“நீ இன்னும் வயசு பொண்ணு மாதிரி தான் இருக்க” பெற்ற தாயுடன் மகன் செய்த அசிங்கம்.. துடிதுடித்து இறந்த 40 வயது பெண்!

ஹரியானா மாநிலம், யமுனா நகர் மாவட்டம், ஷாம்பூர் (Shyampur) கிராமத்தில் அதிர்ச்சி தரும் கொலை சம்பவம் நிகழ்ந்துள்ளது. கிராமத்தின் சர்பஞ்ச் (கிராமத் தலைவர்) ஜஸ்பீர் சிங்-ன் மனைவியும், 45 வயதான பல்ஜிந்தர் கவுர் அவர்களை அவர்களது சொந்த மகனே கொலை செய்துள்ளான்.

இந்த கொலைக்கு காரணம், மகனின் காதல் திருமணத்திற்கு தாய் எதிர்ப்பு தெரிவித்தது என போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

பல்ஜிந்தர் கவுர் மற்றும் ஜஸ்பீர் சிங் தம்பதிக்கு கோமிட் ரதி (Gomit Rathi) என்ற 25 வயது மகன் உள்ளார். படிப்பை முடித்த பின்னர் வேலைக்கு செல்லாமல் நண்பர்களுடன் சேர்ந்து ஊர் சுற்றி வந்த கோமிட், அக்கம் பக்கத்தினருடன் அடிக்கடி தேவையற்ற பிரச்சனைகளில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதனால் தாய் பல்ஜிந்தர் கவுர் மகன் மீது கண்டிப்பாக நடந்து கொண்டார். இதனால் தாய்-மகன் இடையே அடிக்கடி வாக்குவாதங்கள் ஏற்பட்டன.

கோமிட் ரதி அருகிலுள்ள கிராமத்தை சேர்ந்த ஒரு பெண்ணை 4 ஆண்டுகளாக காதலித்து வந்தான். ஆனால் தாய் இந்த உறவை ஏற்க மறுத்து, திருமணத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தார்.

இதனால் ஆத்திரமடைந்த கோமிட், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோரால் இங்கிலாந்துக்கு (England) வேலைக்கு அனுப்பப்பட்டார். ஆனால் அங்கிருந்தபடியே காதலைத் தொடர்ந்து, தாயிடம் திருமணத்திற்கு அழுத்தம் கொடுத்து வந்தான்.

கொலை திட்டம் மற்றும் செயல்பாடு:

கடந்த டிசம்பர் 18, 2025 அன்று கோமிட் ரதி குடும்பத்தினருக்கு தெரியாமல் இங்கிலாந்தில் இருந்து திரும்பி வந்தான். தனது நண்பன் பங்கஜ் (Pankaj) உதவியுடன் கிராமத்தில் உள்ள வீட்டின் காளை கொட்டகத்தில் (cattle shed) 6 நாட்கள் மறைந்திருந்தான்.

டிசம்பர் 24, 2025 அன்று இரவு, தாய் பல்ஜிந்தர் கவுர் வளர்ப்பு பிராணிகளுக்கு தீனி போட வந்தபோது, "என்னை லவ் பண்ண கூடாதுன்னு எதுக்கு சொல்லுற, நீ இன்னும் இளமையா தானே இருக்க.. நீயும் யாரையாவது லவ் பண்ணு.. நான் தலையிட மாட்டேன்.. என் வாழ்க்கையில நீ தலையிடாதே.." என திட்ட கோமிட் ரதி திடீரென தாக்கியதாக அக்கம் பக்கத்தினர் தெரிவிக்கின்றனர்.

இதனை தொடர்ந்து, பெற்ற தாய் என்றும் பார்க்காமல் முதலில் குச்சியால் (stick) அடித்து, பின்னர் கழுத்தை நெரித்து கொலை செய்தான். கொலையை விபத்து போல காட்டுவதற்காக உடலை வீட்டின் தண்ணீர் தொட்டியில் (water tank) தலைகீழாக போட்டுவிட்டு தப்பினான்.

அடுத்த நாள் காலை தொட்டியில் தாயின் உடல் தலைகீழாக தொங்கிக் கொண்டிருப்பதை பார்த்த கிராம மக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். பிரேத பரிசோதனையில் கழுத்து நெரிப்பு மற்றும் தலையில் ஏற்பட்ட காயங்கள் மூலம் கொலை என்பது உறுதியானது.

விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்:

சிசிடிவி காட்சிகள், தொழில்நுட்ப ஆதாரங்கள் மற்றும் சந்தேகத்தின் பேரில் கோமிட் ரதியை கைது செய்து விசாரித்த போலீசார், கொலைக்கு அவனே முக்கிய காரணம் என்பதை வெளிக்கொணர்ந்தனர். அவனது நண்பன் பங்கஜும் உடந்தையாக இருந்தது தெரியவந்தது.

யமுனா நகர் போலீஸ் குற்றப்பிரிவு (CIA-II) இந்த வழக்கை முழுமையாக விசாரித்து, இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது. தற்போது இருவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் கிராம மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் மகனே தாயை கொலை செய்த சம்பவம், குடும்ப உறவுகளில் ஏற்படும் மோதல்களின் கொடூர விளைவுகளை மீண்டும் நினைவூட்டுகிறது.

Summary : In Haryana's Yamunanagar district, a 25-year-old son returned secretly from England and caused the death of his 45-year-old mother by pushing her into a water tank after a long-standing dispute over his inter-caste love marriage. Police investigation led to his arrest along with an accomplice.