தெலங்கானா மாநிலம், நாகர்கர்னூல் மாவட்டத்தின் அச்சம்பேட் நகரில் உள்ள மருதி நகர் பகுதியில், அரசு பள்ளி ஆசிரியர்களான மூவர் சம்பந்தப்பட்ட ஒரு கொடூரமான கொலை சம்பவம் நடந்துள்ளது. இது ஒரு கள்ளக்காதல் உறவால் ஏற்பட்ட துயரமான முடிவு.
லக்ஷ்மன் நாயக் என்ற 38 வயது ஆசிரியர், தனது மனைவி பத்மா நாயக் மற்றும் அவரது கள்ளக்காதலன் ரத்லவத் கோபி ஆகியோரால் கொல்லப்பட்டார். மூவரும் அரசு பள்ளிகளில் ஆசிரியர்களாக பணியாற்றி வந்தனர். பத்மா மற்றும் கோபி ஆகியோர் கடந்த ஒரு வருடமாக தகாத உறவில் இருந்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கதை இப்படி தொடங்குகிறது...
நவம்பர் 24 ஆம் தேதி இரவு. லக்ஷ்மன் நாயக் வீட்டுக்கு குடித்துவிட்டு வந்தார். வழக்கம்போல், மனைவி பத்மாவுடன் சிறு தகராறு ஏற்பட்டது. லக்ஷ்மன் மது அருந்திய நிலையில் தூங்கிவிட்டார். ஆனால் பத்மாவுக்கு இது ஒரு வாய்ப்பாகத் தெரிந்தது. தனது கள்ளக்காதலன் கோபிக்கு உடனடியாக போன் செய்து, "புருஷன் மட்டையாகிட்டான்.. சீக்கிரமா வா.." என்று அழைத்தார்.
கோபி விரைவாக வீட்டுக்கு வந்தார். இருவரும் சேர்ந்து, லக்ஷ்மனை ஒரு பெண்ணின் ஸ்கார்ப் (துப்பட்டா) கொண்டு கழுத்தை இறுக்கி மூச்சுத் திணறடித்து கொலை செய்தனர். லக்ஷ்மன் தடுக்க முயன்ற போதும், மது போதையில் இருந்ததால் எதிர்ப்பு தெரிவிக்க முடியவில்லை. கொலை முடிந்ததும், கணவரின் சடலத்தின் மீது இருவரும் எச்சில் துப்பி அசிங்கப்படுத்தியுள்ளனர். கடைசியாக, அவர்கள் உடலை படுக்கையில் வைத்து, இயற்கையான மரணம் போல் காட்ட முயன்றனர்.
மறுநாள் காலை, பத்மா பள்ளிக்கு சென்றார். மதியம் வீட்டுக்கு போன் செய்து பதில் இல்லை என்று நாடகமாடினார். வீட்டு உரிமையாளரை அழைத்து பார்க்கச் சொன்னார். உரிமையாளர் சென்று பார்த்த போது லக்ஷ்மன் படுக்கையில் இறந்து கிடந்தார். பத்மா வீட்டுக்கு வந்து, "இரவு குடித்துவிட்டு வந்தார், தூங்கினார். இப்போது எழுந்திருக்கவில்லை. இதய நோயால் இறந்திருக்கலாம்" என்று கண்ணீர் வடித்து நாடகமாடினார்.
ஆனால், லக்ஷ்மனின் குடும்பத்தினர் சந்தேகம் அடைந்து போலீசில் புகார் அளித்தனர். சந்தேக மரணம் என்று வழக்கு பதிவு செய்யப்பட்டது. உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. அறிக்கையில், " இதயத்தில் எந்த பிரச்சனையும் இல்லை, கழுத்து நெறிக்கப்பட்டு மூச்சுத் திணறி உயிரிழந்துள்ளார்" என்பதும், சடலத்தின் மீது இருவரின் எச்சில் இருப்பதும் தெரியவந்தது.
போலீசார் பத்மாவின் போன் அழைப்புகளை சோதித்தனர். அடிக்கடி கோபியுடன் தொடர்பில் இருந்தது தெரிந்தது. இருவரையும் காவலில் எடுத்து விசாரித்தனர். வாட்ஸ்அப் செய்திகளை ஆராய்ந்த போது, கொலை திட்டம் பற்றிய தடயங்கள் கிடைத்தன.லக்ஷ்மன் சடலத்தின் மீது இருந்த இருவேறு நபர்களின் எச்சில் மாதிரியுடன் பத்மா மற்றும் கோபியின் எச்சில் மாதிரிகள் ஒத்துப்போகின்றன. காவல் துறை கையில் அசைக்க முடியாத ஆதாரம்.
கடும் விசாரணை, தப்பிக்கவே முடியாது, லக்ஷ்மன் உடலில் மனைவி பத்மாவின் எச்சில் பற்றி பிரச்சனை இல்லை. ஆனால், உன்னுடைய எச்சில் எப்படி வந்தது..? கேள்வியில் மிரண்டு போனான் கோபி.
ஒரு கட்டத்தில், பத்மா மற்றும் கோபி இருவரும் உடைந்து போனார்கள். "எங்கள் உறவுக்கு லக்ஷ்மன் தடையாக இருந்தார். அதனால் கொன்றோம்" என்று ஒப்புக்கொண்டனர்.
டிசம்பர் 25 அன்று இருவரும் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இப்போது அவர்கள் நீதிமன்ற காவலில் உள்ளனர்.
இந்த சம்பவம் அச்சம்பேட் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசு ஆசிரியர்களே இப்படி ஒரு கொடூர செயலில் ஈடுபட்டது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கள்ளக்காதல் எப்படி உயிரையே பறிக்கும் என்பதற்கு இது ஒரு உதாரணம்.
Summary in English : In Nagarkurnool's Achampet, Telangana, government school teachers Padma Naik and her lover Rathlavath Gopi allegedly murdered her husband Laxman Naik, 38, by suffocation on November 24. The duo conspired as Laxman was an obstacle to their affair. Police arrested them after postmortem revealed suffocation and digital evidence confirmed the plot.

