கர்னூல் மாவட்டம், ஆந்திரப் பிரதேசம். ஜனவரி 9, 2025 அன்று மதியம் 2.30 மணியளவில், ஒரு பெண் மருத்துவர் தனது ஸ்கூட்டரில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.
அவர் ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றி வந்தார். அன்று டியூட்டி முடித்து, மதிய உணவுக்கு வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

திடீரென, ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் வேகமாக அவரது ஸ்கூட்டரை மோதினர். அவர் சாலையில் விழுந்து காயமடைந்தார். காயம் பட்டு தவித்துக் கொண்டிருந்த அவரை நோக்கி, ஒரு பெண் அருகில் வந்தாள்.
"அக்கா, உங்களுக்கு என்ன ஆச்சு? வாருங்கள், ஆட்டோவில் ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டு போகிறேன்" என்று அன்பாகக் கூறினாள். அவள் பெயர் பி. போயா வசுந்தரா (34).
ஆட்டோவில் ஏற்றும் போது, வசுந்தரா திடீரென ஒரு ஊசியை எடுத்து, அந்த மருத்துவரின் உடலில் செலுத்தினாள். அது எச்.ஐ.வி நோய்த்தொற்று உள்ள இரத்தத்தை கொண்ட ஊசியாக இருந்தது! மருத்துவர் அதிர்ச்சியில் கூக்குரலிட்டு உதவி கேட்டார். உடனே வசுந்தராவும் அவரது கூட்டாளிகளும் ஓடி மறைந்தனர்.
இது திட்டமிட்ட சதி என்பது பின்னர் தெரிய வந்தது. வசுந்தராவின் முன்னாள் காதலன், திருமணம் செய்து கொண்ட பெண் தான் இந்த பெண் மருத்துவர். என் காதலனை அபகரித்து கொண்டாயா..? வாழ்நாள் முழுவதும் நீ துன்பப்பட வேண்டும் என திட்டமிட்ட வசுந்தரா இந்த கொடூர திட்டத்தை தீட்டியிருக்கிறாள்.
வசுந்தராவுக்கு உதவியாக இருந்தவர் கொங்கே ஜோதி (40) – அடோனியில் தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றுபவர். கொங்கே ஜோதியின் இரு மகன்களும் (20 வயதுக்கு மேற்பட்டவர்கள்) இந்த சதியில் இணைந்தனர்.
முதலில், அரசு மருத்துவமனையில் எச்.ஐ.வி நோயாளிகளிடம் இருந்து "ஆராய்ச்சிக்காக" என்று கூறி இரத்த மாதிரிகளை சேகரித்தனர்.
அதை பிரிட்ஜில் சேமித்து வைத்தனர். பின்னர், சாலை விபத்து போல நடித்து மருத்துவரை தாக்க திட்டமிட்டனர்.
விபத்து நடந்து முடிந்த பிறகு, பெண் மருத்துவரின் கணவர் (வசுந்தராவின் முன்னாள் காதலன்) ஜனவரி 10 அன்று கர்னூல் III டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் விசாரணை நடத்தி, ஜனவரி 24 அன்று வசுந்தரா, ஜோதி மற்றும் அவரது இரு மகன்களை கைது செய்தனர்.
போலீசார் இந்த வழக்கை பாரதிய ந்யாய சன்ஹிதா சட்டத்தின் பிரிவுகளின் கீழ் பதிவு செய்துள்ளனர். இந்த கொடூர சதி கண்டு அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
காதல் தோல்வியால் ஏற்பட்ட பழிவாங்கல் எவ்வளவு ஆபத்தானது என்பதற்கு இது ஒரு கொடூர எடுத்துக்காட்டு!
Summary : A woman in Kurnool, unable to accept her ex-lover's marriage, conspired with three others to harm his wife, a doctor. They staged a road accident and injected her with HIV-infected blood obtained from a hospital, claiming it was for research. All four were arrested.

