“நீ இன்னும் வயசு பொண்ணு மாதிரி தான் இருக்க” பெற்ற தாயுடன் மகன் செய்த அசிங்கம்.. துடிதுடித்து இறந்த 40 வயது பெண்!
ஹரியானா மாநிலம், யமுனா நகர் மாவட்டம், ஷாம்பூர் (Shyampur) கிராமத்தில் அதிர்ச்சி தரும் கொலை சம்பவம் நிகழ்ந்துள்ளது. கிராமத்தின் சர்பஞ்ச் (கிராமத் தலைவர்) ஜஸ்பீர் சிங்-ன் மனைவியும், 45 வயதான பல்ஜிந்தர் கவுர் அவர்களை அவர்களது சொந்த மகனே கொலை செய்துள்ளான். இந்த கொலைக்கு காரணம், மகனின் காதல் திருமணத்திற்கு தாய் எதிர்ப்பு தெரிவித்தது என போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. பல்ஜிந்தர் கவுர் மற்றும் ஜஸ்பீர் சிங் தம்பதிக்கு கோமிட் ரதி (Gomit Rathi) என்ற 25 வயது மகன் உள்ளார். படிப்பை முடித்த பின்னர் வேலைக்கு செல்லாமல் நண்பர்களுடன் சேர்ந்து ஊர் சுற்றி வந்த கோமிட், அக்கம் பக்கத்தினருடன் அடிக்கடி தேவையற்ற பிரச்சனைகளில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் தாய் பல்ஜிந்தர் கவுர் மகன் மீது கண்டிப்பாக நடந்து கொண்டார். இதனால் தாய்-மகன் இடையே அடிக்கடி வாக்குவாதங்கள் ஏற்பட்டன. கோமிட் ரதி அருகிலுள்ள கிராமத்தை சேர்ந்த ஒரு பெண்ணை 4 ஆண்டுகளாக காதலித்து வந்தான். ஆனால் தாய் இந்த உறவை ஏற்க மறுத்து, திருமணத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தார். இதனால் ஆத்திரமடைந்த கோமிட், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோரால் இங...