திருமணம் தாண்டிய உறவு.. கள்ளக்காதலன் சொல்ல ஒரு வார்த்தை.. மிரண்டு போன 30 வயது காதலி..
திருப்பத்தூர், டிசம்பர் 24 : திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி அருகே உள்ள தோக்கியம் பகுதியைச் சேர்ந்த 38 வயது மதி என்பவர், கள்ளக்காதலி பேச மறுத்ததால் ஆத்திரமடைந்து, தங்களது உல்லாச தருணங்களின் புகைப்படங்களையும் வீடியோக்களையும் சமூக வலைதளங்களில் பதிவேற்றுவேன் என மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பெண் போலீசில் புகார் அளித்ததையடுத்து, மதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தோக்கியம் பகுதியைச் சேர்ந்த மாணிக்கம் மகன் மதி (38) ஆனால், மனைவி கணவனை விட்டு பிரிந்து 7 மாதங்களாக வாழ்ந்து வருகிறார். இதே பகுதியைச் சேர்ந்த நசிபா (30) என்பவருக்கும் மதிக்கும் கடந்த 10 ஆண்டுகளாக பழக்கம் இருந்து வந்தது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறி, அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்தனர். இந்நிலையில், நசிபா வேறொரு நபருடன் பழகத் தொடங்கியதால், மதியிடம் கடந்த மூன்று மாதங்களாக பேசுவதை நிறுத்தியுள்ளார். இதனால் கொதிப்படைந்த மதி, "நீ என்னுடன் பேசவில்லை என்றால் கொலை செய்து விடுவேன்" எனக் கூறி, தோக்கியம் பகுதியில் கத்தியுடன் சுற்றித் திரிந்தார். பின்னர், ...