Posts

Showing posts with the label staged accident

விபத்தில் சிக்கிய பெண்! உதவி செய்வது போல நடித்து HIV ரத்தம் நிறைந்த ஊசியை ஏற்றிய பெண்! கொடூர காரணம்!

Image
கர்னூல் மாவட்டம், ஆந்திரப் பிரதேசம். ஜனவரி 9, 2025 அன்று மதியம் 2.30 மணியளவில், ஒரு பெண் மருத்துவர் தனது ஸ்கூட்டரில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அவர் ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றி வந்தார். அன்று டியூட்டி முடித்து, மதிய உணவுக்கு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். திடீரென, ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் வேகமாக அவரது ஸ்கூட்டரை மோதினர். அவர் சாலையில் விழுந்து காயமடைந்தார். காயம் பட்டு தவித்துக் கொண்டிருந்த அவரை நோக்கி, ஒரு பெண் அருகில் வந்தாள். "அக்கா, உங்களுக்கு என்ன ஆச்சு? வாருங்கள், ஆட்டோவில் ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டு போகிறேன்" என்று அன்பாகக் கூறினாள். அவள் பெயர் பி. போயா வசுந்தரா (34). ஆட்டோவில் ஏற்றும் போது, வசுந்தரா திடீரென ஒரு ஊசியை எடுத்து, அந்த மருத்துவரின் உடலில் செலுத்தினாள். அது எச்.ஐ.வி நோய்த்தொற்று உள்ள இரத்தத்தை கொண்ட ஊசியாக இருந்தது! மருத்துவர் அதிர்ச்சியில் கூக்குரலிட்டு உதவி கேட்டார். உடனே வசுந்தராவும் அவரது கூட்டாளிகளும் ஓடி மறைந்தனர். இது திட்டமிட்ட சதி என்பது பின்னர் தெரிய வந்தது. வசுந்தராவின் முன்னாள் காதலன், திரும...

நான்கு நாட்களில் மேரேஜ்.. மயானத்தில் சாடலாமக கிடந்த மணப்பெண்.. விசாரணையில் வெளியான பகீர் தகவல்..!

Image
ஸ்ரீபெரும்புதூர், ஏப்ரல் 3 : காதல் என்ற பெயரில் தொடங்கிய உறவு, கொடூர கொலையில் முடிந்த அதிர்ச்சி சம்பவம் ஒன்று, காஞ்சிபுரம் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருமணத்திற்கு ஒரேயொரு நாள் முன்பு, காதலன் தனது காதலியை கல்லால் சரமாரியாக தாக்கி கொன்ற சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. வெவ்வேறு சாதியைச் சேர்ந்தவர்கள் என்று குடும்பங்கள் எதிர்த்தபோதும், போராடி திருமணம் செய்யத் தயாரான ஜோடி, இப்படி ஒரு பயங்கர முடிவை சந்திக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. போலீசார் கைது செய்த காதலன், விசாரணையில் கொடூரமான உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார். காதல் பயணம்: சாதி தடைகளை மீறிய உறவு காஞ்சிபுரம் மாவட்டம் கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த 24 வயது இளம்பெண் விக்னேஸ்வரி, பிள்ளைப்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார். அதே தொழிற்சாலையில் வேலை செய்து வந்த புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 27 வயது இளைஞன் தீபன், விக்னேஸ்வரியுடன் கடந்த இரண்டு ஆண்டுகளாக தீவிர காதலில் இருந்துள்ளனர். இருவரும் ஒரே இடத்தில் பணிபுரிந்ததால், அவர்களின் உறவு வலுப்பெற்றது. ஆனால், இந்த காதலை அறி...

மனைவிக்கு ஆண் நண்பரை போல அந்தரங்க மெசேஜ் அனுப்பிய கணவர்.. கொடூரத்திற்கு வழி வகுத்த மனைவியின் ரிப்ளை..!

Image
ஆந்திராவின் சூரியனும், மண்ணும், மக்களின் வாழ்க்கையும் இணைந்து நடனமாடும் பிரகாசம் மாவட்டத்தில், ஒரு சிறிய கிராமத்தில், கோட்டா ராதா என்ற பெண் பிறந்தாள். அவள் 35 வயதான போது, அவளது வாழ்க்கை ஒரு கிரைம் நாவலின் பக்கங்களைப் போல, அழகும், அன்பும், துரோகமும் கலந்து நிறைந்திருந்தது. ராதா, ஹைதராபாத் நகரின் ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் பணியாற்றும் மென்பொருள் பொறியாளர். சினிமா நடிகை போல அழகு, வாட்டசாட்டமான தோற்றம் என அழகு தேவதையாக இருந்த ராதாவிற்கு அங்கே பணியாற்றிய, மோகன் ரெட்டியுடன் காதல். விரைவில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இருவருக்கும் இரண்டு குழந்தைகள் – ஒரு மகன், ஒரு மகள் – அவர்களது வாழ்க்கையை இனிமையாக்கியிருந்தனர். ஆனால், அந்த இனிமையின் கீழ், பணத்தின் இருளும், சந்தேகத்தின் நச்சும் வளர்ந்து கொண்டிருந்தன. ராதாவுடன் பள்ளி, கல்லூரியில் சேர்ந்த படித்த நண்பர் காசி ரெட்டி. நண்பர்கள் என்ற முறையில் மிகவும் நெருக்கமாக வளர்ந்தனர். ஒரு கட்டத்தில், காசி ரெட்டி, தொழில்முறையில் தடுமாற்றங்களைச் சந்தித்தான். பலரிடம் உதவி கேட்டும் பலனில்லை. கடைசியாக ராதாவிடம், நான் புதிய தொழில் ஒன்றை தொடங்க இருக்கிறேன். அத...

அடங்காத உடலுறவு வெறி.. தலைமறைவான ரவுடிகள்.. செல்போன் பேச்சு.. பணால் ஆன பத்தினியின் பகல் வேஷம்..

Image
திருவள்ளூர், நவம்பர் 11: திருவள்ளூர் மாவட்டம், திருவாளங்காடு ஒன்றியத்தைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் வெங்கடேசன் (47) ஜனவரி 3-ஆம் தேதி சாலை விபத்தில் உயிரிழந்ததாகத் தெரிந்த நிலையில், இது திட்டமிட்ட கொலை என்பது கடந்த 20 நாட்களுக்குப் பிறகு அம்பலமானது. அவரது மனைவி சந்தியாவின் (35) தன்னுடைய அடங்காத உடலுறவு வெறியின் பின் முழித்த கள்ளக்காதல் சூழ்ச்சியில் ஈடுபட்டு, கூலிப்படையைப் பயன்படுத்தி கொலை செய்யப்பட்டதாகத் தெரியவந்துள்ளது.  இதனிடையே, சதியில் ஈடுபட்ட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.வெங்கடேசன் மற்றும் சந்தியா தம்பதிக்கு இரு குழந்தைகள் உள்ளனர். சென்ற ஜனவரி 3-ஆம் தேதி, பைக்கில் வீட்டை விட்டு வெளியேறிய வெங்கடேசன், அரவமின்றி இருந்த ரோட்டில் அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மோதி தப்பியது. சம்பவ இடத்திலேயே உயிரிழந்த அவரது உடலைப் பார்த்து உற்றார் உறவினர்கள் அழுது புலம்பினர். திருவாளங்காடு காவல் நிலையத்தில் பதிவான வழக்கு 'விபத்து' என்று முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. ஆனால், போலீஸ் விசாரணையில் இது திட்டமிட்ட கொலை என்பது வெளிப்பட்டது. தலைமறைவான ரவுடிகள்..   விசாரணையின்போது, விபத்தில் சிக்...

Ex.மிலிட்டரி மரணத்தில் திடுக்கிடும் திருப்பம்.. சினிமாவுல கூட இப்படி நடக்காது.. மனைவி செஞ்ச வேலையை கேட்டா தூங்கமாட்டீங்க..

Image
திருவள்ளூர், நவம்பர் 5: திருவள்ளூர் மாவட்டம் திருவாளங்காடு ஒன்றியத்தில் உள்ள முத்துக்கொண்டாபுரத்தைச் சேர்ந்த 47 வயதான முன்னாள் ராணுவ வீரர் வெங்கடேசன், தனது மனைவி சந்தியாவுடன் வசித்து வந்தார். திடீரென ஒரு நாள் சாலை விபத்தில் அகால மரணம் அடைந்தார். இதனை தொடர்ந்து அவரது இறுதிசடங்குகள் நடைபெற்று முடிந்தது. நாட்கள் நகர்ந்தன. ஆனால், வெங்கடேசன் மரணத்தில் மறைந்திருந்த உண்மை, சந்திரமுகி படத்தில் தலைவர் "பூப்பந்தை யாரும் நீரில் பொத்தித்தான் வெச்சாலும் பந்து வரும் தண்ணி மேலத்தான்" என்று பாடுவது போல அமுக்கி வைக்கப்பட்ட உண்மை மேலே வந்தது. எப்படி வந்தது..? பின்னால் இருந்த உண்மை என்ன..? என்ற சினிமாவை மிஞ்சும் திருப்பங்கள் நிறைந்த கிரைம் கதை தான் இது. அதற்கு முன், இது போன்ற விறுவிறுப்பான நிஜத்தில் நடந்த கிரைம் கதைகளை தெரிந்து கொள்ள நம்முடைய கிரைம் தமிழகம் டெலிகிராம் சேனலில் இணைந்து கொள்ளுங்கள். சேனலின் லிங்க் பதிவின் முடிவில் கொடுக்கப்பட்டுள்ளது. வெங்கடேசன், தனது 35 வயது மனைவி சந்தியாவுடன் வாழ்ந்து வந்தார். இந்தத் தம்பதிக்கு இரு குழந்தைகளும் உள்ளனர். சென்ற ஜனவரி மாதம் 3-ஆம் தேதி, வெங்கடேசன் ...

வீட்டுக்குள் கேட்ட முனகல் சத்தம்.. மனைவியுடன் மாறி மாறி உல்லாசம்.. விசாரணையில் சினிமாவை மிஞ்சும் ட்விஸ்ட்..

Image
சூரியன் மறைந்த, மழைத்துளிகள் பெய்யத் தொடங்கிய அந்த ஞாயிற்றிரவு, ஏற்காட்டின் மலைப்பாதைகளை மட்டும் அல்ல, ஒரு குடும்பத்தின் வாழ்வையே முழுவதுமாக மூழ்கடித்தது. சேலம் மாவட்டம், கீரைக்காடு புத்தூர் அருகேயுள்ள மோட்டுக்காடு கிராமத்தின் அமைதியான வீதிகளில், 36 வயது சிவக்குமார், தன் இருசக்கர வாகனத்தில் பயணித்தார். அன்று பகலில் சேலத்தின் சந்தைகளைத் தொட்டு, குடும்பத்திற்கான மளிகைப் பொருட்களைப் வண்டியில் வைத்துக்கொண்டு, அவன் திரும்பினான். எலக்ட்ரிசியன் பணி செய்துகொண்டிருந்த அவன் குடும்பத்தின் தூணாக நின்றவன். இரண்டு மகன்களும், ஒரு மகளும், அவர்களின் சிரிப்புகளும் – அவனது உலகம். ஆனால், அந்த உலகத்தின் நிழலில், அவனுக்கு தெரியாத ரகசியம் ஒன்று தணிந்து கொண்டிருந்தது. மாராயி. 28 வயது. சிவக்குமாரின் மனைவி. அவளது கண்களில், கிராமத்தின் அமைதியை மீறி, ஏற்காடு அசம்பூரைச் சேர்ந்த லாரி ஓட்டுனர் சந்தோஷின் உருவம் படர்ந்திருந்தது. கடந்த சில ஆண்டுகளாக, அவர்களின் கள்ளக்காதல், ஊரெல்லாம் பேச்சுக்குரியதாக மாறியிருந்தது. சிவக்குமார் நம்பவில்லை. ஒரு நாள், எதேர்ச்சையாக மனைவிடம் சொல்லாமல் வீடு திரும்பிய போது, வீட்டுக்குள் முனகல்...

‘கள்ள புருஷனுக்கு அடிமையான பெண்’.. கணவனை பொம்மை போல தூக்கி செய்த கொடூரம்.. நடுங்கிப்போன போலீஸ்..

Image
ஸ்ரீகாக்குளம் பகுதியில் உள்ள பாதப்பட்டினம் கிராமம், பொதுவாக அமைதியான ஒரு கிராமம். ஆனால், ஒரு இரவு அந்த அமைதியை உடைத்து, ஒரு பயங்கரமான குற்றச் சம்பவம் அரங்கேறியது. இது ஒரு விபத்து என்று தோன்றிய கதை, பின்னர் ஒரு கொடூரமான கொலைத் திட்டம் என தெரிய வந்த போது அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர் ஊர் மக்கள். என்ன நடந்தது..? வாங்க பாக்கலாம். நல்லி ராஜு, 35 வயதான குடும்பஸ்தர். மனைவி மௌனிகாவும், இரண்டு மகன்களும் அவரது உலகம். வேலை முடிந்து இரவு வீட்டுக்கு திரும்பும் வழக்கமுடையவர். ஆனால், அந்த இரவு அவருக்கு விதி மரணத்தை பரிசாக கொடுக்க காத்திருந்தது. நடு ரோட்டில் பைக்குடன் கவிழ்ந்து, பலத்த காயங்களுடன் இறந்து கிடந்தார் நல்லி ராஜு. அந்த வழியாகச் சென்றவர்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். காவலர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்த்தபோது, பைக் ஒரு பக்கம் கிடந்தது. "வேகமாக வந்த கார் மோதியிருக்கலாம், ஓட்டுநர் தப்பி ஓடிவிட்டார்," என்று முதலில் கருதினர். சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். நல்லி ராஜுவின் மனைவி மௌனிகா மருத்துவமனைக்கு வந்து கதறி அழுதார். அனைவரும் இதை ஒரு துரதிர...