படுக்கை முழுதும் ரத்தம்! லாட்ஜில் இருந்து உள்ளாடை கூட அணியாமல் ஓடிய மாணவி! விசாரணையில் பகீர்!

திருப்பதி புறநகரைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர், இன்ஸ்டாகிராம் வழியாக அறிமுகமான 22 வயது கல்லூரி மாணவரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் திருப்பதி புறநகர்ப் பகுதியைச் சேர்ந்த இந்த இளம்பெண், பள்ளிப்படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டு வீட்டிலிருந்து வந்துள்ளார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் மூலம் கடப்பா மாவட்டம் பட்வெல் (Badvel) பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞருடன் (கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தவர்) அறிமுகமாகியுள்ளார். ஆரம்பத்தில் நட்பாகத் தொடங்கிய உரையாடல், பின்னர் நெருக்கமாக மாறியது.

இந்நிலையில், இளைஞர் நேரில் சந்திக்கலாம் எனக் கூற, நம்பிக்கையில் அந்தப் பெண் கடந்த ஜனவரி 23-ஆம் தேதி தனியாக திருப்பதிக்குச் சென்றுள்ளார். மாலை நேரத்தில் இருவரும் சந்தித்தனர்.

அருகிலுள்ள ஹோட்டலுக்கு (ராமச்சந்திரா நகரில் உள்ள டவுன் ஹவுஸ் ஹோட்டல் அல்லது ஹோம்ஸ்டே அறை எண் 114) செல்லலாம் என இளைஞர் வற்புறுத்த, முதலில் மறுத்த பெண்ணை கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.

அறைக்குள் சிறிது நேரம் பேசிய பின்னர், திடீரென அந்த இளைஞர் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அடுத்தடுத்த கட்டத்திற்கு முன்னேறியுள்ளார் அந்த இளைஞர். ஆனால், திடீரென அந்த பெண்ணின் தனியுருப்பில் இருந்து ரத்தம் கசிய ஆரம்பித்துள்ளது. இதனால், அதிர்ச்சியடைந்த அந்த பெண் உள்ளாடையை கூட அணியாமல் தப்பித்து வீடு திரும்பி, நடந்ததை தாயாரிடம் தெரிவித்துள்ளார்.

தாயார் உடனடியாக அலிபிரி (Alipiri) காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பாதிக்கப்பட்ட பெண் ருயா மருத்துவமனையில் (Ruia Hospital) சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அலிபிரி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராம்கிஷோர் வழக்கு பதிவு செய்து விசாரணை தொடங்கினார். ஹோட்டல் அறைக்குச் சென்று தடயங்களைச் சேகரித்தனர்.

அங்கே, படுக்கையில் ரத்தக்கறை இருப்பதையும், இளம்பெண்ணின் உள்ளாடை ஒன்று கிடப்பதையும் கண்டு அதிர்ந்தனர். தன்னைத் தேடுவதை அறிந்த இளைஞர் தலைமறைவான நிலையில், போலீசார் தீவிர வேட்டையாடி வருகின்றனர். (சில அறிக்கைகளின்படி, அவர் ராமச்சந்திரா நகர் பகுதியில் தப்ப முயன்றபோது கைது செய்யப்பட்டதாகவும் தகவல்கள் உள்ளன.)

இளைஞரின் செல்போன் ஆய்வில், அவர் தன்னைவிட குறைந்த வயதுடைய பெண்களை குறிவைத்து இன்ஸ்டாகிராமில் ஈர்க்கும் வகையில் செயல்பட்டு வந்ததும், பலருடன் ஆபாச சாட்டிங் செய்ததும் தெரியவந்துள்ளது.

இதனால், இந்தப் பெண் போல வேறு யாரேனும் பாதிக்கப்பட்டுள்ளனரா என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவரது போனில் ஆதாரங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக இன்ஸ்பெக்டர் ராம்கிஷோர் தெரிவித்துள்ளார்.

இன்ஸ்டாகிராமில் வெறும் 10 நாட்கள் பழக்கத்திலேயே நேரில் சந்தித்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளான இளம்பெண்ணின் இந்த சம்பவம், சமூக வலைதளங்களில் அந்நியர்களுடன் அதிக நெருக்கம் கொள்ளும் ஆபத்தை மீண்டும் எடுத்துக்காட்டியுள்ளது.

முதல்முறை உறவு கொள்ளும் போது ரத்தம் கசியும் என்பது கூட அறிந்திடாத வயதில், ஆண் நண்பருடன் லாட்ஜ் அறைக்கு செல்லும் அளவுக்கு எங்கிருந்து இந்த பெண்ணுக்கு தைரியம் வந்தது. அல்லது, அறியாமையை, வெகுளித்தனத்தை பயன்படுத்தி வேட்டையாடி விட முயன்றுள்ளான அந்த இளைஞன்.? என்ற கேள்விக்கு விடையை நீங்களே சொல்லுங்கள்.

இது தொடர்பான விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. பாதிக்கப்பட்ட இளம்பெண்ணுக்கு உரிய சிகிச்சையும் ஆதரவும் வழங்கப்பட வேண்டும் என்பதுடன், இத்தகைய குற்றங்களைத் தடுக்க சமூக விழிப்புணர்வு அவசியம் என்பது இச்சம்பவத்தின் மூலம் தெளிவாகிறது.

Summary : A 19-year-old girl from Tirupati outskirts met a 22-year-old college student from Kadapa district through Instagram. After brief online interaction, she went to meet him in Tirupati on January 23. He took her to a hotel room where an incident occurred. She returned home, informed her mother, and a complaint was filed at Alipiri police station. The accused is absconding; investigation is ongoing.