மும்பையின் பிரபல நடிகர் ஒருவர் 13 உடற்பயிற்சி கூடங்களை (ஜிம்கள்) நடத்தி வந்தார். அவரது திரைப்பட வாழ்க்கைக்கு இணையாக, உடற்பயிற்சி மற்றும் உடல் நலனில் அவர் கொண்டிருந்த ஆர்வம் பலரையும் ஈர்த்தது.
விக்ரம் மாலிக் -ரேகா மாலிக் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) உடற்பயிற்சியில் அதிக ஈடுபாடு கொண்ட தம்பதியினர். ஜிம் வைத்திருக்கும் நடிகரின் குட் புக்கில் இடம் பெற்றவர்கள்.

இந்த தம்பதியினருடனான நெருக்கமான உறவு மற்றும் பொதுவான ஆர்வத்தால், நடிகர் தனது 13 ஜிம்களையும் நிர்வகிக்கும் பொறுப்பை ரேகாவுக்கும் அவரது கணவர் விக்ரமுக்கும் கொடுத்த்ஹார். விக்ரம், உடற்பயிற்சி பயிற்சியாளராகவும், ஜிம்களின் தினசரி நிர்வாகத்தில் ஈடுபட்டவராகவும் இருந்தார்.
ஆனால், இந்த அமைதியான வெளிப்பார்வைக்கு பின்னால் ஒரு இருண்ட ரகசியம் மறைந்திருந்தது. ரேகா, ஜிம்களுக்கு தவறாமல் வரும் திருமணமான ஆண்களுடன் நெருக்கமாக பழகத் தொடங்கினார்.
உடற்பயிற்சி பயிற்சி என்ற பெயரில் உரையாடல்கள் ஆரம்பமாகி, பின்னர் அந்தரங்க உரையாடல்களாகவும், நெருங்கிய தருணங்களாகவும் மாறின. இந்த தருணங்களை ரேகா தனது செல்பேசியில் புகைப்படங்களாகவும், வீடியோக்களாகவும் பதிவு செய்து வைத்திருந்தார்.
இதை ஒரு தொழிலாக மாற்றிய ரேகா, அந்த ஆண்களை மிரட்டத் தொடங்கினார். "இந்த புகைப்படங்கள் உங்கள் மனைவியிடம் சென்றால் என்ன ஆகும்?" என்று கேட்டு, பணம் கேட்டார். ஆனால், ஒரே நபரிடம் அதிகம் கேட்டால் பிரச்சினை என்பதால், ஒருவருக்கு அதிகபட்சம் 2 லட்ச ரூபாய் வரை மட்டுமே வசூலித்தார்.
13 ஜிம்களிலும் இந்த முறை தொடர்ந்தது. ஒரே நாளில் கூட 18 பேர் வரை இந்த வலையில் சிக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பணம் கொடுத்த பிறகு, அவர்கள் ஜிம்முக்கு வருவதே நின்றுவிடும்; வேறு ஜிம்முக்கு மாறிவிடுவார்கள். கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் இது நீடித்தது. கோடிகளில் சம்பாதித்து செட்டிலாக தொடங்கினர் விக்ரம்-ரேகா தம்பதியினர்.
இந்த சங்கிலியை உடைத்தவர் ஒரு வாடிக்கையாளர் – ராஜேஷ் குமார். அவரது மனைவியுடனான உறவு ஏற்கனவே மோசமடைந்த நிலையில், விவாகரத்து நோக்கத்தில் இருந்தார். ரேகா அவரை மிரட்டியபோது, ராஜேஷ் அதிர்ச்சியடையவில்லை. "என் மனைவியிடம் காட்டினாலும் எனக்கு பிரச்சினை இல்லை. இது எனக்கு விவாகரத்துக்கு உதவியாகவே இருக்கும்" என்று கூறினார்.
பேச்சுவார்த்தையின்போது, ரேகாவின் செல்பேசியைப் பிடுங்கிய ராஜேஷ், அதில் பல ஆண்களுடனான நெருக்கமான புகைப்படங்களைப் பார்த்து அதிர்ந்தார். இது ஒரு சிறிய சம்பவம் இல்லை; ஒரு பெரிய தொழிலாக நடந்து கொண்டிருந்தது என்பதை உணர்ந்தார்.
இந்த நடிகரின் ஜிம்மில் இப்படியொரு கேவலாமா..? போலீஸ் வேண்டாம் நடிகர் நல்ல மனுஷன் என அந்த நடிகரின் மீது மிகப்பெரிய அபிப்ராயம் கொண்டிருந்தார் ராஜேஷ்.
உடனடியாக அவர் நடிகரிடம் சென்று முழு விவரங்களையும் தெரிவித்தார். போலீசில் புகார் கொடுத்தால் பெயர் கெட்டுவிடும் என்பதால், நடிகர் உடனடியாக ரேகாவையும் விக்ரமையும் வேலையிலிருந்து நீக்கினார்.
மேலும், பாதிக்கப்பட்டவர்களின் பட்டியலை தயாரித்து, அவர்களுக்கு இழந்த பணத்தை திருப்பிக் கொடுத்து. மன்னிச்சுடுங்க.. எனக்கு தெரியாம இது நடந்துடுச்சு என கூறினார். இது அவரது நேர்மையையும், பொறுப்புணர்வையும் காட்டுகிறது.
ஆனால், கதை இங்கு முடியவில்லை. பணம் வராத நிலையில், விக்ரம் தனது மனைவி ரேகாவை விவாகரத்து செய்ய முடிவு செய்தார். "நீ பலருடன் நெருக்கமாக இருந்திருக்கிறாய், உன் நடத்தை சரியில்லை" என்று கூறி, விவாகரத்து மனு தாக்கல் செய்தார்.
இதற்கு பதிலடியாக, ரேகா அதிரடியாக திரும்பினார். "என்னை இந்த தொழிலுக்குள் தள்ளியது என் கணவர்தான். அவருடன் சேர்ந்துதான் இதைச் செய்தேன்" என்று கூறி, விக்ரம் மீது புகார் அளித்தார். இந்த புகாருக்கு பிறகு, இந்த கொடூர சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இப்படி, மும்பையின் உயர்தட்டு ஜிம் உலகில் நடந்த இந்த அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. நடிகரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படாமல் அர்ஜுன் சமாளித்தாலும், தம்பதியரின் உறவு சிதறுண்டது.
இது பணம், நம்பிக்கைத் துரோகம், மிரட்டல் ஆகியவற்றின் கொடூரமான கலவையாக அமைந்தது – மும்பையின் பிரகாசமான உடற்பயிற்சி உலகில் மறைந்திருந்த இருளின் ஒரு கதை.
ஆக, நண்பர்களே, வம்படியாக பெண்கள் உங்களிடம் வந்து பேசி, நெருக்கமாக பழக ஆரம்பித்தால் தள்ளி நில்லு என்று விலக்கியே வையுங்கள். ஒருவேளை, அது, இந்த ரேகா போன்ற பெண்ணாக கூட இருக்கலாம்!
Summary : A Mumbai actor owning 13 gyms entrusted their management to a couple. The wife developed close relations with married male members, captured intimate moments, and extorted money up to two lakhs per person. One victim informed the actor, leading to the couple's dismissal, repayment to victims, and eventual divorce proceedings between the couple.

