளங்காடு ஒன்றியத்தில் உள்ள முத்துக்கொண்டாபுரத்தைச் சேர்ந்த 47 வயதான முன்னாள் ராணுவ வீரர் வெங்கடேசன், தனது மனைவி சந்தியாவுடன் வசித்து வந்தார். திடீரென ஒரு நாள் சாலை விபத்தில் அகால மரணம் அடைந்தார்.

இதனை தொடர்ந்து அவரது இறுதிசடங்குகள் நடைபெற்று முடிந்தது. நாட்கள் நகர்ந்தன. ஆனால், வெங்கடேசன் மரணத்தில் மறைந்திருந்த உண்மை, சந்திரமுகி படத்தில் தலைவர் "பூப்பந்தை யாரும் நீரில் பொத்தித்தான் வெச்சாலும் பந்து வரும் தண்ணி மேலத்தான்" என்று பாடுவது போல அமுக்கி வைக்கப்பட்ட உண்மை மேலே வந்தது. எப்படி வந்தது..? பின்னால் இருந்த உண்மை என்ன..? என்ற சினிமாவை மிஞ்சும் திருப்பங்கள் நிறைந்த கிரைம் கதை தான் இது.

அதற்கு முன், இது போன்ற விறுவிறுப்பான நிஜத்தில் நடந்த கிரைம் கதைகளை தெரிந்து கொள்ள நம்முடைய கிரைம் தமிழகம் டெலிகிராம் சேனலில் இணைந்து கொள்ளுங்கள். சேனலின் லிங்க் பதிவின் முடிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

வெங்கடேசன், தனது 35 வயது மனைவி சந்தியாவுடன் வாழ்ந்து வந்தார். இந்தத் தம்பதிக்கு இரு குழந்தைகளும் உள்ளனர். சென்ற ஜனவரி மாதம் 3-ஆம் தேதி, வெங்கடேசன் பைக்கில் வீட்டை விட்டு வெளியேறியபோது, அரவமின்றி இருந்த ரோட்டில் அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று அவர்மீது மோதி தப்பினது.

சம்பவ இடத்திலேயே உயிரிழந்த வெங்கடேசனின் உடலைப் பார்த்து, உற்றார் உறவினர்கள் அழுது புலம்பினர். திருவாளங்காடு காவல் நிலையத்தில் பதிவான வழக்கு "விபத்து" என்று முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

ஆனால், கிட்டத்தட்ட 20 நாட்களுக்கு மேல் மூடி மறைக்கப்பட்ட இந்த "நாடகம்" இன்று உண்மையாக அம்பலமானது. விபத்தில் சிக்கிய சதீஷ் என்பவரை திருவாளங்காடு போலீஸ் கைது செய்து ஜாமீனில் விடுவித்தது. இதற்கிடையில், சென்னை பெரும்பாக்கத்தைச் சேர்ந்த ரவுடிகள் மணிகண்டன், லோகேஸ்வரன், ஸ்ரீராம் ஆகியோர் சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்து தலைமறைவாகினர்.

அவர்களின் செல்போன் கண்காணிப்பில், சதீஷுடன் தொடர்பு கொண்டிருந்ததை சென்னை போலீஸ் கண்டுபிடித்தது. இதன் விளைவாக, சதீஷை மீண்டும் விசாரணை செய்தபோது, தலைமறைவு குற்றவாளிகளான மூவரும் கைது செய்யப்பட்டனர்.

விசாரணையில், வெங்கடேசனின் மனைவி சந்தியாவின் கள்ளக்காதல் வெளியானது. பக்கத்து ஊரைச் சேர்ந்த 40 வயதான லோகேஷ் என்பவருடன் சந்தியாவுக்கு உறவு ஏற்பட்டது.

வெங்கடேசனின் குடும்ப நண்பராகப் பழகிய லோகேஷ், சந்தியாவுடன் உறவை வளர்த்து வந்துள்ளார். வெங்கடேசன் வீட்டில் இல்லாத போது சந்தியாவுடன் உல்லாசமாக இருந்து வந்துள்ளார்.

கணவனுக்காக இடத்தில் லோகேஷை வைத்து இன்பமாக இருந்து வந்துள்ளார் சந்தியா. இது வெங்கடேசனுக்கு தெரிந்ததும், குடும்பத்தில் பிரளயம் வெடித்தது. தினசரி அடி, உதை, சித்திரவதை என்று சந்தியா புகார் கொடுத்தார். விவாகரத்து கோரி நீதிமன்றத்தை அணுகிய சந்தியாவுக்கு வாய்தா மட்டுமே கிடைத்தது.

எனவே, இருவரும் ஒரே வீட்டில் வாழ வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.இதனால், வெங்கடேசனின் ஆத்திரம் அதிகரித்து, சந்தியாவை மேலும் துன்புறுத்தினார். சந்தியாவின் அண்ணன் சண்முகம் தலையிட முயன்றபோது, அவரையும் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

ஒரு பக்கம் கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருக்க முடியவில்லையே என்ற உடலுறவு வெறி.. மறு பக்கம், கணவனிடம் தேவ**யா என்ற பட்டத்துடன் தினமும் அடி, உதை.. இந்த நரக வாழ்க்கையைத் தாங்க முடியாத சந்தியா, "ஒரே அடியாக" வெங்கடேசனை தீர்த்துக் கட்ட முடிவு செய்தார்.

அவரது அண்ணன் சண்முகமும், கள்ளக்காதலன் லோகேஷும் இதற்கு ஒப்புதல் அளித்தனர்.லோகேஷ், தனது நண்பர் சதீஷை நாடி, வெங்கடேசனின் உயிருக்கு மூன்று லட்சம் ரூபாய் விலை பேசினார். சதீஷ், தலைமறைவு ரவுடிகளான மணிகண்டன், லோகேஸ்வரன், ஸ்ரீராமை கூலிப்படையாக அமர்த்தி, கொலைத் திட்டத்தை செயல்படுத்தினார்.

சம்பவத்தன்று, சதீஷ் காரில் கூலிப்படையினரை ஏற்றி வெங்கடேசனைப் பின்தொடர்ந்தார். முதலில் பைக்கில் மோதி கீழே விழ வைத்து, பின்னர் இரும்பு ராட்டால் அடித்து கொன்றனர். விபத்து போல கிரைம் ஸ்பாட்டை அமைத்து, அனைவரும் தப்பினர்.

சதீஷின் வாக்குமூலத்தில், வெங்கடேசனுக்கும் தனக்கும் முந்தைய விரோதம் இருந்ததாகவும், சந்தியாவுக்கும் இதற்கு எந்த தொடர்பும் இல்லை என கூறப்பட்டது. ஆனால், போலீஸ் அதை நம்பவில்லை.

துருவி துருவி விசாரித்ததில், குடும்ப குத்துவிளக்கு சந்தியாவின் சூழ்ச்சி அம்பலமானது. இதனை தொடர்ந்து, பிப்ரவரி மாதம் சந்தியா, சண்முகம், லோகேஷ், சதீஷ், மணிகண்டன், லோகேஸ்வரன், ஸ்ரீராம் உட்பட எட்டு பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் சிலர் தலைமறைவு என்பதால், போலீஸ் தீவிரமாகத் தேடி வருகிறது. இந்தச் சம்பவம், தகாத உறவுகள் எவ்வாறு ஆபத்தை மட்டுமே விளைவிக்கின்றன என்பதை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

வெங்கடேசனின் குடும்பம் இன்றும் அதிர்ச்சியில் உழல்கிறது. போலீஸ் அதிகாரிகள், "எந்தவொரு மறைப்பும் நீண்டகாலம் நீடிக்காது; உண்மை வெளிய வரும்" எனத் தெரிவித்துள்ளனர்.

Summary : Ex-army veteran Venkatachalam (47) from Thiruvallur was murdered in a staged bike accident by wife Sandhya (35), fueled by her affair with Lokesh and domestic abuse. Failed divorce led to plot with brother Shanmugam; hired hitmen for Rs 3 lakhs. Chennai police's phone surveillance exposed it, arresting eight suspects.