கணவரின் தம்பியுடன் உல்லாசம்.. மார்பின் மீது அந்த விஷயம்.. சுவற்றில் தெறித்த ரத்தம்.. சிதைந்த உள்ளுறுப்புகள்.. குலை நடுங்க வைக்கும் கொடூரம்...

நெய்யாற்றின்கரை (திருவனந்தபுரம்) : கடந்த ஆண்டு தொடுப்புழாவில் தாயின் நண்பரால் கொடூரமாக துன்புறுத்தப்பட்டு இறந்த இளம் சிறுவனின் வழக்கு, இப்போது குழந்தையின் இறந்த தந்தை தொடர்பாக புதிய திருப்பத்தை எடுத்துள்ளது.

குழந்தையின் தந்தையான மணக்காடு கள்ளட்டுமுக்கு பகுதியைச் சேர்ந்த பி.ஆர். பிஜு (38) மரணம் தொடர்பாக சந்தேகம் எழுந்துள்ளது. இளைய குழந்தையின் வாக்குமூலத்தின் அடிப்படையில், கிரைம் பிரான்ச் பிஜுவின் உடலை தோண்டி எடுத்து மறு பிரேத பரிசோதனை நடத்தியது.

பிஜு மரணமடைந்த சிறிது காலத்திலேயே, அவரது மூத்த மகன் ஆர்யன் (7) தாயின் உறவினரும் நண்பருமான அருண் ஆனந்தால் கொடூரமாக துன்புறுத்தப்பட்டான். அடித்து கொடுமை செய்து மார்பின் மீது காலை வைத்து மிதித்து, அப்படியே தூக்கி சுவற்றில் அடித்தத்தில் ரத்தம் தெறித்து மயங்கி விழுந்தான். 

மருத்துவமனையில் ஆர்யனை சேர்த்து தீவிர சிகிச்சை கொடுத்தும், வெளிக்காயங்கள் மட்டுமல்ல, உள்ளுறுப்புகள் சிதைந்து போயுள்ள காரணத்தால் மரணமடைந்தார் சிறுவன் ஆர்யன். இதனை தொடர்ந்து, தாக்குதல் நடத்திய அஞ்சனாவின் கள்ளக்காதலனும், பிஜுவின் தம்பியுமான அருண் ஆனந்த் இந்த வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார்.

இந்நிலையில், பிஜுவின் மரணமும் கொலையாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. மணக்காடு பகுதியைச் சேர்ந்த என்.டி. பாபுவுக்கும் ரமணிக்கும் பிறந்த பி.ஆர். பிஜு, 2018 மே 23-ம் தேதி தொடுப்புழா கரிமண்ணூர் வீட்டில் மரணமடைந்தார்.

அலுவா டெக்னோபார்க்கில் புரோகிராமராக பணியாற்றிய பிஜு, மனைவி அஞ்சனா தினேஷ் மற்றும் குழந்தைகளான ஆர்யன், அருஷுடன் கரிமண்ணூரில் வசித்து வந்தார். மரணமடைந்த நாளில் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கும் முன்பே பிஜு இறந்தார்.

தொடுப்புழா தாலுக் மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டு, உடல் நெய்யாற்றின்கரையில் அடக்கம் செய்யப்பட்டது. பிஜுவின் இளைய மகன் அருஷ் (5) அளித்த வாக்குமூலத்தில், மரணமடைந்த நாளில் தாய் தந்தைக்கு ஒரு கிளாஸ் பால் கொடுத்ததாகவும், அதன் பிறகே நெஞ்சுவலி ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார்.

இதனால், பாலில் விஷம் கலந்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் உறவினர்கள் மத்தியில் எழுந்தது. இதையடுத்து, அரங்கமுகள் பகுதியில் உள்ள கல்லறையை தோண்டி எடுத்து உடல் மீட்கப்பட்டது. பிஜு மரணமடைந்த பிறகு, மனைவி அஞ்சனாவும் இரு குழந்தைகளும் உறவினர் அருண் ஆனந்துடன் தங்கியிருந்தனர்.

பின்னர், 2019 மார்ச் 27-ம் தேதி தொடுப்புழா வீட்டில் அருண் ஆனந்த் ஆர்யனை சுவற்றில் மோதி கொடூரமாக தாக்கினார். குழந்தை படுகாயமடைந்து ஏப்ரல் 6-ம் தேதி உயிரிழந்தது. கரிமண்ணூர் போலீசார் அருண் ஆனந்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஆதாரங்களை அழித்த குற்றச்சாட்டில் அஞ்சனாவும் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். பிஜுவின் பெற்றோர் முதலமைச்சருக்கும் டிஜிபிக்கும் புகார் அளித்து அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்தனர்.

இதையடுத்து வழக்கு கிரைம் பிராஞ்சிடம் ஒப்படைக்கப்பட்டு, மறு பிரேத பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டது. விசாரணைக் குழு, மேலும் சோதனைகள் நடத்திய பிறகே மரண காரணம் தெரியவரும் என்று தெரிவித்துள்ளது.

தற்போது வரை, மனைவி அஞ்சனா சுதந்திரமாக வெளியே தான் சுற்றிக்கொண்டிருக்கிறார்.

Summary in English : In Thodupuzha, Kerala, the 2019 torture death of 7-year-old Aryan by his mother's friend Arun Anand has led to suspicions over the 2018 death of his father, B R Biju. Based on statements from younger son Arush, Crime Branch exhumed Biju's body for re-postmortem, probing possible poisoning.