Posts

Showing posts with the label doctor victim

விபத்தில் சிக்கிய பெண்! உதவி செய்வது போல நடித்து HIV ரத்தம் நிறைந்த ஊசியை ஏற்றிய பெண்! கொடூர காரணம்!

Image
கர்னூல் மாவட்டம், ஆந்திரப் பிரதேசம். ஜனவரி 9, 2025 அன்று மதியம் 2.30 மணியளவில், ஒரு பெண் மருத்துவர் தனது ஸ்கூட்டரில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அவர் ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றி வந்தார். அன்று டியூட்டி முடித்து, மதிய உணவுக்கு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். திடீரென, ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் வேகமாக அவரது ஸ்கூட்டரை மோதினர். அவர் சாலையில் விழுந்து காயமடைந்தார். காயம் பட்டு தவித்துக் கொண்டிருந்த அவரை நோக்கி, ஒரு பெண் அருகில் வந்தாள். "அக்கா, உங்களுக்கு என்ன ஆச்சு? வாருங்கள், ஆட்டோவில் ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டு போகிறேன்" என்று அன்பாகக் கூறினாள். அவள் பெயர் பி. போயா வசுந்தரா (34). ஆட்டோவில் ஏற்றும் போது, வசுந்தரா திடீரென ஒரு ஊசியை எடுத்து, அந்த மருத்துவரின் உடலில் செலுத்தினாள். அது எச்.ஐ.வி நோய்த்தொற்று உள்ள இரத்தத்தை கொண்ட ஊசியாக இருந்தது! மருத்துவர் அதிர்ச்சியில் கூக்குரலிட்டு உதவி கேட்டார். உடனே வசுந்தராவும் அவரது கூட்டாளிகளும் ஓடி மறைந்தனர். இது திட்டமிட்ட சதி என்பது பின்னர் தெரிய வந்தது. வசுந்தராவின் முன்னாள் காதலன், திரும...