கோவை, டிசம்பர் 26 : அசாம் மாநிலம் நாகன் மாவட்டத்தைச் சேர்ந்த விதான் ஹசாரிகா - ஜிந்தி தம்பதியினர் கோவை கணபதி சின்னசாமி நகர் 3வது வீதியில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். விதான் ஹசாரிகா அத்திப்பாளையம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பிளம்பராக பணியாற்றி வந்தார்.
விதான் ஹசாரிகாவுக்கு வடமாநில பெண்களுடன் தொடர்பு இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அவர் அடிக்கடி வீடியோ கால் மூலம் அப்பெண்களுடன் ஆட்சேபகரமான விதத்தில் பேசி வந்ததாக தெரிகிறது. இதனை அறிந்த மனைவி ஜிந்தி, கணவரின் செல்போனை சோதனை செய்து கண்டித்துள்ளார்.

ஆனால், விதான் தனது தொடர்புகளை கைவிடவில்லை. சம்பவ தினத்தில் ஜிந்தி வெளியே சென்றிருந்த போது, விதான் ஹசாரிகா வீட்டுக்கு ஒரு இளம்பெண்ணை அழைத்து வந்து தனிமையில் இருந்ததாக கூறப்படுகிறது. திரும்பி வந்த ஜிந்தி இதனை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
அப்போது அந்த இளம்பெண் வீட்டை விட்டு ஓடிவிட்டார். இதனால் கணவன் - மனைவி இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. விதான் தனது மனைவியை சொந்த ஊரான அசாமுக்கு போகுமாறு மிரட்டியதாக தெரிகிறது. அக்கம்பக்கத்தினர் வந்து இருவரையும் சமாதானப்படுத்தினர்.
பின்னர் வேலை முடிந்து மது அருந்திய நிலையில் வீட்டுக்கு வந்த விதான் அறையில் தூங்கச் சென்றார். கோபத்தில் இருந்த ஜிந்தி சமையலறையில் இருந்து கத்தியை எடுத்து வந்து, கணவரின் அந்தரங்க உறுப்பை அறுத்து வீசியதாக கூறப்படுகிறது.
கடும் வலியால் கதறிய விதான் ஹசாரிகாவை அறையில் பூட்டிவிட்டு ஜிந்தி சென்றுவிட்டார். அறையில் இருந்து வெளியே வர முடியாமல் தவித்த விதான் கூச்சலிட்டு அக்கம்பக்கத்தினரை உதவிக்கு அழைத்தார். சத்தம் கேட்டு வந்த அண்டை வீட்டார்கள் கதவை உடைத்து அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து ஜிந்தியை கைது செய்தனர். பல பெண்களுடன் தொடர்பில் இருந்த கணவருக்கு மனைவி அளித்த இந்த 'நூதன தண்டனை' கோவை முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Summary in English : In Coimbatore, Jindi from Assam severed her husband Vidhan Hazarika's private part with a knife after catching him with another woman and discovering his affairs with multiple women. The intoxicated husband was hospitalized in critical condition, and Jindi was arrested by police. The incident has caused shock in the area.

