திருப்பத்தூர், டிசம்பர் 24 : திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி அருகே உள்ள தோக்கியம் பகுதியைச் சேர்ந்த 38 வயது மதி என்பவர், கள்ளக்காதலி பேச மறுத்ததால் ஆத்திரமடைந்து, தங்களது உல்லாச தருணங்களின் புகைப்படங்களையும் வீடியோக்களையும் சமூக வலைதளங்களில் பதிவேற்றுவேன் என மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த பெண் போலீசில் புகார் அளித்ததையடுத்து, மதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தோக்கியம் பகுதியைச் சேர்ந்த மாணிக்கம் மகன் மதி (38)

ஆனால், மனைவி கணவனை விட்டு பிரிந்து 7 மாதங்களாக வாழ்ந்து வருகிறார். இதே பகுதியைச் சேர்ந்த நசிபா (30) என்பவருக்கும் மதிக்கும் கடந்த 10 ஆண்டுகளாக பழக்கம் இருந்து வந்தது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறி, அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்தனர்.
இந்நிலையில், நசிபா வேறொரு நபருடன் பழகத் தொடங்கியதால், மதியிடம் கடந்த மூன்று மாதங்களாக பேசுவதை நிறுத்தியுள்ளார். இதனால் கொதிப்படைந்த மதி, "நீ என்னுடன் பேசவில்லை என்றால் கொலை செய்து விடுவேன்" எனக் கூறி, தோக்கியம் பகுதியில் கத்தியுடன் சுற்றித் திரிந்தார்.
பின்னர், நசிபாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, "நாம் தனிமையில் உல்லாசமாக இருந்த புகைப்படங்களையும் வீடியோக்களையும் இன்ஸ்டாகிராம், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் பதிவேற்றி விடுவேன்" என மிரட்டியுள்ளார்.
இந்த மிரட்டலால் பீதியடைந்த நசிபா, உடனடியாக கந்திலி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, மதியை கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கள்ளக்காதலி பேச மறுத்ததால் உல்லாச வீடியோக்களை வெளியிடுவேன் என மிரட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Summary : In Tirupattur, Tamil Nadu, a 38-year-old married man named Mathi was arrested for threatening his secret lover, Nasiba (30), after she refused to speak to him for three months. Enraged, he threatened to upload their intimate photos and videos on social media and even roamed with a knife. Following her police complaint, he was arrested and jailed.


