சமந்தா 2-வது திருமணம்.. டென்ஷன் ஆன முதல் கணவர்.. நாக சைதன்யா செய்த செயல்.. நடிகைகள் சப்போர்ட்..

சென்னை: தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையான சமந்தா ரூத் பிரபு, பிரபல இயக்குனரும் தயாரிப்பாளருமான ராஜ் நெடிமோருவை இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இந்த திருமணம் திரையுலகில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ள நிலையில், சமந்தாவின் முன்னாள் கணவரும் நடிகருமான நாக சைதன்யா, அதே நாளில் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி, விவாதங்களை கிளப்பியுள்ளது.

கடந்த 2025 டிசம்பர் 1ஆம் தேதி (திங்கட்கிழமை) காலை, கோவை ஈஷா யோகா மையத்தில் சமந்தா - ராஜ் நெடிமோரு திருமணம் எளிமையாக நடைபெற்றது. ஈஷா மையத்தில் உள்ள லிங்க பைரவி கோயிலில் நடந்த பூஜையின்போது, ராஜ் நெடிமோரு சமந்தாவின் விரலில் மோதிரம் அணிவித்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

சமந்தா, தாலிக்கு பதிலாக கடவுள் உருவம் பொறிக்கப்பட்ட பெண்டண்ட் (செயின்) அணிந்திருந்தார். மேலும், அவரது கையில் சிறப்பு மோதிரமும், சிவப்பு நிற சேலையுடன் தங்க நகைகளும் அணிந்திருந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.சமந்தாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலரும் வாழ்த்துகளை பொழிந்து வருகின்றனர்.

ஆலியா பட், ஹன்சிகா, ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி ரவி, திரிஷா, பிரியங்கா சோப்ரா, கல்யாணி பிரியதர்சன், ஸ்ரத்தா கபூர், திஷா பதானி, நஸ்ரியா, அல்லு அர்ஜுனின் மனைவி சினேகா, கீர்த்தி சனோன், லாவண்யா, வரலட்சுமி சரத்குமார், மிர்னால் தாக்கூர், ராம்சரணின் மனைவி உபாசனா, பார்வதி, அனுபாமா பரமேஸ்வரன், கங்கனா ரணாவத் உள்ளிட்டோர் தங்களது இன்ஸ்டா ஸ்டோரிகளில் 'கங்கிராட்ஸ்' என பதிவிட்டு வாழ்த்தியுள்ளனர்.

சமந்தாவின் திரைப்பயணம்: தெலுங்கு திரைப்படமான 'ஏ மாயா செசாவே' மூலம் அறிமுகமான சமந்தா, தமிழில் 'விண்ணைத்தாண்டி வருவாயா' ரீமேக்கில் ஜெஸ்ஸி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

முதல் படத்திலேயே பாராட்டுகளும் விருதுகளும் குவித்த அவர், தனது முதல் ஹீரோவான நாக சைதன்யாவை காதலித்து, 2017ஆம் ஆண்டு ஹிந்து மற்றும் கிறிஸ்தவ முறையில் திருமணம் செய்து கொண்டார். இருப்பினும், நான்கு ஆண்டுகள் கழித்து 2021இல் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர், இது திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சமந்தாவின் வாழ்க்கையில் ஏற்பட்ட சோதனைகள்: விவாகரத்துக்குப் பிறகு, சமந்தா 'மயோசைடிஸ்' என்ற தன்னுடல் தாக்கு நோயால் பாதிக்கப்பட்டு, உடல் மற்றும் மனரீதியான வலிகளை சந்தித்தார். கடந்த 2024 நவம்பர் 29ஆம் தேதி, அவரது தந்தை ஜோசப் பிரபு உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.

"அப்பா, நாம் மீண்டும் சந்திக்கும் வரை" என உருக்கமான பதிவை சமந்தா இன்ஸ்டாவில் பகிர்ந்திருந்தார். இந்த சோகத்தின் நான்கு நாட்களுக்குப் பிறகு (2024 டிசம்பர் 4ஆம் தேதி), நாக சைதன்யா நடிகை சோபிதா துலிபாலாவை திருமணம் செய்து கொண்டார். அப்போது சமந்தா எந்த உணர்ச்சியும் காட்டாமல் அமைதியாக இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருவருக்குமே இரண்டாவது திருமணம்: சமந்தாவைப் போலவே, ராஜ் நெடிமோருவுக்கும் இது இரண்டாவது திருமணமாகும். அவர் ஏற்கனவே சியாமலி டே என்பவரை திருமணம் செய்து, 2022இல் விவாகரத்து பெற்றார். தற்போது இருவரும் புதிய வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் தொடங்கியுள்ளனர்.

நாக சைதன்யாவின் வைரல் பதிவு: சமந்தாவின் திருமண நாளான டிசம்பர் 1ஆம் தேதி, நாக சைதன்யா தனது இன்ஸ்டாகிராமில் 'தூதா' திரைப்படத்தின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். "தூதா ஒரு சிறந்த உதாரணம். நன்றி. தூதா வெளியாகி இரண்டு வருடங்கள் ஆகிறது. இதை சாத்தியமாக்கிய குழுவினருக்கு என் அன்பு" என குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளியான படத்தின் புகைப்படத்தை, சமந்தாவின் திருமண நாளில் ஏன் பகிர வேண்டும் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். சமந்தா ரசிகர்கள் இதனால் கோபமடைந்து, "சமந்தாவின் திருமணம் நாக சைதன்யாவுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது" என பதிவுகள் செய்து வருகின்றனர்.

இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை உருவாக்கியுள்ளது.சமந்தாவின் ரசிகர்கள், அவரது வாழ்க்கையில் ஏற்பட்ட வலிகளை கடந்து புதிய தொடக்கத்தை கொண்டாடி வருகின்றனர். திரையுலகில் இந்த திருமணம் பலருக்கும் உத்வேகமாக அமைந்துள்ளது.

Summary in English : South Indian actress Samantha Ruth Prabhu married director Raj Nidimoru on December 1, 2025, at Isha Yoga Center in Coimbatore, marking both's second marriage. On the same day, ex-husband Naga Chaitanya's Instagram post of a 'Dhootha' film photo went viral, sparking controversy and anger among Samantha's fans who interpret it as his emotional response.